Thursday, June 25, 2015

"மீண்டும் எமர்ஜென்சி?" சிறப்பு கருத்தரங்கத்தில் வைகோ சிறப்புரையாற்றினார்!

அம்பேத்கார்-பெரியார் வழக்கறிஞர்கள் வாசிப்பு வட்டம் நடத்தும் "மீண்டும் எமர்ஜென்சி?" சிறப்பு கருத்தரங்கம் உயர் நீதிமன்றம் எதிரில் உள்ள YMCA அரங்கின் முதல் தளத்தில் இன்று வியாழன் 25-06-2015 மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.

தலைவர்கள் வந்தவண்ணமிருந்தனர். தலைவர் வைகோ அவர்கள் திராவிட இயக்க முன்னோடி திரு.ஆனூர் ஜெகதீசன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். வழக்கறிஞர்களுடன் முன்னாள் எம்பி அண்ணன் கணேசமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டார்.

நாளை மணமகனாக இருக்கும் 27 ஆவது வட்ட செயலாளர் சுரேஷ் தலைவரிடம் ஆசி பெற வந்தார்... நாளை திருமணத்தை வைத்துக் கொண்டு இங்கு என்ன வேலை என்றார் எங்கள் மாமனிதர் வைகோ. அதுதான் கழகம். அதுதான் மதிமுக தொண்டன்.

காவல்துறையின் நெருக்கடியையும் மீறி எமர்ஜென்சி கூட்டம் ஆரம்பமானது. நீதிமன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில் நெருக்கடியான கூட்டம் கூடியிருந்தது. திரு.குமார தேவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். வ உ சி க்கு பிறகு சிறை களை பற்றி தெரிந்தவர் அண்ணன் வைகோ அவர்கள் என தலைவர் வைகோ அனுபவித்த பாடுகளை சுட்டிக்காட்டினார் குமாரதேவன். பின்னர் வழக்கறிஞர் துரை சாமி அவர்கள் நெருக்கடிநிலையின் நிகழ்வுகளை விளக்கினார். நெருக்கடி நிலையில்... திருமணம் ஆகாதவர்களுக்கெல்லாம் கட்டாய வாசக்டமி(பெண்களுக்கான கருத்தடை) செய்யப்பட்டது. மூன்று பேர் தூக்கு தண்டனை வழக்கில் கடைசியாக வந்து வெற்றி பெற்றவர் வைகோ என துரைசாமி கூறினார்.  

வழக்கறிஞர் தேவதாஸ் முன்னிலை வகித்து பேசினார். எமர்ஜென்சி கை தி ன் போது யாருக்கும் ஆர்டர் தரப்படவில்லை...தலைவர் வைகோ அவர்களுக்கு கூட தகவல் தெரிவிக்கபட்டதே தவிர ஆர்டர் தரப்படவில்லை...

இந்த சிறப்பு கருத்தரங்கில் மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ சிறப்புரையாற்றினார். அந்த சிறப்புரையில் நெருக்கடி நிலை ஏற்பட்டபோது அந்த நிசப்தமான சூழ்நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் நெருக்கடி நிலை பற்றியும் கூறினார்.நெருக்கடி நிலையின் போது நெல்லை மாவட்டத்தில் முதலில் கைதானவன் நான்... ஆனால் முரசொலியில் கைதானவர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை. நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதில் தினமணி கோயங்கா முக்கியமானவர். இந்த ஆண்டு ஜன 26 அன்று வந்த மத்திய அரசு தகவல் ஒளிபரப்பு துறை விளம்பரத்தில் செக்குரிலிசம் சோசலிசம் என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருந்தன. நாடாளுமன்ற வாதங்களை பிரதமர் கேட்கிறாரா, செல்கிறாரா. திருமூலர் சொல்லியதுதான் யோகா. இந்துத்துவாவை திணிக்கத்தான் யோகாவை பயன்படுத்துகிறார்கள். இன்றைய நிலையில் நெருக்கடி நிலையை கொண்டு வர முடியாது என்றார். பின்னர் ஊடகயியலாளர்களுக்கு பேசிய தலைவர் வைகோ ஜனநாயக தேர்தல் அல்ல ஆர் கே நகரில், இதை எதிர்த்து போராட வேண்டும் என்றும் பேட்டியளித்தார்.

இந்த நிகழ்வில் மதிமுக மாணவரணி செயலாளர் இராஜேந்திரன் மற்றும் மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன், இணையதள அணியின் சகோதரர் தீபன் மற்றும் ஏராளமான கழகத்தினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தி புகைப்படம் சேகரிப்பு: அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்

மறுமலர்ச்சி மைக்கேல் 
மதிமுக இணையதள அணி - ஓமன் 

No comments:

Post a Comment