மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நியூட்ரினோ எதிர்ப்புப் பிரச்சாரப் பயணம் 2019 ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேனி மாவட்டக் கழக ஆலோசனைக் கூட்டம் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மதுரை, அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும், 19.08.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மதுரை, அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டங்களில் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார் என தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 13-08-2019 தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment