Saturday, July 15, 2017

தமிழீழ இனக்கொலையை சிலை ஓவியமாக வடித்தவர் இறுதி பயணமானார்!

ஓவியர் வீர சந்தானம் அவர்கள் 13-07-2017 அன்று மூச்சு திணறல் காரணமாக காலமானார்கள். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு நினைவில்லாமலிருந்து மருத்துவத்தின் உதவியால் மீண்டெழுது தமிழீழம் சார்ந்த அனைத்து போராட்டத்திலும், தமிழக நலன் சார்ந்த போராட்டங்களிலும் எப்போதும்போல கலந்துகொண்டிருந்தார்.


இந்நிலையில்தான் மூச்சுதிணறல் ஏற்ப்பட்டு காலமானார். இவர் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை நெஞ்சில் சுமந்தார். 1984 கால பகுதியில் தமிழீழ இனபடுகொலையை சித்தரித்து ஓவிய கண்காட்சி நடத்தினார் முதன் முதலாக.



இவருக்கு தமிழீழ தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது. மேலும் தமிழீழ விடுதலை புலிகள் தலைமை செயலகத்திலிருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு அது அனைத்து இணையதளங்களிலும் பரவுகிறது. அந்த இரங்கல் கடிதத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வாசித்தார். அதை ஊடகமும் அனைவருக்கும் அறிவிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் வைத்தார்.



அன்னாரது உடலுக்கு அனைத்து அரசியல் இயக்க தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.



இரங்கல் கூட்டத்தினை தமிழீழ உணர்ச்சி கவிஞர் காசி அனந்தன் தலைமையேற்க, வைகோ ஒருங்கிணைத்தார். நெடுமாறன் முன்னினை வகித்தார்.



அவரது இறுதி ஊர்வலம் இன்று 15-07-2017 மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment