மக்கள் நலக் கூட்டணிக்காகக் கீழ்காணும் இணையதளப் பக்கங்கள் அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளன.
2016 மார்ச் 8 செவ்வாய்க்கிழமை முதல், கூட்டணியின் சார்பில் வெளியிடப்படுகின்ற அறிக்கைகள், பொதுக்கூட்ட நிகழ்வுகள், பிரச்சாரப் பணிகள் தொடர்பான அனைத்துச் செய்திகள், படங்கள் காணொளிகள் இந்தத் தளங்களில் நாள்தோறும் வெளியிடப்படும்.
பொதுமக்கள், இளைஞர்கள் தங்கள் கருத்துகளை இந்தத் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் களத்தில் மக்கள் நலக் கூட்டணிக்காகப் பணியாற்ற விழைகின்ற இளைஞர்கள், பொதுமக்கள், தன்னார்வத் தொண்டர்கள், இந்த சமூக வலைதளப் பக்கங்கள் வழியாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இணையதளம், முகநூல், ட்விட்டர், யூ டியூப், மின் அஞ்சல், வாட்ஸ் அப் ஆகிய வலைத்தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,
whatsapp.com 7305 234 234
இந்த சமூக வலைதளங்களை மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, சிபிஐ எம் ஜி.இராமகிருஷ்ணன், சிபிஐ இரா.முத்தரசன், விசிக தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று மதிமுக அலுவலகமான தாயகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்கள்.
No comments:
Post a Comment