Wednesday, July 11, 2018

மலேசிய அமைச்சர் ஸ்டீவன் சிம் கியோங் அவர்களுடன் வைகோ சந்திப்பு!

மலேசிய இளைஞர் நலம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் கியோங் அவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 11-07-2018 இன்று காலை சந்தித்து உரையாடினார்.

அப்போதுகடந்த முறை கோலா லம்பூர் வானூர்தி நிலையத்தில் தலைவர் வைகோ அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு தமது வருத்தத்தையும் வேதனையையும் அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.

பெசிக்கொண்டிருந்த போது, நான் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் குடிக்கவில்லை என்றார் வைகோ.

உடனே அமைச்சர் சட்டென்று தன் இருக்கையைவிட்டு எழுந்து சென்று ஒரு கிளாஸ் 3 சிறிய தண்ணீர் பாட்டில்களை எடுத்துக்கொண்டு வந்து தண்ணீர் ஊற்றினார்.


அன்று நடந்த தவறை நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் இந்தத் தண்ணீரை நீங்கள் குடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.


தகவல்: அருணகிரி (வைகோ உதவியாளர்)

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment