Wednesday, July 12, 2017

நெல்லை மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ நெகிழ்ச்சி!

நெல்லை மாநகர், புறநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம், தலைவர் வைகோ ஏற்கனவே அறிவித்த சுற்றுபயண திட்டத்தின் படி நேற்று 12-07-2017 மாலை நெல்லையில் நடந்தேறியது.

இந்த கூட்டத்தில் சங்கொலி சந்தாவாக 3 லட்சத்திற்கும் மேல் வழங்கப்பட்டது. 


இதில் பெசிய வைகோ அவர்கள், தமிழ் உரிமைக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் போராடுகிறவர்கள் மீது குண்டர் சட்டம் ஏவுவீர்களானால், இதைத்தான் ஒரு அரசு மிசாவில் ஏவியது. அந்த அரசு இருந்த இடம் தெரியாமல் போனது. பொடாவில் ஏவியது ...அதற்கு பிறகு அரசு பதவி இழந்தது என்றார். 

நேற்றைய சம்பவத்திற்கு பிறகுதான், நான் இன்னும் வாழ வேண்டும் என விரும்புகிறேன். எனக்காக அல்ல, லட்சக்கணக்கான தோழர்களின் எண்ணங்களில் இருப்பதை விட வேறென்ன எனக்கு வேண்டும். இனி உடல் நலத்தில் அக்கறை கொள்கிறேன் என்றார்.

நான் விழுந்த போது என்னை தாங்கி பிடித்தவர் தஞ்சை செயலாளர் திரு.கல்யாணசுந்த்ரம்..அவர்தான் என் முகத்தில் தண்ணீர் தெளித்தார். இதெல்லாம் மாலையில் உட்கார்ந்து மீம்ஸ் பதிவு போடுகிறவர்களுக்கு தெரியுமா  என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

எனக்கு யார் மீதும் பகை இல்லை. காலம் எதிர்பாராத சூழ் நிலையை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். திராவிட இயக்கத்தை காப்பாற்ற நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள்? நான் நலமாக இருக்கிறேன். உங்களுக்காக என் உடல் நிலையை நான் கவனமாக பார்த்துக் கொள்கிறேன். மகிழ்ச்சியா போங்க. தஞ்சை மாநாட்டுக்கு அவசியம் வாங்க என்று பேசினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment