மக்கள் நலக் கூட்டணி சார்பில் பிப்.4-ஆம்தேதி இன்று காலை 10 மணி அளவில் நாகர்கோவிலில், குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் குண்டும்-குழியுமாக ஆபத்தான நிலை யில் உள்ள சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தியும், ஓடுவதற்கு லாயக்கற்ற பழு தடைந்த பேருந்துகளை உடனடியாக மாற்றி புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.மேலும், ரப்பர் விலை வீழ்ச்சியைக் கண்டித்தும், மாவட்டத்திலுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நியாயமான விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், மதிமுக மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், சிபிஐ மாநில துணைச் செய லாளர் மு. வீரபாண்டியன், முந்நாள் நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர் முகமது, CPM மாவட்டச் செயலாளர் என். முருகேசன், CPI மாவட்டச் செயலாளர் எஸ். இசக்கிமுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் திருமாவேந்தன், மேற்கு மாவட்டச் செயலாளர் மாத்தூர் ஜெயன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment