Friday, March 4, 2016

திண்டிவனம் பெருந்திரள் கூட்டம். தலைவர்கள் செல்லுமிடமெல்லாம் ஆதரவு!

சூரியன் மங்குகிற வேளையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை, விழுப்புரம் மாவட்ட தோழர்கள் விக்கிரவாண்டி சுங்கசாவடி அருகில் வரவேற்றார்கள்.


திண்டிவனத்திலும், தலைவர்கள் வரும் முன்பே திரண்டு தலைவர்களை வரவேற்றார்கள்.

கூட்டம் தொடங்கியது. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

மக்கள் கூட்டம் திரளாக திரண்டு மாடிகளிலே, மரங்களிலே மற்றும் அனைத்து இடங்களிலும் அமர்ந்து மாற்றம் வேண்டி, தலைவர்களின் உரைகளை கேட்டறிந்தனர்.

அப்போது, பேசிய தோழர் ஜி.ஆர் அவர்கள், இது சட்டையால் வந்த கூட்டணி அல்ல, கொள்கையால் அமைந்த கூட்டணி. திமுகவும் அதிமுகவும் பெரியாரின் கொள்கைகளை கைவிட்டு விலகி பல காலம் ஆகிவிட்டது என கூறினார்.

திராவிட இயக்கக் கோட்பாடுகளைப் பற்றி நிற்கும் ஒரே கட்சி வைகோ அவர்கள் வழி நடத்தும் மதிமுக மட்டுமே. மதிமுகவை உடைக்கும் கருணாநிதியின் கனவு ஒருபோதும் பலிக்காது. மதிமுகவை ஒரு நாளும் அழிக்க முடியாது. உண்மையான திராவிட இயக்க கொள்கைகளை பின்பற்றி வருவது வைகோ தலைமையிலான மதிமுக என ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.


திருமாவளவன் பேசியபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அனைத்து சமூகத்தினரும் இருக்கிறார்கள். வன்னிய சமூகத்தினரும் இருக்கிறார்கள் என்று பேசியபோது, அப்போது இதோ நான் இருக்கிறேன் என்று வன்னிய சமூக பெண்மணி கையை உயர்த்தி காண்பித்து ஆதரவை தெரிவித்தார்.

தெருவெல்லாம் மூலைக்கு மூலை சாராயக்கடை.ஒரு அரசாங்கத்திற்கு வருமானம் பல்வேறு இடத்திலிருந்து வருகின்றது.ஒரு தீப்பெட்டி வாங்குவதாக இருந்தாலும், அந்த வரிப்பணம் அரசுக்குப் போகின்றது. சராசரியாக ஒரு ஆண்டுக்கு சாராயம் விற்று 20,000கோடி வருகின்றது. அம்மா சம்பாதித்த பணத்தில் இருந்தா மிக்ஸி தருகின்றார். ஓராண்டுக்கு மற்ற இலவசப் பொருட்கள் வழங்குவதற்கு செலவளிப்பது 1000 கோடி தான். இலவச திட்டங்களால் மக்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்கியிருக்கின்றது. உங்கள் பேரப்பிள்ளைகளை காப்பாற்ற வேண்டாமா? இந்தக் கவலை தான் எங்கள் நால்வரை ஒன்றிணைத்திருக்கின்றது.

எங்கும் ஊழல்,எதிலும் ஊழல் ,எல்லாம் ஊழல்.அதிகாரிகளுக்கு ஒரு கமிசன். அரசியல்வாதிகளுக்கு கமிசன். இந்தியாவிலே அதிகம் குடிசைகள் உள்ள இரண்டாவதிடம் தமிழகம். கூரை குடிசைகள் தமிழ்நாட்டிலேயே அதிகம் நிறைந்த மாவட்டங்கள் கடலூர் ,விழுப்புரம் என பேசினார்.


கடைசியாக பேசிய மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள், மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என அனைத்திலும் அதிமுக திமுக இருவருமே குற்றவாளிகள் என பேசினார்.

இந்த கூட்டணி நீடிக்குமா என்று இன்னும் கூறுகிறவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். ஐநாவில் நிரந்தர உறுப்பு நாடுகள் இருப்பதை போல மக்கள் நலக் கூட்டியக்கத்தில் இந்த 4 கட்சிகளும் இருக்கும்.

சொந்த நாட்டிலே, அண்டை மாநிலத்திலே, திருப்பதி மலையடிவாரத்திலே 20 தமிழர்களை, கண்ணை தோண்டி, உயிர்தலத்தை அறுத்து, கையை விரல்களை வெட்டி கொலை செய்தவனை தட்டி கேட்காத முதலமைச்சர், முன்னாள்முதலமைச்சர். ஆனால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தட்டி கேட்டோம். ஆந்திர அரசை கண்டித்தோம். ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

ஒரு கூண்டில் ஜெயலலிதா, மற்றொரு கூண்டில் கருணாநிதி. இருவரும் ஊழல் குற்றவாளிகள். கெயில் பிரச்சினை, நளினி விடுதலை விவகாரம் இதிலும் இருவரும் குற்றவாளிகள்.

கலைஞர் அவர்களே, உங்கள் ஆட்சி காலத்தில் உங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களின் பதவிகளை பாதுகாக்க, ஜெயிலுக்குள் நளினியை சந்திக்க பிரியங்காவை எப்படி எந்த ஆதாரமும் இல்லாமல் அனுப்பினீர்கள். நளினியை பிரியங்கா மிரட்டியதன் அர்த்தம் என்ன? எனவும் கேள்வி எழுப்பினார்.

65 சதவிகிதம் மக்கள் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அரசு ஊழியர்களே, நாங்கள் ஆட்சிக்கு வருவோம். உங்கள் குறைகளை நாங்கள் கண்டறிந்து நிறைவேற்றுவோம். 

கண்காணிப்பு குழு அமையுங்கள் பணம் குடுப்பதை தடுக்க. செய்திகள் மின்னல் வேகத்தில் செல்கிறது. நமக்கு இதுதான் ஊடக பலம். ஜெயிப்போம். ஆட்சி அமைப்போம் என வைகோ பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment