மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சிப் பயண பொதுக்கூட்டம் இன்று (01.03.2016) இரவு 7 மணியளவில் அரக்கோணத்தில் நடைப்பெற்றது.
மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு பொதுக்கூட்ட மேடையில் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. அப்போது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றும் போது "அலை கடலாய் திரண்டிருந்த மக்களை பார்த்து இங்கு யாரும் கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லை. ஆனால் மாற்று அரசியலை தொலைநோக்கு பார்வையுடன் பார்க்கும் எங்களை ஏற்றுக் கொண்ட மக்களை பார்க்கும் போது ஆர்வமாக உள்ளது. மாற்றத்தை தேடி வந்தவர்கள் மக்கள்.
இந்த கூட்டணி ஊழலில் ஊறிப்போன அதிமுக..திமுக போன்றவைக்கு மாற்றானது.நல்ல சாராயம், கள்ளச்சாரத்திற்கான மாற்று இல்லை. இப்படி ஊழல்,மோசடி, இல்லாத தமிழகத்தை உருவாக்க பல கோணங்களில், தொலைநோக்கு சிந்தனையுடன் உருவாக்கப்பட்டது தான் கூட்டியக்கம். ஒரு கட்சி ஆட்சி முறை ஒழித்து. கூட்டணி ஆட்சி முறை மலர ஆதரிப்பீர்! மக்கள் நலக் கூட்டணியை.
மக்கள் நலக்கூட்டணியை பார்த்து பலரும் பலவாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து தெரிகிறது இந்த கூட்டணியை பார்த்து அவர்களது அடிவயிறு கலங்கியிருப்பது தெரிகிறது.
அம்மாவை பார்த்தவுடன் காலில் விழும் அமைச்சர்கள் பெற்ற தாயாக நினைத்து விழுவது இல்லை. பதவிக்காக தான் காலில் விழுகிறார்கள். இது அம்மாவுக்கும் தெரியும். ஆனாலும் காலில் விழ வைத்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார். காரணம் ஒரு கட்சி ஆட்சி முறை தான். எல்லா அதிகாரமும் ஒரு கட்சியிடம் இருப்பது தான். ஆகவே கூட்டணி ஆட்சி முறையை ஆதரிப்பீர்" எனக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment