Thursday, March 28, 2024

மதிமுக தூண் சரிந்தது. ஆழ்ந்த இரங்கல்!

ஈரோடு சோமு திருமண நிகழ்வின் முதல் நாள், இணையதள அணியின் கூட்ட ஏற்பாடு.... இவர் தலைமையில்தான் நடந்தது. ஒவ்வொருவரையும் பேச வைத்து தனது கருத்தை தெரிவித்தார்.

கூடம் பின்னர் மைக்கேல் நல்லா இருக்கீங்களா என விசாரிட்துவிட்டு, வெளிநாடுகளிலும் பல உறுப்பினர்களை இணைத்து கட்சியை நடத்துகிறீர்கள். நல்லா வருவீங்க என்று வாழ்த்தினார். தலைமை கழகம் உங்களை போன்றோரை கவனித்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.
சில சமயம் போனில் கழகம் பற்றி பேசி கழக குடும்ப பாசம் பற்றியும், கழக நலன் பற்றியும் பேசியிருக்கிறோம். என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.
நாடாளுமன்றத்திலே தமிழ்நாடே என் தாய் நாடு என ஒங்கி முழங்கினார்.
ஈரோட்டில் கழகத்தை கட்டி காத்த மாசற்ற மாணிக்கம் மறைந்தது.
அன்பு தலைவர் வைகோ அவர்களுக்கு பெருந்துயரம். தலைவருக்கு பக்கபலமாக இருந்தவரை தலைவர் இழந்திருக்கிறார்.
தியாக வேங்கை திரு கணேசமூர்த்தி MP க்கு ஆழ்ந்த இரங்கல்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
28-03-2024

No comments:

Post a Comment