Wednesday, February 8, 2017

மதிமுக தலைமை நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு!

மதிமுக தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டு, அமைப்பு செயலாளர் வந்தயதேவன் ஆணையாளராக பொறுப்பேற்றார்.

அதன்படி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, ன்று மாலை 3 மணியுடன், வேட்பு மனு திரும்ப பெறும் காலக்கெடு முடிவடைந்துவிட்டதால், போட்டியெதுவுமின்றி, மதிமுக பொருளாளராக ஈரோடு கணேசமூர்த்தி அவர்களும், துணை பொதுச் செயலாளராக ஏ.கே.மணி அவர்களும், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களாக, டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்களும், மருத்துவர் சந்திரசேகரன் அவர்களும், புதூர் பூமிநாதன் அவர்களும், ஜெயசங்கர் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கழகத்தின் உயர்நிலை குழு உறுப்பினர்களாக, வழக்கறிஞர் திருச்சி வீரபாண்டியன் அவர்களும், வேலூர் சுப்பிரமணி அவர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.


வருகிற 26 ஆம் தேதி கோவையில் நடக்கிற பொதுக் குழுவில், இப்போதே அதிகாரபூர்வமாக பொறுப்புக்கு அவர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள். அந்த பொதுக் குழு அவர்களை கர ஒலி எழுப்பி வரவேற்க்க காத்திருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை 4 மணி அளவில் மதிமுக தலைமை கழகமான தாயகத்தில் அறிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment