Friday, March 23, 2018

தமிழக அரசு அகற்ற முற்படும் மொழிப்போர் தியாகிகள் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தை ஆய்வு செய்தார் வைகோ!

மொழிப்போர் தியாகிகள் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தை, தமிழக அரசு அகற்ற முயலுவதை தடுக்கும் விதமாக, 23-03-2018 காலை 10 மணி அளவில் தியாகிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள மூளக்கொத்தளம் சுடுகாட்டை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தொண்டர்கள் பொதுமக்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மூலக்கொத்தளம் பிரச்சினையில் தெரு தெருவாக சென்று மக்களை திரட்டுவேன். என்னை தாண்டித்தான் மக்கள் மேல் நடவடிக்கை எடுக்க இயலும். எப்பாடு பட்டாவது இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துவேன். வைகோ முன் வைத்த காலை பின் வைக்க மாட்டான் என்ற உறுதி இந்த உலகுக்கே தெரியும். அதே உறுதி இந்த மூலக்கொத்தளம் பிர்ச்சினையிலும் தொடரும் எனவும் வைகோ சூளுரைத்தார். 

மேலும் அவ்விடத்தை ஒட்டிய விளையாட்டு திடலில் விளையாடிய சிறுவர்களும் ஆர்வத்துடன் ஓடி வந்து தலைவரிடம் இனி எங்களுக்கு இந்த இடமும் இல்லாமல் போய் விடுமோ என்று ஆதங்கப்பட்டார்கள்.

அப்போது விக்னேஷ்குமார் என்னும் சிறுவன், இந்த கிரவுண்டில் கால்பந்து விளையாடி மகாராஷ்ட்ரா வரை சென்று தான் பரிசுகள் பல பெற்றுள்ளதாக சொன்ன போது,அந்த சிறுவனை அருகில் அழைத்து பாராட்டி நன்றாகப் படி, அதோடு விளையாடு, மாநில அளவில் கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறு என தோளில் கைபோட்டு அழைத்து வந்து, பாருங்கள் நான் வருங்கால ஸ்டேட்ஸ் பிளேயரோடு வருகிறேன் என்று சொல்லி அந்த தம்பியை ஊக்கப்படுத்தி வாழ்த்தினார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment