இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவருமான மறைந்த அமிர்தலிங்கம் அவர்களுடைய துணைவியார் மங்கையற்கரசி அம்மையார் அவர்கள், லண்டனில் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன்.
எண்பதுகளின் முற்பகுதியில் சென்னையில் பலமுறை சந்தித்து இருக்கின்றேன். மிகுந்த கனிவுடன் உபசரிப்பார். விருந்தினர்களைப் பண்போடும், பரிவோடும் மதித்து நடக்கக் கூடியவர்.
அன்னாரது மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment