இன்று (22.03.2016) காலை 11 மணி அளவில் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி அவர்களும், அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் நா.கணேசன், தலைமை நிலையச் செயலாளர் முனியன், காஞ்சி மாவட்டச் செயலாளர் இர.ரஞ்சித், நெல்லை செல்வம், மகேந்திரன் உள்ளிட்ட திரளான தோழர்கள் தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்திதார்கள்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும், அதன் வெற்றிக்காக இணைந்...து பணியாற்றுவதாகவும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் உறுதி அளித்தார்கள்.
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், கழகப் பொதுச்செயலாளருமான வைகோ அவர்கள் தமிழர் முன்னேற்றப்படை நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியின்போது, சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment