Sunday, June 12, 2016

ஏழு தமிழர் விடுதலைக்கான பேரணி எழுப்பூரில் தொடங்கி கோட்டை வரை!

ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதற்கு எந்த குற்றமும் செய்யாத, பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், சந்திரசேகரன், ஜெயகுமார் உள்ளிட்டோர்  11-06-2016 அன்று 25 ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் கழித்து நிறைவடைந்தது. இதற்கு தமிழக அரசு இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று ஆணையிட்டது. ஆனால் இந்த விடுதலைக்கு மத்திய அரசு முட்டுகட்டை போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 25 ஆண்டு நிறைவடையும் நிலையில், தமிழக அரசின் ஏழுபேர் விடுதலைக்கு ஆதரவு சேர்க்கும் பொருட்டு வாகன பேரணியானது சென்னை எழும்பூரிலிருந்து தமிழக செயலகம் வரை சென்று விடுதலை கோரிய மனுவினை முதல்வரிடத்தில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கையளிக்க தீர்மானிக்கப்பட்டு பேரணி நடந்தேறியது.

அந்த பேரணியில் மதிமுக சார்பில் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் கலந்துகொண்டு வீர முழக்கங்களை எழுப்பினார். அன்பு மணியும் உடனிருந்து முழக்கங்களை எழுப்பினார்.

இந்த விடுதலை பேரணியில், திரு.த.வெள்ளையன், திரு.கோவை ராமகிருஷ்ணன், திரு.விடுதலை ராசேந்திரன், பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன், திரு.அய்ய நாதன், பத்திரிக்கையாளர் திரு.டி.எஸ்.எஸ்.மணி .ஆவல் கணேசன், இயக்குனர்கள் திரு.கவுதமன், விக்ரமன், ரமேஷ்கண்ணா, ஜன நாதன், அமீர், ராம், நடிகர்கள் திரு.சத்யராஜ், திரு.நாசர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதிமுக சார்பில் கழக துணைப் பொதுசெயலாளர் திரு.மல்லை சத்யா, மாவட்ட கழக செயலாளர்கள் திரு.ஜீவன், கழக குமார், சுப்பிரமணி , உள்ளிட்ட பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



பாமக சார்பில் திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலுவும், விடுதலை சிறுத்தைகள் சார்பில் து.பொ.செ. திரு.வன்னி அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சி திரு.வேல்முருகன் மற்றும் பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.


பேரணி நிறைவுபெற்று விடுதலைக்கான மனுவை அற்புதம்மாள் கையளித்தார். அதை அரசு அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

இந்த பேரணி நடைபெற்றுக்கொண்டிர்ந்த போது, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அலைபேசி வாயிலாக பேட்டியளித்த மதிமுக செயலாளர் வைகோ அவர்கள், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் இருந்தாலும், என் மனமெல்லாம் அங்கேதான் இருக்கிறது. எழுவர் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்படி முடியவில்லையென்றால் மூன்று மாதங்களுக்கு மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பரோலிலாவது விட முயற்சி எடுக்க வேண்டும். 



இதில் ஐவரோடு ஒன்றரை ஆண்டு காலம் சிறையில் கழித்திருக்கிறேன். மிகவும் நல்லவர்கள். தனிமைச்சிறையை வெளிக்காட்டி கொள்ளதவர்கள். இவர்கள் விடுதலை செய்யப்பட்டால். தமிழக முதல்வரை வரலாறு வாழ்த்தும். இது உலகெங்கும் வாழ்கின்ற 10 கோடி தமிழர்களின் விருப்பம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என தெரிவித்தார்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment