Sunday, March 27, 2016

வைகோவுடன் சீத்தாராம் யெச்சூரி சந்திப்பு! மாலையில் மநகூ தலைவர்கள் சந்திப்பு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்களை சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் மார்ச் 27 ஞாயிறு அன்று சந்தித்து உரையாடினார். சி.பி.எம். மாநிலச் செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் உடன் இருந்தார்.

சுமார் 20 நிமிடங்கள் பேசிய அவர்கள் ஜோதிர்மயி பாசு மறைவின் போது அவர் உடலோடு சுமார் 5 மணி நேரங்கள் பயணித்த அனுபவத்தை வைகோ பகிர்ந்துகொண்டார். சீதாராம் யெச்சூரியும் அந்த சூழலை நினைவுகூர்நதார்.



பின்னர் மாலையில் மக்கள் நலக்கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் ம.தி.மு.க. சார்பில் திருப்பூர் எஸ்.துரைசாமி, அ.கணேசமூர்த்தி, சி.பி.எம். சார்பில் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, பி.சம்பத் சிபிஐ சார்பில் கே.சுப்பராயன், மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் து.ரவிக்குமார், சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment