மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் நாள் அன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, சென்னை - நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 8.30 மணிக்கு நாதசுவர இசையுடன் தொடங்கி நடைபெற உள்ளது.
இம்மாநாட்டிற்கு கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமை தாங்குகிறார்.
துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி அவர்கள் மாநாட்டினைத் திறந்து வைக்கிறார்.
அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் ஈழ வாளேந்தி அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்கள் தந்தை பெரியார் சுடரினையும், மாநில மகளிர் அணிச் செயலாளர் டாக்டர் ரொஹையா அவர்கள் பேரறிஞர் அண்ணா சுடரினையும் ஏற்றி வைக்கிறார்கள்.
கழக தணிக்கைக் குழு உறுப்பினர் டி.டி.அரங்கசாமி அவர்கள் திராவிட இயக்கக்
கண்காட்சியையும், கழக உயர்நிலைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் செ.வீரபாண்டியன் தமிழ ஈழக் கண்காட்சியையும் திறந்து வைக்கின்றார்கள்.
திமுக தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகிறார்.
முற்பகல் நிகழ்ச்சியில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முற்பகல் நிகழ்ச்சியில் நிறைவுரை நிகழ்த்துகிறார்.
திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஆரணி டி.ராஜா அவர்கள் தந்தை பெரியார் படத்தினையும், கழகத் தீர்மானக் குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன் அவர்கள் பேரறிஞர் அண்ணா படத்தினையும், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.வெற்றிவேல் அவர்கள் டாக்டர் நடேசனார் படத்தினையும், கழக உயர்நிலைக் குழு உறுப்பினர் இசைவாணன் குடியரசு அவர்கள் சர்.பிட்டி.தியாகராயர் படத்தினையும், மாநில மகளிர் அணித் துணைச் செயலாளர் மல்லிகா தயாளன் அவர்கள் டி.எம்.நாயர் படத்தினையும் திறந்து வைக்கிறார்கள்.
மாநாட்டு நிதிக்குழு தலைவராக ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்களும், பந்தல் அலங்காரக் குழுத் தலைவராக தென்சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கழககுமார், உபசரிப்புக் குழுத் தலைவராக கழக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி அவர்களும் கடமையாற்றுவார்கள்.
கழகக் கொள்கைவிளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம் அவர்கள் தொகுப்புரை வழங்குவார். கழகத் தீர்மானக் குழுச் செயலாளர் ஆவடி இரா.அந்திரிதாஸ் அவர்கள் மாநாட்டுத் தீர்மானங்களை வாசிப்பார்.
அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் உதயம் கோ.இராதா, கழக இலக்கிய அணிச் செயலாளர் கவிஞர் கோமகன், மாவட்டப் பொறுப்பாளர்கள் - வடசென்னை மேற்கு டி.சி.இராஜேந்திரன், காஞ்சிபுரம் கிழக்கு ஊனை ஆர்.இ.பார்த்திபன், காஞ்சிபுரம் மேற்கு இ.வளையாபதி, காஞ்சிபுரம் வடக்கு மா.வை.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
மாலையில், சொற்பொழிவாளர்கள் உரை நிகழ்த்துகிறார்கள். அதன்பிறகு,
காஷ்மீர் முன்னாள் முதல்வர் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களும், மத்திய முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா அவர்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலங்கள் அவைக் குழுத் தலைவர் டெரிக் ஓ பிரியன் அவர்களும் உரை நிகழ்த்துகிறார்கள்.
அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர் புலவர் சே.செவந்தியப்பன், கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் நாசரேத் துரை, துரை.பாலகிருஷ்ணன், கழக அவைத் தலைவர் சு.துரைசாமி ஆகியோரும் உரை நிகழ்த்துகிறார்கள்.
நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.
காலை 9 மணிக்கு நெல்லை அபுபக்கர் இன்னிசை நிகழ்ச்சியும், மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை ஒரத்தநாடு கோபு மற்றும் ஒரத்தநாடு கணேஷ் குழுவினர் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
தென்சென்னை மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் சைதை ப.சுப்பிரமணி நன்றியுரை நிகழ்த்துகிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 16-08-2019 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment