Thursday, April 27, 2017

விவசாயிகளுக்காக திமுக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம். மதிமுக கண்மணிகள் நீர்ப்பந்தல் அமையுங்கள்-வைகோ!

விவசாயிகளுக்காக திமுக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம். மதிமுக கண்மணிகள் நீர்ப்பந்தல் அமையுங்கள்-வைகோ!

விடுதலைபுலிகளை ஆதரித்து பேசியதால், தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு 25 நாட்கள் சிறையில் இருந்து இன்று 27-04-2017 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, மீண்டும் ஜூன் 2 ஆம் தேதிவரை காவல் நீட்டிப்பு செய்ய நீதிபதி உத்தரவிட்ட நிலையில், புழல் சிறைக்கு செல்ல வாகனத்தில் ஏறும் முன பேசிய வைகோ அவர்கள், நொடிந்து போன விவசாயிகள் உண்மையாகப் போராடுகின்றார்கள்.

இன்றைக்கு விவசாயிகளின் நண்பனாக காட்டிக் கொள்கின்றாரே ,திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் ,இப்பொழுது என் கையில் இருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2016 தேர்தல் அறிக்கை.

அதில் 29 ஆவது வாக்குறுதுயாக "சிறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்று உள்ளது.அப்பொழுது ஆட்சிக்கு வர வேண்டிய சூழல் இருந்ததால் விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.ஆனால் இவர்கள் ஏற்கவில்லை.எனவே இது குறித்துப் பேச திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்குத் தகுதியில்லை.

இரண்டாவதாக காவிரி மேலாண்மை வாரியம்.2007 இல் அரசிதழில் வெளியிடத் தீர்ப்பு வந்த பொழுது அதை வெளியிடவோ ,மேலாண்மை வாரியம் அமைக்கவோ முயற்சி செய்யவில்லை.எனவே இதற்கும் இவர்களுக்குத் தகுதியில்லை.

எனவே விவசாயிகள் பற்றி பேசி திமுக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்.

தமிழகம் முழுவதும் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கு இந்த தொலைக்காட்சி நண்பர்கள் வாயிலாக ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.இந்த அக்னி நட்சத்திரம் முடியும் வரை வசதி வாய்ப்புள்ள தோழர்கள் நீர் மோர்ப்பந்தல் அமையுங்கள்.பிற தோழர்கள் நீர்ப்பந்தல் அமையுங்கள்.பெயருக்கு அல்ல.3 தோழர்கள் அங்கேயே இருந்து கவனித்துக் கொள்ளுங்கள்.இந்த நிகழ்வில் எங்கும் கட்சிக் கொடி கட்டக் கூடாது.எந்த கட்சி விளம்பரமும் கூடாது."

என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், திமுக தொடர்ந்த தேச துரோக வழக்கில் கைதாகி ஜுன் 2ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பதால், சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment