Friday, March 4, 2016

உழுந்தூர் பேட்டையில் மக்கள் திரளாக திரண்டதே மக்கள் நலக் கூட்டணி வெற்றிக்கு சான்று!

மக்கள் நல கூட்டணியின் 3 ஆம் கட்ட மாற்று அரசியல் எழுச்சிப்பயணத்தின் நிறைவுநாளான இன்று 4-3-2016 காலையில்  விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் பிரச்சார பொதுக்கூட்டமாக நடைப்பெற்றது.

உளூந்தூர்பேட்டையே திணரக்கூடிய வகையில் மக்கள் வெள்ளத்தில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் காட்சி அளித்தனர். மக்கள் நல கூட்டணியின் தலைவர்களுக்கு பொதுக்கூட்ட மேடையில் கட்சி தொண்டர்கள் பூமாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.


கொளுத்தும் வெயிலிலும் பால் நிலவொளியில் அமர்ந்திருப்பதைப்போல, அமர்ந்திருந்த மக்கள் திரளே மக்கள் நலக் கூட்டணியின் வெற்றிக்குச் சாட்சியாக திகழ்ந்தது.

அப்போது, மக்கள் நலக் கூட்டணி தலைவர்களில் ஒருவரான, முத்தரசன் அவர்கள் உரையாற்றும்போது, அமைச்சர்கள் தவறு செய்தால் முதல் அமைச்சர் தண்டிக்கிறார். முதலமைச்சர் தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது.

எங்கள் அணியில் 18 வயது இளைஞர் வைகோ அவர்கள்தான். மாணவ பருவம் முதல் இன்று வரை அரசியலில் இருக்கிறார். அவர் ஊழல் புரிந்தார் என குற்றம் சாட்ட முடியுமா எனவும் முத்தரசன் கேள்வி எழுப்பினார்.

மா.கம்யூ.தலைவர் திரு.ஜி.ஆர்.அவர்கள் உரை நிகழ்த்தும்போது, ஒவ்வொரு பொதுக்கூட்டமும் மாநாடாக நடக்கிறது. ஆட்சியை மக்கள் நலக் கூட்டணி பிடிக்கும் எனவும் உறுதி கூறினார்.


விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, தமிழக அரசியலில் புரையோடி கிடக்கிற ஊழலை ஒழிக்க, தமிழக மக்களை சுரண்டி கொண்டிருக்கின்ற இறுமாப்பு பிடித்த சக்திகளை விரட்ட .மக்கள் நலக் கூட்டணி உருவாகி இருக்கிறது.


அம்மாவும் ஐயாவும் தான் நாட்டை ஆள வேண்டுமா? நாம் ஆளக் கூடாதா? கட்டுவிரியனும் வேண்டாம். கண்ணாடி விரியனும் வேண்டாம். நல்ல பாம்பும் வேண்டாம். தமிழகத்தை நல்லிணக்கம் கொண்ட அமைதி பூங்காவாக்க பாடுபடுவோம் என திருமா பேசினார்.

மக்கள் சாராயம் குடிச்ச பணத்திலேயே நமக்கு இலவசங்கள் வழங்கப்படுகிறது. அம்மா அவங்க பையிலே இருந்தா இலவசங்களை தருகிறார்கள் எனவும் திருமா கேள்வி எழுப்பினார்.


கடைசியாக பேசிய மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர், வைகோ அவர்கள் பேசிய போது, நாங்கள்தான் வெற்றி பெறுவோம். நாங்கள்தான் ஆட்சி அமைப்போம். நாங்கள்தான் ஊழல்வாதிகளை சிறையில் தள்ளுவோம். நாங்கள்தான் ஊழல் செய்து ஈட்டிய சொத்துக்களைப் பறிமுதல் செய்வோம். நாங்கள்தான் மதுக்கடைகளை இழுத்து மூடுவோம். விலைவாசி குறைய வேண்டும். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்வோம். மக்கள் நலக் கூட்டணி ஆட்சியில் கரும்பு விலை டன்னுக்கு ரூ.4000 நிர்ணயிக்கப்படும்.  ஊழல் ஒழிக்கப்பட மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் எனவும் வைகோ பேசினார். மக்கள் மாற்றத்திற்காக காத்திருந்தவர்கள் வருகிற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களித்து தமிழகத்தை காக்க வேண்டும்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment