மதிமுக உயர்நிலை குழு உறுப்பினர் செ.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழா திருச்சி பெமினா ஹோட்டலில் 21-07-2018 நடந்தது.
நிகழ்வு தொடக்கத்தில் சிலம்பாட்டம் நடந்தது. சிறு வயதில் சிலம்பம் ஆடிய சிறுமிக்கு தலைவர் வைகோ அவர்கள் அழைத்து பாராட்டினார்.
வரவேற்புரை நிகழ்த்திய லலிதா வீரபாண்டியன் கூறுகையில், கடமையை செய், பலனை எதிர்பாராதே! என்ற வார்த்தைக்கு ஏற்ப நடப்பவர் தலைவர் வைகோ. அவர்தம் தம்பிகளின் மீது வைத்திருக்கும் பாசத்தை பட்டா போட இயலாது என்று பெருமை பட கூறினார்.
திரு.செ.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய நூல்களை தலைவர் வைகோ வெளியீட்டார்கள். இன்றைய நூல் வெளியீட்டு விழாவில் வசூலான ரூபாய் 2.5 லட்சம் கழகத்திற்காக உயிர் நீத்த சிவகாசி ரவி அவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவியாக வழங்க படுகிறது.
தலைவர் வைகோ அவர்கள் பேசும்போது, தமிழ் தேசிய வாதிகள் எங்கள் விரோதிகள் அல்ல. அதில் உள்ள போலிகள் தான் எங்கள் எதிரிகள் என பேசினார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment