26.03.2016 இன்று திருச்சி ஹோட்டல் பெமினா அரங்கத்தில் மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக மாநில வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தஞ்சை- அத்திப்பட்டி வழக்கறிஞர் எம்.ஏ.பழனியப்பன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்களின் தலைமையில் இணைத்துக் கொண்டார்.
மக்கள் நலக் கூட்டணியின் மாநில வழக்கறிஞர்கள் இந்த மாநாட்டில் ரூபாய் இரண்டு கோடி தேர்தல் நிதியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் வழக்கறிஞர் ரோவர் திரு.வரதராஜன் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.
இதில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தலைவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment