Tuesday, March 12, 2024

மியாவாக்கி முறையில் குறுங்காடு அமைக்கும் பணியை தொடங்கி வைத்த துரை வைகோ!

விதைப்பது ஒரு முறை

வாழட்டும் தலைமுற
சிவகாசி பகுதியில் விசுவநத்தம் கிராமத்தை சேர்ந்த விசுவவனம் அமைப்பினர், பசுமை இயக்கம் மற்றும் சுற்று சூழல் ஆர்வலர்கள் இணைந்து இயற்கை வளத்தை காப்பாற்றுவதோடு, பசுமையாக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். கண்மாயை தூர்வாரி , நீர் தேக்கும் அளவிற்கு சீர்படுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது என்பதை 2022 ஆண்டு நவம்பர் மாதம் ஆங்கில நாளிதல் மூலம் அறிந்தேன். அவர்களை சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கலாம் என 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்றேன்.
வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு, அவர்கள் பணிகளை கேட்டு தெரிந்து கொண்டேன். எல்லோரும் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள். குடும்ப வாழ்வாதாரத்தை காக்க உழைப்பதோடு, இயற்கையையும் காக்க உழைக்கிறீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுகள். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என கூறினேன்.
விசுவநாதன் கோவிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அவற்றை வாங்கி கொடுத்தால், நாங்கள் மரம் வளர்ப்போம் என சொன்னார்கள். அந்த பணியை உங்கள் ஒத்துழைப்போடு நானே செய்கிறேன் என வாக்குறுதி கொடுத்தேன். இந்து அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர்பாபு அவர்களை விசுவவனம் அமைப்பினரை அழைத்துச்செனறு நேரில் சந்தித்தேன். கோவில் நிலங்களை தனி அமைப்புக்கு தருவதில் நடைமுறை சிக்கல் உள்ளன. பதிவு பெற்ற தொண்டு நிறுவனத்திற்கு பராமரிப்பு பணிக்கு தரலாம் என மாண்புமிகு அமைச்சர் சொன்னார். வழக்கறிஞர்கள் மூலம் முயற்சி எடுத்து விசுவவனம் அமைப்பை அரசு பதிவு பெற்ற தொண்டு நிறுவனமாக பதிய நடவடிக்கை எடுத்தேன்.
32 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிப்புகளும், சீமைக்கருவேல மரங்களாலும், குப்பை மேடுகளாகவும் காட்சியளித்தன.
சீமைக்கருவேல மரங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து வைத்து தொடர்ந்து போராடியவர் இயக்க தந்தை வைகோ. சீமைகருவேலம் மரங்களை அகற்ற நீதிமன்றத்தின் மூலம் உத்தரவைப் பெற்று சீமைகருவேலங்களை அகற்றும் பணியினை மேற்கொண்டு வந்தார் வைகோ. அதே வழியில் மக்களையும் மண்ணையும் நேசித்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சீமைக் கருவேல மரங்களை அழித்து, குப்பை மேடுகளை இயக்கத்தோழர்கள் மற்றும் நண்பர்கள் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்தினேன்.
32 ஏக்கர் நிலத்தையும் சுத்தப்படுத்தி, குறிபிட்ட அளவு சுற்றுவேலி அமைத்து ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு சொட்டுநீர் பாசன வசதி போன்றவற்றை ஜே.சி.ஐ அமைப்பு ( மால்குடி ராஜா, ரெங்கசாமி), சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் ரகுராமன் மாநில அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் சிவசக்தி குமரேசன், சிவகாசி நகரச்செயலாளர் ராஜேஷ் ஆகியோர் ஒத்துழைப்புடன் செய்து முடித்தேன். அவர்களுக்கும், பெரும் ஒத்துழைப்பை தந்த விசுவவனம் அமைப்பினருக்கும், விசுவநத்தம் கிராம பொதுமக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
செப்பனிடப்பட்ட இடத்தில்தான் 11.03.2024 அன்று, மியாவாக்கி முறையில் குறுங்காடு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தேன். நிகழ்ச்சியில் பேசும் பொழுது, , நமக்கு ஓரு ஊர் பிடிக்கவில்லை என்றால் வேறு ஊருக்கு மாறிவிடலாம், நாம் வசிக்கும் மாவட்டம் பிடிக்கவில்லை என்றால் வேறு மாவட்டத்திற்கு மாறிவிடலாம், ஏன் நாடு விட்டு நாடு கூட மாறிவிடலாம். ஆனால் நாம் வாழுகின்ற இந்தப் பூமியை விட்டு வேறு எங்கும் சென்று வாழ முடியாது பூமித் தாயை காக்க வேண்டியது ஒவ்வொரு நபரின் கடமை , எந்தவித அதிகாரமிக்க பதவி இல்லாமல் தன்னார்வலர்களுடன் இணைந்து இந்தப் பணியை என்னால் செய்ய முடிகின்றது என்றால், அனைவருக்கும் இது சாத்தியமே என என் மன ஓட்டத்தை கூறினேன். இந்த செயல் ஒன்றும் பெரிய செயல் அல்ல. ஆனால் இயற்கையை பாதுகாக்க நினைக்கும் பலருக்கு உந்து சக்தியாகவும், முன்மாதிரியாகவும் இருக்கும்.
விதைப்பது ஒருமுறை வாழட்டும் தலைமுறை என உரையாற்றினேன்.
ஒரு இலட்சம் மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடுவதற்கு திட்டப்பட்டுள்ள நிலையில் முற்கட்டமாக இன்று 1500 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டன.
இந்நிகழ்வை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு நிதி மற்றும் மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைக்க, சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகாசி - ஏ.எம்.எஸ்.சி.அசோகன், மதுரை தெற்கு - புதூர் மு. பூமிநாதன், வாசுதேவநல்லூர் - டாக்டர் சதன் திருமலை குமார், துணைப்பொதுச்செயலாளர் தி. மு. இராசேந்திரன், உயர் நிலைக் குழு உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் விருதுநகர் மத்தியம் - கம்மாப்பட்டி ரவிச்சந்திரன், விருதுநகர் மேற்கு - ப.வேல்முருகன், விருதுநகர் கிழக்கு - சாத்தூர் எஸ்.கண்ணன், தூத்துக்குடி வடக்கு ஆர்.எஸ்.ரமேஷ், தென்காசி வடக்கு - இல. சுதா பாலசுப்பிரமணியம், மதுரை புறநகர் வடக்கு - எம்- மார்நாடு, மதுரை புறநகர் தெற்கு - கே.பி.ஜெயராமன், மதுரை மாநகர் - எம்.முனியசாமி, சிவகங்கை - பசும்பொன் மனோகரன், இராமநாநபுரம் வி. கே. சுரேஷ், மாநில தொண்டர் அணி பயிற்சியாளர் ஆ. பாஸ்கர சேதுபதி, சிவகாசி மாநகர மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளி ராஜன், ஒன்றியப் பெருந்தலைவர் முத்துலட்சுமி விவேகன் ராஜ், திமுக மாநகர செயலாளர் உதயசூரியன், ஒன்றிய செயலாளர் விவேகன் ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஏ.எஸ்.நாகராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.கணேசன், சிவகாசி மாமன்ற உறுப்பினர் ராஜேஷ், மாநில மீனவர் அணி செயலாளர் M. பேட்ரிக், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் சிவசக்தி குமரேசன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் விநாயகமூர்த்தி, புகழ் முருகன், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் விநாயகா ரமேஷ், மகபூப் ஜான், தீர்மானக் குழு உறுப்பினர் வி.தாமோதர கண்ணன், தணிக்கை குழு உறுப்பினர் பி.ஜி.பாண்டியன், சட்டத்துறை செயலாளர் சூரி.நந்தகோபால், தீர்மானக்குழு உறுப்பினர்கள் ச.சுந்தராஜன், ரஞ்சித், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் சூலக்கரை லட்சுமணன், பொறியாளர் செல்வராஜ், விஸ்வை கணேசன், சாத்தூர் தங்கவேல், மேட்டமலை குணசேகரன், விஸ்வவனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் - கருப்பசாமி, துணைத்தலைவர் காளிராஜன், செயலாளர் ரமேஷ், துணை செயலாளர் கணேஷ்வரன், பொருளாளர் முருகேசன், துணை பொருளாளர் சுரேஷ், திட்டக்குழு உறுப்பினர்கள் அருண் சங்கர், பிரசன்ன கண்ணன், ஜே. சி. ஐ நிர்வாகிகள் மூத்த உறுப்பினர் சங்கர நாராயணன், தலைவர் - அபிராம், திட்ட குழு உறுப்பினர்கள் மால்குடி சுப்புராஜ், ரங்கசாமி, கோவை மாநகர் பயணியர் தியாகு, வெள்ளியங்கிரி, அன்பு தர்மராஜ், விஜயகுமார்,சரவணகுமார், மதுரை புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சுபா. ஆனந்த் , எஸ். புகழேந்தி, எம்.ஆர்.தங்கபாண்டி, க.பாஸ்கரன், ஏ. ரமேஷ், எம்.தவமணி, முருகேசன், ஜெயக்குமார். இளங்குமரன், ஆனந்த், சிவமணி, ஜெயபிரகாஷ், எம்.குமார், சுகுமாரன், தாமரைச்செல்வன், ராதா, முருகன், அண்ணாமலை, கிருஷ்ணன்,செந்தில், காராளம், சேகர், தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் செ.மோகன்தாஸ், குருவிகுளம் ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இராஜகோபால்,
குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன்,
குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார்,
திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் பாலமுருகன், திருவேங்கடம் பேரூர் செயலாளர் சுரேஷ், குருவிக்குளம் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ். அருள்குமார்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், விவசாய அணி அமைப்பாளர் ராஜாராம் பாண்டியன், குறிஞ்சாகுளம் சங்கர், ஆலமநாயக்கன்பட்டி கணேஷ் குமார், பெருங்கோட்டூர் கோட்டியப்பன்,
மாவட்ட பிரதிநிதி ஜலாலுதீன்,
கணேஷ்குமார், கனகராஜ், இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் எல்ஐசி P.ராஜ்குமார்,மாவட்ட துணைச் செயலாளர்கள் பழ சரவணன், என்.பாஸ்கரன், சுகநாதன், மங்களேஸ்வரி முத்துக்குமார், மாநில மாணவரணி துணை செயலாளர் சிவசுந்தர், பரமக்குடி நகர் செயலாளர் பிச்சைமணி, கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் நாக பாண்டி, முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, பரமக்குடி நயினார் முகமது, ம.ராஜ்குமார், மருதகம்ராமர், வேம்ப ராஜா, வேந்தோணி ராமு, மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், வழுதூர் கவியரசன், பொதுவகுடி பாலகிருஷ்ணன், டெய்லர் கஜேந்திரன், பரமக்குடி சோடா சரவணன்,கோவிந்தன்,
ராமநாதன்,உச்சபுளி வேலுச்சாமி,ஆனந்து, நோன்புநாகநாதன், மோகன்,
மணிகண்டன், முகமது அசாருதீன், பாரதி நகர் சரவணன், ராஜகணபதி, மோகன்தாஸ், பசும்பொன் செல்வம், முனீஸ்வரன், ஜோதி ராஜ், முகமது அல்சத், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள்L.S. கணேசன், வனராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் S.தெய்வேந்திரன், ராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் கோவில்பட்டி கிழக்கு - மாரிச்சாமி, கோவில்பட்டி மத்தி - C.சரவணன், புதூர் மேற்கு - காளைச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மறுமலர்ச்சி மனோ, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் யுவன் சித், வார்டு செயலாளர்கள் லியோ செண்பகராஜ், நாக ராஜ், புதூர் பேரூர் செயலாளர் முருகேசன், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் ராமகிருஷ்ணன், தர்மராஜ், மணவாளக் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் உசிலை, புலிப்பாண்டி, எம்.பால்ராஜ், வழக்கறிஞர் அணி உதயராஜா, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சிவகங்கை நகரச் செயலாளர் தீபன் சக்கரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பீனிக்ஸ் முருகன், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காரை கார்த்திக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயின் தாரிக், மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஃபாருக்கான், ராஜமாணிக்கம், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரிஸ்வான், அல்லா பிச்சை, அப்பாஸ், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் காரை முருகேசன், காரைக்குடி நகர துணை செயலாளர் பதினெட்டாம், சிவகங்கை ஒன்றிய பொருளாளர் மின்னல் பிரகாஷ், விருதுநகர் மத்தியம் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் எழில் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கேவி ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சிபி ராமசாமி, முருகன், திருத்தங்கல் நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் சிவகாசி வடக்கு - சுபாஷ் சந்திர போஸ், சிவகாசி மத்தி - பங்காரு சாமி, விருதுநகர் வடக்கு - முரளிதரன், விருதுநகர் தெற்கு - மோகன் குமார், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் பகவதி, விருதுநகர் பொறியாளர் அணி சிவக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் மாரிசாமி, இளைஞரணி செயலாளர் செந்தில், பொறியாளர் அணி துணைச் செயலாளர் விஜய் கருப்பசாமி, விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் தங்கவேல், மாவட்ட துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, R. வாசுகி, ஒன்றிய செயலாளர்கள் விருதுநகர் கிழக்கு - அபிராம், சாத்தூர் கிழக்கு - S.சேதுபதி, அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் S.சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் R. கோதண்டராமர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் அரவிந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் D.வேல்முருகன், சீனிவாசன், ரவீந்திரன், மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர் பச்சமுத்து, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் அமிர்தராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈஸ்வரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் புலி சேகர், பிரதீப் சேதுபதி, விருதுநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர்கள் பரசுராமன், ச.ராமர், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மாரி முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஆர். ராஜ்மோகன், மா.ஜெய்சங்கர், க.பிச்சைராஜு, V. மனோகரன், ஆர் ராமச்சந்திரன், கே.வி.ஆர் நேரு,நகரச் செயலாளர்கள் பி.ஏ.பி.எஸ் கணேஷ்குமார், ப.ஜெயக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருப்பதி ராஜ், தொண்டரணி இருளப்பன், முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயற்கையை காக்க இயன்றதை செய்வோம்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.03.2024

No comments:

Post a Comment