Wednesday, April 20, 2016

விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி தொகுதியில் வாக்கு சேகரித்தார் வைகோ!

20.04.2016 இன்று மாலை 4:30 மணிக்கு புதூர் பேருந்து நிலையம் அருகிலும், மாலை 6:00 மணிக்கு விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகிலும், விளாத்திகுளம் தொகுதி தா.மா.க வேட்பாளர் கதிர்வேல் அவர்களுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

இரவு 8:00 மணிக்கு புதியம்புத்தூர் பிரதான சாலையில் _ ஓட்டப்பிடாரம் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் ஆறுமுகநயினார் அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

இரவு 9:05 மணிக்கு தூத்துக்குடி அண்ணாநகர் கார்னரில் தூத்துக்குடி தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Tuesday, April 19, 2016

சங்கரன்கோயில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி தொகுதிகளில் வைகோ பிரச்சாரம்!

19.04.2016 மாலை சங்கரன்கோவிலில் தேரடி வீதியில் -சங்கரன்கோவில் தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் டாக்டர் சதன்திருமலைக்குமார் அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

மாலை 6:30 மணிக்கு புளியங்குடியில் வாசுதேவநல்லூர் தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் சமுத்திரகனி அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

மாலை 7:00 மணிக்கு கடையநல்லூரில்_ கடையநல்லூர் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் கோதைமாரியப்பன் அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

இரவு 8:15 மணிக்கு தென்காசியில்_ தென்காசி தொகுதி தா.மா.க வேட்பாளர் என்.டி.எஸ்.சார்லஸ் அவர்களுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

எங்கும் மக்கள் வெள்ளம். வைகோ பேசிய திசைகளிலெல்லாம் பெருக்கெடுத்த பெருங்காற்று பரவி காணப்படுவது போல பொதுமக்கள் ஆரவாரம். கூட்டணி கட்சிகளின் ஆட்சி அலங்கரிக்கும் மகிழ்ச்சி ஆரவார.

ஓமன் மதிமுக இணையதள அணி

மதிமுக தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி நகரக் கழகப் பொறுப்பாளர் நியமனம்!

தலைமைக் கழகம் அறிவிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த கோவில்பட்டி நகரக் கழகப் பொறுப்பாளர் திரு. எஸ். பால்ராஜ் அவர்கள் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திரு. சி. சரவணன் (முகவரி: த/பெ. சின்னதுரை, எண். 2/107, பெரியார் தெரு, கோவில்பட்டி - 628 501, தூத்துக்குடி மாவட்டம்; கைப்பேசி எண். 94862 - 50524) அவர்கள் கோவில்பட்டி நகரக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

சம்பந்தப்பட்ட கழகத் தோழர்கள் மேற்குறிப்பிட்டவாறு நியமிக்கப்பட்டுள்ள கோவில்பட்டி நகரக் கழகப் பொறுப்பாளர் திரு. சி. சரவணன் அவர்களுடன் தொடர்புகொண்டு கழகப் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

சிவந்தி ஆதித்தன் புகழ் காலத்தைக் கடந்து ஒளி வீசும்-வைகோ!

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் அவர்களுடைய அருமைத் திருமகனும், பத்திரிக்கை உலகில் தமிழகம் அதுவரை கண்டிராத நாளிதழ் புரட்சியின் அடையாளமாக, தன் தந்தையார் தொடங்கிய தினத் தந்தி நாளிதழைப் பன்மடங்கு உயர்த்தி அதிகம் பேர் வாசிக்கும் நாளிதழ் என்ற பெருமையைச் சாதித்தவருமான ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு புகழ் அஞ்சலி நாளில் அப்பெருந்தகையின் உன்னதப் பண்புகள் என் இதயச் சுவர்களில் அழியாத கல்வெட்டாகப் பதிந்துள்ளன.

மனித நேய ஈர நெஞ்சுடன் வறுமையில் வாடியோருக்கும் துன்பத்தில் உழன்றோருக்கும் விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் அவர் செய்த உதவிகள் கணக்கில் அடங்காதவை.

பராக்கிரம பாண்டியன் கட்டிய தென்காசி விசுவநாதர் ஆலயத்தில் அவர் செய்த திருப்பணியால் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் ராஜகோபுரம் போன்றதுதான் அவரது புகழ் வாழ்க்கை.

கைப்பந்து ஆட்டத்தில் இந்தியா உலக அரங்கில் விருதுகள் பெற்றதற்கு முழுமுதல் காரணமான மூலவர் ஐயா சிவந்தி ஆதித்தனார் என்பதை நான் மிக நன்றாக அறிவேன்.

அகில உலக ஒலிம்பிக் கழகத்தில் இந்தியப் பிரதிநிதியாக ஐயா சிவந்தி ஆதித்தனார் இடம் பெற வேண்டும் என்று, அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களிடம் நான் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றாலும், தம் துணைவியாரோடு சென்னை அண்ணா நகரில் உள்ள என் இல்லத்திற்கு வந்து அவர் நன்றி சொன்னதை நான் என்றும் மறவேன்.

அவர் பிணிவாய்ப்பட்டு நினைவு இழந்து சிகிச்சை பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு அவரது உள்ளம் எத்தகைய வேதனைக்கு உள்ளானது என்பதை நான் அறிவேன்.

தமிழ்நாட்டின் புகழ்மிக்க குடும்பங்களுள் ஒன்றான ஐயா ஆதித்தனார் அவர்கள் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைச் சகோதரர்கள், தங்களுடைய பூர்வீகமான காயாமொழி கிராமத்தில் ஐயா சி பா ஆதித்தனார் அவர்களது திரு வுருவச் சிலையைத் திறந்து வைக்கும் பெரும்பேற்றினை எனக்கு வழங்கியமைக்கு எந்நாளும் நன்றி உடையவன்.

திருச்செந்தூர் முருகன் கோவில் தேரோட்டத்தின்போது, பட்டு வேட்டி பட்டுச் சட்டை இடுப்பில் பட்டுத் துண்டுடன் ஐயா சிவந்தி ஆதித்தனார் வடம் பிடிக்கும் காட்சி முருக பக்தர்கள் உள்ளத்தில் எந்நாளும் நிலைத்திருக்கும். அன்னாரது புகழ் காலத்தைக் கடந்து ஒளி வீசும் என தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் திருத்தப்பட்ட சுற்றுப் பயண விவரம்!

மறுமலர்ச்சி தி மு கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

எனவே, ஏப்ரல் 26 ஆம் தேதி வரையிலும் அறிவிக்கப்பட்டு இருந்த வைகோவின் முதற்கட்ட சுற்றுப்பயணத்தில் ஒரு சிறிய மாறுதல் செய்யப்படுகிறது.

திருத்தப்பட்ட சுற்றுப்பயண விவரம்:

ஏப்ரல் 25 திங்கள் காலை கோவில்பட்டி வேட்புமனு தாக்கல்

மாலை: சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பிரச்சாரம்

ஏப்ரல் 26 செவ்வாய் -பிற்பகல் 3 மணி முதல் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், அவினாசி, பெருந்துறை. ஈரோடு மேற்கு தொகுதிகளில் சுற்றுப் பயணம்

ஏப்ரல் 27 புதன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உளுந்தூர்பேட்டை தொகுதி கிராம சுற்றுப்பயணம். தொடர்ந்து விழுப்புரம், மைலம், திண்டிவனம், செஞ்சி தொகுதிகளில் பிரச்சாரம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, April 18, 2016

மதிமுக இணையதள அணி முக்கிய நபர் கைதுக்கு ஒமன் மதிமுக இணையதள அணி கடும் கண்டனம்!

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் குமரி மாவட்ட எல்லையான நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான தமிழின முதல்வர் வைகோவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தியிருக்கின்றனர் திமுகவினர். அதை தடுக்கக்கோரி நெல்லை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தந்திருக்கிறார் காவல்கிணறு பகுதியை சேர்ந்த மதிமுக இணையதள அணி முக்கிய நிர்வாகி வால்டேர் வில்லியம்ஸ் அவர்கள்.

அப்போது அந்த அலுவகத்தில் பணிபுரிந்த திமுக கைக்கூலி காவல்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்கமுடியாது என்ற தொனியில் பேச, அலைபேசியினோடே வாக்குவாதம் ஏற்ப்பட்டிருக்கிறது.

அதனால் மீது பொய் வழக்கு பதிவு செய்து வால்டேர் வில்லியம்ஸ் அவர்களை கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறை சாலையில் கடந்த நான்கு நாட்களாக அடைத்து வைத்து பரோலில் நேற்று வீடு திரும்பியிருக்கிறார். இதை ஓமன் மதிமுக இணையதள அணி கடுமையாக கண்டிக்கிறது. 

குற்றமற்ற வார்த்தை பேசியதற்கு, குற்ற பொருள்படி ஆகிவிட்டதே என சிந்தித்து தாயுள்ளத்தோடு மன்னிக்க வேண்டுகிறேன் என பகிரங்க மன்னிப்பு கேட்ட பிறகும் தான் நெஞ்சில் சுமக்கும் தலைவனின் உருவ படத்தை எரித்தால் புகார் கொடுக்காமல் கொஞ்சி விளையாட வேண்டுமா? இந்திரா காந்தியை எவ்வளவு கேவலமாக வக்கிர புத்தியில் பேசிய பிறகும் கருணா நிதி அவர்கள் மன்னிப்பு கேட்க வில்லையே. இதுதான் உங்கள் தலைவனின் நற்பண்பா? அடக்கி வாசியுங்கள். இல்லையென்றால் அடக்கப் படுவீர்கள்  என அடக்கத்தோடு தெரிவிக்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி

கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோயில், கன்னியாகுமரி தொகுதிகளில் வைகோ பிரச்சாரம்!

மார்த்தாண்டத்தில் இன்று 18-04-2016 மாலை விளவங்கோடு தொகுதி சி.பி.எம்.வேட்பாளர் செல்லச்சாமி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்கு சேகரித்தார். மேலும் கிள்ளியூர் தொகுதி வேட்பாளருக்கும் வாக்கு சேகரித்தார். 

மாலை குளச்சல் மற்றும் திங்கள்சந்தையில் குளச்சல் சட்டமன்ற தொகுதி ம.தி.மு.க வேட்பாளரும் ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தல்களில், அதிக வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் வந்தவருமான சம்பத் சந்திரா அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

இரவு 8:00 மணிக்கு அழகியமண்டபத்தில் பத்மநாபபுரம் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் ஜெகநாதன் அவர்களுக்கு முரசு சின்னத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வாக்கு சேகரித்தார். 



இரவு 9:00 மணிக்கு நாகர்கோவிலில் நாகர்கோவில் தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் இராணிசெல்வின் அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். 


இன்று இரவு 9:30 மணிக்கு சுசீந்திரந்தில் கன்னியாகுமரி தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் ஆதிலிங்கப்பெருமாள் அவர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மதிமுக தீர்மானக்குழுச் செயலாளராக மணிவேந்தன் நியமனம்!

தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணித் துணைச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தீர்மானக்குழுச் செயலாளராக (முகவரி: 5/607, நேரு தெரு, செந்தில் நகர், ஓட்டேரி விரிவுப் பகுதி, வண்டலூர், சென்னை - 600 048; கைப்பேசி எண். 98413 - 21928) நியமிக்கப்படுகிறார் என தலைமை கழக அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, April 17, 2016

ஆண்டிபட்டி, போடி, உசிலம்பட்டி, திருமங்கலம், மதுரை மேற்கு, மதுரை தெற்கு தொகுதிகளில் வைகோ பிரச்சாரம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வைகோ அவர்கள் தனது பிரச்சாரத்தை 17.04.2016 இன்று மாலை தொடங்கி ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களையும், போடி தொகுதி வேட்பாளர் வீரபத்திரன் அவர்களையும் அறிமுகம் செய்து முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.

தொடர்ந்துமதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள தேவர் திருமகனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, தேவர் சிலைக்கு அருகில் உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் ஆ.பாஸ்கரசேதுபதி அவர்களை அறிமுகம் செய்து பம்பரம் சின்னத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வாக்கு சேகரித்து உரையாற்றினார். 

மாலை 7:00 மணிக்கு மதுரை மாவட்டம் செக்கானூரணியில் தேவர் சிலைக்கு அருகில் திருமங்கலம் தொகுதி வேட்பாளர் சீனிவாசன் அவர்களை அறிமுகம் செய்து முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினார். 

மாலை 7:30 மணிக்கு மதுரை மாவட்டம் காளவாசலில் மதுரை மேற்கு தொகுதி சி.பி.எம் வேட்பாளர் வாசுகி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.

இரவு 8:30 மணிக்கு மதுரை மாவட்டம் ஒபிபுல்லாப் படித்துறையில் மதுரை தெற்கு தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் புதூர் பூமிநாதன் அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.

வைகோ அவர்கள் பிரச்சாரம் செய்த இடமெல்லாம் மக்கள் கூட்டம் குவிந்தது. மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா தொண்டர்கள் உற்சாகத்தோடு கலந்துகொண்டு பணியாற்றுகிறார்கள். வருகிற தேர்தல் ஒரு நல்ல மாற்றம் ஏற்ப்படும் என்பதற்கு இந்த மக்கள் கூட்டமே சான்று.

ஓமன் மதிமுக இணையதள அணி