தமிழர் நலனுக்காவும், தமிழர்களின் உரிமைக்காவும் வாழ்நாளெல்லாம் போராடி, அடக்குமுறைகளையும், சிறைவாசத்தையும் சந்தித்து தமிழ் இனத்துக்கு மகத்தான சேவை செய்து வந்த சகோதரர் நகைமுகன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
தமிழக வாழ்வாதாரங்களைக் காக்கவும், அண்டை மாநிலங்களில் தமிழர்களுக்கு ஏற்படும் அல்லல்களைப் போக்கவும், ஈழத்தமிழர்கள் விடியல் காணவும் தொடர்ந்து போராடி வந்த சகோதரர் நகைமுகன் அவர்கள் எனக்கு மிகவும் உற்ற நண்பர் ஆவார். மனதில் பட்டதை ஒழிவு மறைவு இன்றி, தயவு தாட்சண்யம் இன்றி கருத்துகளை கூறுகிற மனோதிடம் மிக்கவர். அவரது மறைவால் துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், சகோதரர் அறப்பா அவர்களுக்கும் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவத்துக்கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment