Tuesday, March 8, 2016

மதிமுக மகளிர்அணி சார்பில் உலக மகளிர் தின விழா மற்றும் அரசியல் சாரா மகளிர் இணையும் விழா!

மதிமுக மகளிர்அணி சார்பில் உலக மகளிர் தின விழா மற்றும் சென்னை மண்டல அரசியல் சாரா மகளிர் இணையும் விழா சென்னை சிராஜ் மஹால் அன்னை மாரியம்மாள் அரங்கில் 08.03.2016 இன்று மாலை நடைபெற்றது.

கழக தலைவர் வைகோ அவர்கள் வருகை தர மகளிரணியினர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

தலைவர் வந்து சிறிது நேரம் கழித்து அனைவரும் எழுந்து நிற்க, தமிழ் தாய் வாழ்த்து.பாடினார்கள்.

தொடர்ந்து அன்னை மாரியம்மாள் படத்தை கழக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா திறந்து வைத்தார். அனைவரும் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

திருமதி வைகோ குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மதுவிலக்கு பட்டிமன்றம் நிகழ்வு தொடங்கியது. பட்டி மன்றம் சிறப்பாக இருந்தது என அனைவரும் பாராட்டு தெரிவித்தார்கள்.

மகளிர் விழாவில் ஆண்களுக்கு தனி இருக்கைகள்.மண்டபத்திற்கு வெளியே ஒதுக்கப்பட்டிருந்தது. நாகரீக இயக்கம் மதிமுக என இது சான்றாகியது.

தொடர்ந்து மாநில மகளிரணி துணை செயலாளர் மல்லிகா தயாளன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

மகளிர் அணியின் சார்பில் அன்னை மாரியம்மாள் அவர்களின் ஆளுயர முழு உருவப் படம் நினைவுச் சின்னமாக கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மறுமலர்ச்சி மகளிர் அணிச் செயலாளர் மகப்பேறு மருத்துவர் ரொஹையா அவர்கள் தொடக்க உரையாற்றினார்கள்.


அந்த நேரத்தில் இந்த மகளிர் தின விழாவில் ஒரு ஆண் குழந்தைக்கு மாவீரன் பிரபாகரன் பெயரைச் சூட்டினார் மக்கள் தலைவர். குழந்தை குளிருக்காக அணிந்திருந்த கை உறையும் கழக கொடி கலரில் இருந்தது அனைவரையும் ஆச்சரியபட வைத்தது.

தொடர்ந்து பேசிய மருத்துவர் ரோஹையா அவர்கள், இந்த அரங்க கொள்ளளவான 1500 மகளிர் வந்திருந்தனர். பதிவேட்டிலும் 1500 மகளிர் பெயர்,கையொப்பம் இருந்தது.இந்த 1500 மகளிரில் 200 மகளிர் மட்டுமே தற்பொழுது கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள், பொறுப்பில் உள்ளவர்களின் இல்லத்தார். மீதமுள்ள 1300 மகளிரும் புதிதாக தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டவர்கள் என ரோஹையா தெரிவித்தார்.

விழா நடைபெற்ற அரங்கினுள் ஆண்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். முழுக்க முழுக்க மகளிர் மட்டுமே இந்த விழாவினை நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிகள் பம்பரம் இணையதள தொலைக்காட்சியில் (www.pambaramtv.com) நேரலை செய்யப்பட்டிருந்தது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment