Friday, June 24, 2016

மதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எழும்பூர் சிராஜ் மஹாலில்  24.06.2016  அன்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் மதிமுக சிறுபான்மை பிரிய செயலாளர் முராத் புஹாரி தலைமை தாங்கினார். கழக முன்னணி தலைவர்கள், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், இஸ்லாம் பெருமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வாசலில் நின்று கூட்டணி தலைவர்களை வரவேற்றார் தலைவர் வைகோ. நிகழ்வுகள் தொடங்க, நோன்பின் பெருமை விளக்கினார் மார்க்க நெறியாளர்,

இந்த இப்தார் விழாவில் ஜி.கே.வாசன் அவர்கள் உரையாற்றும்போது, திரு.வைகோ அவர்கள் சிறுபான்மை மக்களின் நன்மைகளுக்கு பெரும்பான்மை மக்களோடு பாலமாக செயல்படுபவர் என பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலத் தலைவர் திரு.முத்தரசன் அவர்கள் இப்தார் உரையில் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கண்ட தேசம் என்ற பெருமைக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். வஞ்சகமும் சூழ்ச்சியும் தெரியாதவர்கள் நாங்கள். அதனால்தான் நாம் தோற்றோமோ என நினைக்க தோன்றுகிறது. ஊடக நண்பர்கள் வானளாகவும் புகழ்ந்தார்கள். அவர்களே கவிழ்க்கவும் செய்தார்கள் என்றார்.

திருமா தனது உரையில் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம். மக்கள் நலக் கூட்டணியில் தொடருவோம். எடுத்த முயற்சி எந்நாளும் வீண் போகாது. இதுதான் இந்த நிகழ்வில் நாம் எடுத்திருக்கும் செய்தி என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் இராமகிருஷ்ணன் தனது உரையில் மக்கள் நலக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் மத சார்பற்ற தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததை நினைவு கூர்ந்தார்.

தலைவர் வைகோ பேசும்போது விழுந்தவன் எழ முடியும் என்பது போல் நாமும் வெற்றி பெறுவோம் என்றார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment