மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை வரவேற்க மத்திய சென்னை தயாராக காத்திருந்து கழக சின்னம் மற்றும் கொடி கலர் அடங்கிய ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள் மகளிர்.
சூளைமேடு மக்கள் நலக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் அமர்ந்திருக்க, இயக்குனர் கவுதமன் அவர்கள் தந்தையாரை கண்டதும், அவர் கையெடுத்து வணங்க, வைகோவும் எழும்பி நின்று வணங்கி, நலம் விசாரித்தார்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வைகோ அவர்கள், தமிழகத்தின் நிலை மாற வேண்டும். இந்த நாட்டில் ஒரு பெரிய மாற்றம் வரும். இருள் நீங்கும். அலைபேசிகளில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்ற இளைஞர்களுக்கு முதலில் நன்றி.
இந்த ஒலிபெருக்கியில் எழுப்புகின்ற குரல் தாய்மார்களைச் சென்றடைகிறது. நான் பேசுவது கட்சித் தோழர்களுக்கு அல்ல. என்ன பேசுகின்றார்கள் என்று கேட்க வந்திருக்கின்ற நடுநிலையாளர்களை கேட்கின்றேன். அறம் வளர்த்த தமிழ்,புகழ் வளர்த்த தமிழ் புகழ் பெற்று இருந்தது.அப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டிருந்த தமிழகம் ,இங்கு தான் பாரதி பிறந்தார். முதல் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் தமிழகத்து ஆர்.கே.சண்முகம் செட்டியார். அப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட தமிழகம்.
காமராசர் ஆட்சிக்கு வந்தார். காமராசரால் தமிழகம் புகழ் பெற்றது. அறிஞர் அண்ணா மறுமலர்ச்சி சகாப்தத்தை உருவாக்கினார். ஈரோட்டுப் பெருங்கிழவன் பகுத்தறிவு சுடராக உலவி வந்தார். இத்தனையும் பெருமை.ஒரு பொருளாதார ஆய்வு நடைபெற்றிருக்கின்றது.இந்தியாவிலே ஊழலில் முதலிடம் எது என்பதற்கு, தமிழகம் என்று இருக்கிறது என்பதை வெட்கத்தோடு சொல்கின்றேன். இதனால் பாதிக்கப்பட்டது நடுத்தர மக்கள் தான். பேய்மழை பெருவெள்ளத்தில் இங்கொரு அரசு இருந்ததா? பணம் வரும். அது உங்கள் பணம். உங்களிடமிருந்து சூறையாடிய பணம். வெள்ளம் வந்த போது உங்கள் துயர்துடைக்க வந்தார்களா?. தீபாவளி, பொங்கல் கொண்டாட முடியவில்லை என்ற போது பணம் கொடுத்தார்களா ? பணிக்குழுக்கள் அமைக்க வேண்டும்.அதுவே கண்காணிப்பு குழு.பகலும், இரவும் கண்காணிக்க வேண்டும்.திட்டமிட்டு நில்லுங்கள். எந்த விதத்திலும் அனுமதிக்காதீர்கள். பணத்தை நீங்களே பறிமுதல் செய்யுங்கள். மின்னல் வேகத்தில் பணம் கொடுக்கின்றார்கள் என்று செய்தி கொடுங்கள். இந்த விழிப்புணர்வோடு செய்ய வேண்டும்.
உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க வேலைக்கார்ர்களாக,ஊழியக்கார்ர்களா பேசுகின்றோம். உங்கள முன்னால் உரையாற்றிக் கொண்டிருப்பவன் அரைநூற்றாண்டு காலம் அரசியல் களத்தில் இருக்கின்றேன். 32 முறை சிறை சென்றிருக்கின்றேன். ஊழல் செய்து விட்டு அல்ல. 98, 99 இல் மத்திய அமைச்சரவையில் பொறுப்புக்கு வர வேண்டும்.
திட்டமிட்டு இந்த அணியை உருவாக்கியிருக்கின்றோம். யாரை நம்பி 65 சதவிகித மக்களை நம்பி. இவர்கள் நேர்மையானவர்களா, யோக்கியமானவர்களா என்று யோசியுங்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வருவோம், கல்விக் கொள்ளையைத் தடுப்போம்.
சகாயம் போன்ற அதிகாரிகளை உயர்ந்த இடத்தில் வைப்போம்.
நாங்கள் நேர்மையான ஆட்சியைத் தருவோம். காரணம் எங்களுக்கு சுயநலம் இல்லை.
The most corrupt government everseen in Tamilnadu is ADMK.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். மீத்தேனில் எதற்குக் கையெழுத்துப் போட்டீர்கள். என் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் வருவோம். மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையில் அதிமுக முதல் குற்றவாளி. இரண்டாம் குற்றவாளி திமுக. சின்னஞ்சிறு பிள்ளைகள் குடிப்பது,நெஞ்சு கொதிக்கின்றதே. மதுக்கடைகளை மூட ஊர் ஊராக நடந்தேன். என்னைப் பெற்ற தாய் 99 வயதில் மதுக்கடையை எதிர்த்துப் போராடினார். மதுக்கடையை மூடுகின்றோம் என்ற தகுதியோடு பேசுகின்றேன். 20 கூலித் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக போராடியதுண்டா? அர்ச்சுணன் கண்ணுக்கு அம்பின் நுனியும், குருவின் கழுத்தும், அதைப் போல நமது வெற்றி மட்டுமே கவனத்தில் இருக்க வேண்டும். இது இயல்பான கூட்டணி. கொள்கை கூட்டணி. அண்ணன் கருணாநிதி அவர்களே, "கூடா நட்பு கேடாய் முடிந்தது" என்ன அடிப்படையில் கூட்டு சேர்ந்தீர்கள். அது ஊழல் கூட்டணி. தமிழர்களைக் கொன்ற கூட்டணி" என்று வைகோ பேசினார்.
1967 வரலாறு 2016-ல் மீண்டும் திரும்பும். தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறும் என திருமாவளவன் பேசினார்.
மக்கள் நலக் கூட்டணி வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லத் திராணியற்றவர்கள்தான் மக்கள் நலக் கூட்டணி உடையும் என்று செய்தி பரப்பி வருகிறார்கள் என ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
தகவல்: தீபன்
No comments:
Post a Comment