Friday, October 16, 2020
அருணகிரி அவர்களின் தாயார் மங்கையர்கரசி பழநிசாமி மறைவிற்கு மதிமுகவினர் மலர் மாலை மரியாதை!
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 221-வது நினைவு நாளில் மதிமுகவினர் புகழஞ்சலி!
Thursday, October 15, 2020
தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்துக் கொள்க. வைகோ அறிக்கை!
மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு: நடப்பு ஆண்டில் வழங்க மத்திய அரசு மறுப்பு! வைகோ கண்டனம்!
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவப் போக்கு! வைகோ கடும் கண்டனம்!
Wednesday, October 14, 2020
நடிகர் விஜய் சேதுபதிக்கு அன்பு வேண்டுகோளும், எச்சரிக்கையும்!
இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்ஷே ஒரு நெல்சன் மண்டேலா என புகழ்ந்து, நெல்சன் மண்டேலாவின் தியாகத்தை கொச்சைப்படுத்தியவன் இந்த தமிழின துரோகி முரளிதரன்.
தமிழீழ இனப்படுகொலையில் காணாமல் ஆக்கப்பட்ட 20000 இளைஞர்களுக்காக அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களை மீட்க போராடுகின்றவர்களை நாடகமாடுகிறார்கள் என கொச்சைப்படுத்தியவன் இந்த துரோகி முரளிதரன்.
லண்டனில் ஒரு நிகழ்வில், தமிழ் மக்களிடையே ஒருமுறை தமிழில் பேசுங்கள் என கேட்டபோது தமிழ் தெரியாது என தாய்மொழிக்கு துரோகம் செய்தன் தமிழின துரோகி முரளிதரன்.
அந்த தமிழின துரோகி முரளிதரனின் வாழ்க்கை வரலாறை படமாக்க, சிங்களவன் கொடி பொறித்த ஆடை அணிந்து அவர்களுக்கு சேவகம் புரிவது போல, தமிழின பற்றாளனாக இருக்கும் சகோதரர் விஜய் சேதுபதி நடிப்பது ஏற்புடையதல்ல.
அந்த படத்திலிருந்து விலகி, வருத்தம் தெரிவித்து, பச்சை தமிழனாக வலம் வர வேண்டுமென கேட்கிறேன்.
இனதுரோகிகளுடன் உறவாடி தமிழின துரோகி வரிசையில் இடம்பெற கூடாது எனவும் அன்பு வேண்டுகோள் வைப்பதோடு, சிங்களவனுடன் உறவு தொடருமானால் தமிழ் மக்கள் சினத்திற்கு சின்னாபின்னமாக நேரிடும் என்பதையும் எச்சரிக்கையோடு தெரிவித்துகொள்கிறேன்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
14-10-2020
#VijaySethupathi
மருத்துவப் படிப்புக்கான ஓ.பி.சி. இடஒதுக்கீடு; தமிழக அரசின் அலட்சியப் போக்கு! வைகோ கண்டனம்!
Tuesday, October 13, 2020
முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு வைகோ இரங்கல்!
மாநில அரசை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தரை வெளியேற்றுக. வைகோ அறிக்கை!
Monday, October 12, 2020
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வைகோ கடிதம்!
Saturday, October 10, 2020
விவசாயிகள் பயிர்க்கடன் பெற கூட்டுறவு சங்கங்கள் அலைக்கழிப்பதா? வைகோ கண்டனம்!
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் அக்டோபர் 10 - சூளுரை நாள்!
கரும்பு விவசாயிகளுக்கு உதவிட திவால் சட்ட விதிமுறைகளைத் திருத்துக! வைகோ அறிக்கை!
Thursday, October 8, 2020
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு! வைகோ இரங்கல்!
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தகாவலர்கள் இட மாற்றமா? வைகோ கடும் கண்டனம்!
அ.மா. சாமி மறைவுக்கு வைகோ இரங்கல்!
Wednesday, October 7, 2020
மத்திய அரசின் தொல்லியல் துறையில் உயர்தனிச் செம்மொழி ‘தமிழ்’ புறக்கணிப்பு! வைகோ கண்டனம்!
Sunday, October 4, 2020
மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்!
Saturday, October 3, 2020
மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்!
Friday, October 2, 2020
காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப் பெற முனைந்து செயலாற்றுக. வைகோ வலியுறுத்தல்!
உ.பி. மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை;நீதி கேட்கச் சென்ற ராகுல்காந்தி மீது தாக்குதல்! வைகோ கண்டனம்!
பத்திரிகை செய்தி: தலைமைக் கழக அறிவிப்பு!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழுக் கூட்டம்!
Wednesday, September 30, 2020
குமரி மாவட்ட முதல் பெண் IPS செல்வி பிரவீணா அவர்களுக்கு வைகோ எம்பி அலைபேசியில் வாழ்த்து! குமரி மாவட்ட மதிமுக நேரில் வாழ்த்து!
IPS தேர்வில் வெற்றிப்பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பெண்மணி #செல்வி_பிரவீணா அவர்களை, இன்று இல்லத்தில் சென்று சந்தித்து நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவரும், தென் குமரி கல்வி கழக செயலாளரும், குமரி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக ஆற்றல்மிகு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் S வெற்றிவேல் அவர்கள் சால்வை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.
குமரி மதிமுக மாவட்ட துணை செயலாளர் கொற்றியோடு சுரேஷ் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் பள்ளியாடி குமார் உள்ளிட்ட குமரி மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.
மேலும் தமிழர்களின் தாயகம் வைகோஅவர்கள் #செல்வி_பிரவீணா அவர்களிடம் அலைப்பேசியில் வாழ்த்து கூறினார்கள்.