மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டமானது, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான, நாகர்கோவிலில், நாகராஜா திடலில் 28-03-2016 அன்று நடைபெற உள்ளது.
இந்த பொதுக் கூட்டத்தில் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
எனவே வருகிற 28ஆம் தேதி குமரி மாவட்டம் வருகை தர உள்ள தலைவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது மற்றும் அடுத்த கட்ட நகர்வு குறித்த மக்கள் நலக் கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் நாகர்கோவில் பென்சாம் மருத்துவமனை அருகில் அமைந்துள்ள கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில் 20-03-2016 நேற்று நடைபெற்றது.
இதில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment