Saturday, August 26, 2017

அண்ணாவின் 109 ஆம் பிறந்த நாள் மாநாடு ஆலோசனை கூட்டம்!

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் 109 ஆம் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டு ஆலோசனை கூட்டம் இன்று 25-08-2017 ஓமன் தலைநகர் மஸ்கட்டில், ருசைல் பார்க்கில் வைத்து மாலை 3.30 மணி அளவில் நடைபெற்றது.

முருகானந்தம் அவர்கள் வரவேற்றார். சுலைமான் மாஹீன், ஆஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பிரேம் ஜாஸ்பர் நன்றி கூறினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி ஒருங்கிணைப்பாளர் மறுமலர்ச்சி மைக்கேல், தலைமை தாங்கிய ஓமன் இணையதள அணி உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில், கழக கட்டுப்பாடு, தமிழக அரசியல் நிலைப்பாடுகள், மத்திய அரசு தமிழகத்தில் நடத்தும் ஆட்சி முறை, மருத்துவ கல்வி பாகுபாடு, காவிரி டெல்டா வளங்களை திட்டமிட்டு அழிக்கும் மத்திய அரசு போன்ற பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு, கழகம் சம்பந்தமான கருத்துக்களுக்கும், இணையத்தில் இணையதள அணியினரின் பணிகளை பற்றியும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

2017 மாநாட்டு பங்களிப்பை ஓமன் இணையதள அணியும் வளைகுடா நாடுகளுடன் சேர்ந்து இயன்ற அளவு தொகையை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே விண்ணப்பித்திருந்த ஓமன் இணையதள அணி உறுப்பினர்களுக்கு வாழ்நாள் உறுப்பினர் அட்டையும் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதில் அனைவரது ஒத்துழைபுடன், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...

தீர்மானம்:

1. கழக உயர் நிலை குழு எடுக்கும் முடிவே இறுதியானது. அதை கழக கண்மணிகள் பின்பற்ற வேண்டும் என்ற கழக பொதுச் செயலாளர் அறிவுரையை ஓமன் இணையதள அணி பின்பற்றும் என உறுதியளிக்கிறது.

2. மலேசியாவின் பினாங்கு மாகாணத்தில் நடைபெற்ற உலக தமிழர் மாநாட்டிற்கு கழக பொதுச் செயலாளர் வைகோவை, அவர் தமிழரல்ல... ஆதலால் தமிழர் சார்ந்த மாநாட்டில் பங்கேற்க்க அனுமதிக்ககூடாது என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி அவர்களிடத்தில் கூறி, ஜாதி சார்ந்த எண்ணத்தை தமிழகத்தில் விதைக்க நினைக்கும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஓமன் இணையதள அணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இது போன்ற ஜாதி சாயம் பூசி, வன்மத்தை தமிழர்களிடத்தில் விதைத்து தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து அதன் மூலம் சுயலாபம் அடைய துடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.

3. காவிரி டெல்டா பகுதிகளான, நெடுவாசல், கதிராமங்கலம், மாதிரிமங்கலம் போன்ற பல பகுதிகளில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், சேல் கேஸ் போன்றவற்றை எடுப்பதன் மூலம் தென் இந்தியாவின் நெற்களஞ்சியத்தை அடியோடு அழிக்க நினைக்கும் மத்திய அரசு, விவசாய நிலத்தை பாலைவனமாக்கி, மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான இது போன்ற நாசகார திட்டங்களை கைவிட்டு, மக்கள் அன்றாடம் உண்ணும் உணவை விவசாயம் செய்ய பாதுகாப்பு நடவடிக்கை மேற்க்கொள்ளவும், ONGC போன்ற நிறுவனங்களை உடனே இடத்தை காலி செய்துவிட்டு வெளியேற உத்தரவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

4. உடல் நலமில்லாமல் இருக்கும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் கொடுத்ததற்கு தமிழக அரசுக்கு,  ஓமன் மதிமுக இணையதள அணி நன்றியை கூறிகொள்வதோடு, மேலும் ஒரு மாதம் பரோல் கூடுதலாக கொடுக்க, முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி ஆவன செய்ய வேண்டும்.

மேலும் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைப்பட்டிருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோரை நிரந்த விடுதலை செய்யவும் தமிழக அரசுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி வலியுறுத்துதுவதோடு, மூவர் தூக்கு கயிறை அறுத்து அவர்கள் உயிரை காப்பாற்றிய முதுபெரும் வழக்கறிஞர் திரு.ராம் ஜெத்மலானி, கழக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோருக்கும் தமிழர்கள் என்ற முறையில் ஓமன் இணையதள அணி நன்றியை  தெரிவிக்க கடமைபட்டுள்ளது.

5. தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்ப்படுத்த போகும் முக்கியமான மாநாடான 109 ஆம் அண்ணா பிறந்த நாள் விழா செப்டம்பர் 15 மாநாட்டை சிறப்பாக நடத்திட சிரமம் பாராது, பணிகளை செவ்வனே முடித்திட பாடுபடும் ஏற்ப்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஓமன் இணையதள அணி வாழ்த்துதலையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

6. மருத்துவத்தில் உலக முன்னணி மருத்துவர்களை உருவாக்கிய தமிழகத்தின்  மருத்துவ சேவையை, NEET தேர்வின் மூலம் அடியோடு அழிக்க நினைக்கும் மத்திய அரசை கண்டிப்பதோடு, அடுத்த வருடத்திலிருந்து, தற்போது வரை உள்ள நடைமுறையை மீண்டும் செயல்படுத்தி, தமிழகத்திற்கு சிறப்பு விலக்கு அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில்,

1. ம.ஆனந்த்
2.இரா.கோவிந்தராஜன்
3.பெ.ராஜகுரு
4.சி.சுதாகர்
5.ஜெ.பிரேம் ஜாஸ்பர்
6.சுலைமான் மாஹீன்
7.ஆர்.எல்லப்பன்
8.சி.வி.ராஜாராம்
9.எம்.ஆஸ்டின்
10.பி.ஈ.ஜீன்
11.மறுமலர்ச்சி மைக்கேல்

உள்ளிடோர் கலந்துகொண்டு சிறப்பாற்றினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment