Thursday, June 25, 2015

மதிமுக சிறுபான்மை பிரிவு சார்பில் மனிதநேய உதவிகளை ஏழைகளுக்கு வழங்கினார் வைகோ!

மதிமுக சிறுபான்மை பிரிவு சார்பில் ரம்ஜான் நோன்பு ஏற்கும் ஏழை எளியவர்களுக்கு மனித நேய உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 11 மணி அளவில் எழும்பூர் சிராஜ் மகாலில் தொடங்கியது. அதற்கான ஏற்பாட்டை மதிமுக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி செய்திருந்தார். 

கழக நிர்வாகிகள் மல்லை சத்யா, தியகவேங்கை கணேசமூர்த்தி, கழக குமார், ஜீவன், தென்றல் நிசார், மதிமுக இணயதள நெரலை அண்ணன் அம்மாபேட்டை கருணாகரன், நல்லு ஆர் லிங்கம், அன்ணன் ஆட்டோராஜ், திருப்பதிசாய் மற்றும் ஏராள கழக கண்மணிகள் மற்றும் உதவி பொருட்களை பெற்றுக்கொள்ளும் பயனாளர்கள் வருகை தந்திருந்தனர். விழா ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தது. 

தலைவரை வரவேற்க பெரிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. உதவி பொருளின் பையில் தலைவரின் புகைப்படமும் கட்சியின் சின்னமான பம்பரமும் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழின முதல்வர் வைகோ அவர்கள் மதசார்பற்ற தன்மைக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது., பொடாவின் போது வேலூர் சிறையில் இப்தார் நிகழ்வை நடத்தி இருக்கிறேன். இந்த விளம்பர உலகில் தியாகம் கொச்சைபடுத்தப்பட கூடாது. இலவச பொருட்களில் என் படத்தை தயவுசெய்து போடாதீர்கள். ராஜபக்சேவை எதிர்த்து மேற்கொண்ட சாஞ்சி பயணம் வெற்றியடைய காரணமாக இருந்தவர் முராத் புகாரி என தெரிவித்தார். பின்னர் வருகிற ஜூலை 12ஆம் தேதி மதிமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடத்தபடும் எனவும் தெரிவித்தார். 

மல்லை சத்யா, முராத் புகாரி, தென்றல் நிசார் மற்றும் சிறுபான்மை தலைவர்களும் உரையாற்றினார்கள்.

புகைப்படம் கருத்து சேகரிப்பு: அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்


மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment