Monday, July 3, 2017

ONGCக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையைக் கண்டித்து பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த பத்திரிகையளர்கள் சந்திப்பு!

கதிராமங்கலத்தில் ONGCக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையைக் கண்டித்தும், போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தியும்  பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த செய்தியாளர் சந்திப்பு இன்று 03-07-2017 சென்னை பத்திரிகையாளர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில மதிமுக துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்யா திரு.ஜவாஹிருல்லா, ம.ம.க., திரு.வேல்முருகன், த.வா.க., திரு.வன்னியரசு, வி.சி.க., திரு.சுப.உதயகுமார், பச்சைத் தமிழகம்., திரு.தெகலான் பாகவி எஸ்.டி.பி.ஐ., திரு.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது:-

கைது செய்யப்பட்ட பேரா.செயராமன் உள்ளிட்ட 10பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை கைவிட வேண்டும்.

அதிகளவில் கதிராமங்கலத்தில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.

ONGC காவிரி படுகையில் மேற்கொண்டு எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது.

காவிரி டெல்டா பகுதியை பாதுக்காக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment