2019 செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 111 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு தமிழகம் முழுவதும் மாவட்டக் கழக கூட்டங்கள் ஒன்றிய நகர கழக கூட்டங்கள் நடத்தி மாநாட்டு பணிகளை துரிதப் படுத்த வேண்டும். கழகம் நடத்துகிற இந்த மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பெற இருக்கிறது.
மாநாட்டுக்கான வாகன ஏற்பாடுகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு நகரம் ஒன்றியம் வாரியாக ஏற்பாடு செய்யப்படும் வாகனங்கள் பற்றிய விவரங்கள், வாகனங்களின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 13-08-2019 அன்று தெரிவித்த்ள்ளார்.
No comments:
Post a Comment