Thursday, March 28, 2024

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தியாகவேங்கை அண்ணன் அ.கணேசமூர்த்தி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன்..!

என் தந்தைக்கு நிகராக நான் போற்றி மதித்த, கழகத்தின் மூத்த தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் அ.கணேசமூர்த்தி அவர்களின் எதிர்பாராத மறைவையொட்டி, ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று அன்னாரின் பூத உடலுக்கு மாலை அணிவித்து என் கண்ணீர் அஞ்சலியை செலுத்திவிட்டு, அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இரங்கல் உரை ஆற்றினேன்.

கழகப் பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்களும் தனது அஞ்சலியை செலுத்தினார்.
என் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், கழகப் பொதுச்செயலாளர் இயக்கத்தந்தை தலைவர் வைகோ எம்பி, திமுக துணைப் பொதுச்செயலாளர் சகோதரி கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அதிமுக தலைமைக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி, மணிமாறன் (அதிமுக), மக்கள் ராஜன் (காங்கிரஸ்), முன்னாள் அமைச்சர் திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைராஜ் (சிபிஎம்), பிரபாகரன் (சிபிஐ), விடியல் சேகர் (தமாக), தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் ஈசன், புரட்சிகர இளைஞர் முன்னணி ஜெயப்பிரகாஷ், தற்சார்பு விவசாயிகள் சங்கம் கி.வே.பொன்னையன், கனகுறிஞ்சி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் இரங்கல் உரை ஆற்றினார்கள்.
கழக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா தி.மு.இராசேந்தின், வழக்கறிஞர் குழந்தைவேலு, முருகன் உள்ளிட்ட கழக மாவட்டச் செயலாளர், பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்று அண்ணன் அ.கணேசமூர்த்தி அவர்களுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்.
கழக வரலாற்றில் அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்..!
வருத்தமுடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
28.03.2024

No comments:

Post a Comment