தாயகத்தில் 14-03-2016 தேவேந்திரர் குல வேளாளர் அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் தலைவர் வைகோ அவர்களை தயகத்தில் சந்தித்தனர்.
அப்போது இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு பரமக்குடி யில் சிலை வைக்க வேண்டும். மணிமண்டபம் கட்டி தரவு வேண்டும். ஆதி திராவிடர் பட்டியலில் தேவேந்திரர் மக்களை சேர்க்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தலைவர் வைகோ அவர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது பேசிக்கொண்டிருந்தபோது, வைகோ அவர்கள், அவரின் உதவியாளர் தம்பி ஜெயபிரசாந்த் அவர்களை கைகாட்டி, பரமகுடி துப்பாக்கி சூட்டில், அவன் உயிரை காப்பாற்றி கொடுத்தேன். இன்று எனக்காக அவன் தன் உயிரையும் கொடுப்பான் என்று பரமக்குடி சம்பவத்தில் காப்பாற்றி தன்னுடன் வைத்து கொண்டிருக்கும் உதவியாளர் ஜெயப்பிரசாந்த் பற்றி தலைவர் வைகோ பெருமிதம் கொண்டார்.
இந்த சந்திப்பு முடிந்த பின்னர், தன்னை சந்திக்க வந்தவர்களை எப்போதும் போல வாசல் வரை வந்து வழியனுப்பினார் வைகோ அவர்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment