Saturday, July 15, 2017

ருசைல் பார்க்கில் நடந்த ஓமன் இணையதள அணி கலந்தாய்வு!

ஓமன் மதிமுக இணையதள அணி கலந்தாய்வு நிகழ்வு 14-07-2017 வெள்ளிகிழமை மாலை 3.30 மணி அளவில், ஓமன் தலைநகர், மஸ்கட் ருசைல் பார்க்கில், [மஜான் ஹோட்டல் அருகில்] நடைபெற்றது.

இந்த கலந்தாய்வில் மறுமலர்ச்சி மைக்கேல் தலைமை தாங்க, சுலைமான் மாஹீன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில், கழகத்தின் இன்றைய சூழல், தமிழக அரசின் நிலைப்பாடு, மத்திய அரசு, தமிழீழம் சார்ந்த தலைவர் சிறை வாழ்க்கை போன்றவற்றை கலந்துரையாடினோம்.

பல ஓமன் இணையதள அணி உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், வாழ்நாள் உறுப்பினர்களாகவும் விண்ணப்பித்தார்கள்.

தொடர்ந்து ஓமன் இணையதள அணி உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்:

1. அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழக மக்களின் நலனுக்காக, இன்றளவும் போராடிக்கொண்டிருக்கிற பிறவி போராளி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை, தமிழீழ ராணுவ கட்டமைப்பான விடுதலைபுலிகள் அமைப்பை, தீவிரவாதிகள் என்றும் அதன் உறுப்பினர்தான் வைகோ என்றும் காரணம் காட்டி, மலேசியாவிற்கு வைகோ அச்சுறுத்தல் என்று பிறவி போராளியை கொச்சைப்படுத்திய மலேசிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்

2. துபாய் அமீரக மறுமலர்ச்சி பேரவை முன்னணி தோழர் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்களின், தந்தை மற்றும் சகோதரி அகால மரணத்திற்கும்உடல் நலமின்மையால் மரணமடைந்ததமிழகத்தில் மதிமுக சார்பில், மத்திய கூட்டுறவு வங்கி கன்னியாகுமரி தலைவராக இருந்த ஒரே நபர் சம்பத் சந்திரா அவர்கள் மரணத்திற்கும், 43 ஆண்டுகளாக தனது தமிழீழ விடுதலைக்காக போராடி, 1984 ல் தமிழீழத்தில் நடக்கும் இனகொலைகளை ஓவியமாக வடிவமைத்து ஓவியகாட்சி நடத்தியவருமான, தன் மூச்சை தமிழீழ விடுதலைக்காக பயன்படுத்தியவருமான போராளி ஓவியர் வீர சந்தானம் அவர்கள் மறைவிற்கும் ஓமன் இணையதள அணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது

3தமிழக அரசியலுக்கு திசைகாட்டும் கருவியாக அமையும், செப்டம்பர் 15 ல் தஞ்சையில் மதிமுக நடத்துகிற அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டிற்கு வளைகுடா நாடுகளில் உள்ள மதிமுக அமைப்புகளுடன் ஓமன் இணையதள அணியும் சேர்ந்து நிதி வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment