மதிமுக தலைமைக் கழகமான தாயகம் 21.03.2016 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்:-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் திரு. இராமநாதபுரம் ராஜா அவர்கள் (முகவரி: கே.டி.எம்.காம்ப்ளக்ஸ், பயோனீர் மருத்துவமனை எதிரில், மதுரை ரோடு, இராமநாதபுரம் - 623 501; கைப்பேசி எண். 94864 - 14100) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.
தீர்மானக்குழு உறுப்பினர் நியமனம்:-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நெல்லை மாவட்ட குருவிகுளம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் திரு. ரு.சங்கர் அவர்கள் (1/3, குறிஞ்சாகுளம் கிராமம், திருவேங்கடம் (வழி), சங்கரன்கோவில் வட்டம், திருநெல்வேலி மாவட்டம் -627 719; கைப்பேசி எண்: 98425 86617) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தீர்மானக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.
இராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நியமனம்:-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர செயலாளர் திரு. கே.ஏ.எம்.குணா அவர்கள் (முகவரி: 12/338, காமராஜ் நகர், பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம் -623 707; கைப்பேசி எண். 94435 - 03646) அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, இராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
நெல்லை புறநகர் குருவிகுளம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நியமனம்:-
நெல்லை புறநகர் மாவட்டம் - குருவிகுளம் வடக்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக திருவேங்கடம் பேரூராட்சித் தலைவர் திரு. வ.சீனிவாசன் (முகவரி: எண்: 14, செல்லப்பட்டி மேலத் தெரு, திருவேங்கடம், திருநெல்வேலி மாவட்டம் -627 719; கைப்பேசி எண். 99658 - 73928) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment