ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஓவ்வொரு தமிழக மாவட்டமாக மதிமுக மாணவரணி நடத்தும் அண்ணா பெரியார் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றிய அண்ணா பெரியார் பணிகளை உலகறிந்திட செய்யும் நிகழ்விற்கு ஊக்கமளிக்கும் விதமாக ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ₹ 10000 த்தை இந்த பேச்சு போட்டிகளை தலைமையேற்று நடத்தும் மதிமுக மாணவரணி செயலாளர் அண்ணன் மணவை தமிழ் மாணிக்கம் அவர்களிடத்தில், மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநிலதுணை அமைப்பாளர் தமிழருண் மூலம் திருச்சியில் கையளிக்கப்பட்டது.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மண்டல, மாநில அளவில் வெற்றி வாகை சூட ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment