நெல்லை சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் 29.03.2016 இன்று மாலை தே.மு.தி.க- மக்கள் நலக் கூட்டணி ஐந்தாம் கட்ட தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது.
இந்த
கூட்டத்தில் உரையாற்றிய ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள், ஆள் மாற்றமும் , ஆட்சி மாற்றமும் ஏற்பட்டதே தவிர அடிப்படை மாற்றம் ஏற்படவில்லை. ஒரு வளமான தமிழகத்தை உருவாக்க தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர். இரு துருவ அரசியலை வீழ்த்துவோம். மனோ கல்லூரிகளுக்கு சொந்த கட்டடத்தை தேமுதிக , மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் கட்டிக் கொடுப்போம்.
குடும்பம் இல்லையென்று சொல்லும் ஜெயலலிதாவிற்கு எதற்கு கொடநாட்டு எஸ்டேட். ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவதற்கு எங்களுக்குத் தான் உரிமை உள்ளது என பேசினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு மாநில
செயலாளர் இரா.முத்தரசன்
அவர்கள், தொங்கு சட்டசபை அமையாது. உறுதியாக தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி தனிப்பெரும் வெற்றியை ஈட்டும் என உறுதி பட தெரிவித்தார்.
விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் உரையாற்றுகையில், மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்கப்போவது தேமுதிக- மக்கள்நலக் கூட்டணியே. எல்லா கிராமங்களிலும் கண்காணிப்பு படையை நாம் கட்ட வேண்டும் . இந்த தேர்தல் நமக்கு விடப்பட்ட சவால். மிகவும் கவனமாக களப்பணி ஆற்றுங்கள். திமுகவும் அதிமுகவும் இனி ஒருபோதும் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாது என தெரிவித்தார்.
ஓமன்
மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment