இன்று 11-03-2016 காலை 9.00 மணி அளவில் சென்னை எழும்பூா் சிராஜ் மகாலில் வைகோ கார்த்திக் மகாலெட்சுமி திருமணம் சுயமரியாதை திருமணமாக நடந்தது.
நடத்தி வைக்க வந்த வைகோ அவர்களை மணமகன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அப்போது கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்.
திருமணத்தை மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ அவர்கள், மணமக்களுக்கு மாலை எடுத்து கொடுத்து, ஒருவருக்கொருவர் மாலை அணிந்த பின்னர், தாலி எடுத்து கொடுத்து, சுயமாியாதை திருமணமாக நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
திருமணத்தில் பங்கெடுக்க வந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை தலைவர் வைகோ அவர்கள் வரவேற்று தலைவர்கள் வரிசையில் அமர வைத்தார். பின்னர் அவரும் மணமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.

மணமக்கள் வைகோ மற்றும் வைகோ அவர்களின் மனைவி ரேணுகா தேவி அவர்களிடன் ஆசி பெற அவர்களும் மணமக்களை மலர் தூவி வாழ்த்தினார்கள்.
மேலும் இந்த திருமணத்தில் மதிமுக இணையதள அணி நண்பர்கள் ஏராளமாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். கழக முன்னணி நிர்வாகிகள், மற்ற நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment