Saturday, December 14, 2019

உலக கோப்பை கால்பந்து போட்டியை காண வைகோவுக்கு கத்தார் அழைப்பு!

2020 ஏப்ரல் 6 முதல் 9 வரை கத்தார் நாட்டில் நடைபெறுகின்ற உலக வணிக மாநாட்டு அமைப்பின் தலைவர் யூசுப் அஞ்சாஃபர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்று 14-12-2019 தாயகம் வருகை தந்தனர்.

கத்தார் நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் திங்கள் 6 ஆம் தேதி தொடங்கி, நான்கு நாள்கள் நடைபெறவுள்ள, “உலக வர்த்தகர்கள் மாநாட்டில்" International Business Delegation Summit சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை தாயகத்தில் சந்தித்து என அழைப்பு விடுத்தனர்.

மறைந்த கோவி. சுரேசுகண்ணன் அவர்கள் மகளுக்கு மதிமுக இணையதள அணி சார்பாக பொதுச் செயலாளர் வைகோ கல்வி நிதி கையளிப்பு!

மதிமுக இணையதள அணியில் செயல்பட்டுக்கொண்டிருந்த தோழர் கோவி. சுரேசுகண்ணன் சமீபத்தில் உடல் நல குறைவால் மறைந்தார். அவருக்கு புகழஞ்சலி கூட்டம் தாயகத்தில் 14-12-2019 நடந்தது. அதில் அவரது மகள் கல்வி நிதிக்காக இணையதள தோழர்கள் வழங்கிய ரூபாய் 2,55000த்தை அவரது குடும்பத்தாரிடம் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வழங்கி புகழஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.

Friday, December 13, 2019

மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வெற்றிச்சின்னம் பம்பரம் வெல்லட்டும். 2019 உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக் குழு, மாவட்டக் குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு மதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனைப் பெறுவதற்கு, தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைப்படி, "தேர்தல் அறிவிக்கை (Notification) வெளியிடப்பட்ட மூன்று தினங்களுக்குள் தமிழகம் முழுவதும் போட்டியிடும் இடங்கள் குறித்த பட்டியல் அளிக்க வேண்டும்."    

அங்கீகரிக்கப் படாத கட்சியான மறுமலர்ச்சி தி மு க வின் வேட்பாளர் என்றும்,  பம்பரம் சின்னம் கேட்டும்  வேட்புமனுக்களை உரிய காலத்தில் தாக்கல் செய்யலாம். வேட்பு மனு வாபஸ் பெறும் நாளன்று பிற்பகல் 3 மணிக்கு முன்பாக  சின்னம் பெறுவதற்குரிய A, B படிவங்களை வழங்கிட வேண்டும். (இதில் அலட்சியம் கூடாது)  பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கையொப்பமிட்ட  A , B படிவங்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு தாயகத்தில் இருந்து ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.  கவனமுடன் கடமை ஆற்றி பணி முடிப்போம்.  இயக்கத்தின் மானம் காக்க களங்காணும் மறுமலர்ச்சி சொந்தங்களை வரலாறு வாழ்த்தட்டும்.

கோத்தபாய இராஜபக்சேவுடன் என்ன பேசினீர்கள்? வைகோ கேள்விகளுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 2762.
வைகோ: கீழ்காணும் கேள்விகளுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) இந்திய-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்காக, இலங்கைக் குடியரசுத் தலைவருடன் அரசு பேசியதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
(இ) இலங்கைக் குடியரசுத் தலைவர் இந்தியா வருகின்றாரா?
(ஈ) அவ்வாறு இருப்பின், இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்ற ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவது குறித்து அவருடன் இந்திய அரசு பேசுமா?
(உ) இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள, தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படுவது குறித்தும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தும் அரசு பேசுமா?
அ முதல் உ வரையிலான கேள்விகளுக்கு,
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அளித்துள்ள விளக்கம்:
பிரதமரின் சிறப்புத் தூதராக, வெளியுறவுத்துறை அமைச்சர், நவம்பர் 19 ஆம் நாள் இலங்கைக்குச் சென்றார். இந்தியாவுக்கு வருகை தருமாறு, இலங்கை குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தார்.
நவம்பர் 28-30 ஆகிய நாள்களில், இலங்கை குடியரசுத் தலைவர் இந்தியா வருகை தந்தார். குடியரசுத் தலைவரையும், தலைமை அமைச்சரையும் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து, அனைத்துக் கோணங்களிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
மக்கள் ஆட்சிக் கோட்பாட்டில் பற்றுக் கொண்டுள்ள, பன்முகத்தன்மை வாய்ந்த, மனித உரிமைகளை மதிக்கின்ற, ஒன்றுபட்ட இலங்கைக்குள், அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, அனைத்துத் தரப்பினருக்கும் இணக்கமான ஒரு தீர்வு காண வேண்டும் என்றும்;
அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும், இந்திய அரசு வலியுறுத்தியது.
அதற்கு, இலங்கை குடியரசுத் தலைவர், எனக்கு வாக்கு அளித்தவர்களுக்கு மட்டும் அல்ல, எனக்கு வாக்கு அளிக்காதவர்கள், இனம், மத அடிப்படையிலான அனைத்துத் தரப்பினருக்கும் நான் குடியரசுத் தலைவர். இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்கும் கடமை ஆற்ற நான் உறுதி பூண்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்.

Wednesday, December 11, 2019

தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடி - வைகோ அறிக்கை!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், தொகுதி-1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடைய பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது.  துணை  ஆட்சியர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் பொறுப்புக்காக நடைபெறுகின்ற இந்தத் தேர்விற்கான நேர்காணல், வருகின்ற டிசம்பர் 23 ஆம் நாள் முதல் நடைபெறுகின்றது.

அதில் கலந்து கொள்பவர்களுடைய மதிப்பு எண்களை, பேனாவால் எழுதக்கூடாது; கண்டிப்பாகப் பென்சிலால் மட்டுமே எழுத வேண்டும் என, தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு, அறிவுறுத்தி இருப்பதாக அறிகின்றேன். மதிப்பு எண்களைத் திருத்தி, தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்வதற்காக, இத்தகைய ஏற்பாடு நடைபெற்று வருகின்றது.  இந்த 21 ஆம் நூற்றாண்டில், கணினிகளின் காலத்தில், வெளிப்படையாக ஒரு மோசடி நடைபெற இருக்கின்றது. அதையும், தமிழக அரசே நடத்தப் போகின்றது என்பது மிகவும் வேதனைக்கு உரியது. கிராமப்புறங்களைச் சேர்ந்த,  ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த, எந்தப் பின்புலமும் இல்லாத, தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற இந்தக் கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மதிப்பு எண்களைக் கணினியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அனைத்து நேர்காணல்களையும், காணொளிப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 11-12-2019 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்! மாநிலங்கள் அவையில் வைகோ!

குடி உரிமைத் திருத்தச் சட்ட முன்வரைவின் மீதான விவாதத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று 11.12.2019 ஆற்றிய உரை வருமாறு:-
யமுனா நதிக்கரையில் எரிக்கப்பட்ட உலக உத்தமர் காந்தி அடிகளின் எலும்புத் துகள்கள் இன்று இந்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதை அறிந்து நடுங்கி இருக்கும்.
மக்கள் ஆட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரான, வெறுப்பு ஊட்டுகின்ற, அதிர்ச்சி அளிக்கின்ற, முறையற்ற, மன்னிக்க முடியாத, நேர்மை அற்ற, குடி உரிமைச் சட்டத் திருத்த முன்வரைவு, இன்று இந்த மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்படுமானால், அது இந்த அவையின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் ஆகி விடும்.
இந்தச் சட்டம், சமூகத்தின் ஒரு பிரிவினரை, எதிரிகளாகக் காட்ட முனைகின்றது. சுருக்கமாக, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் உள்ள, முஸ்லிம்கள் அல்லாத மக்களுக்கு, இந்தியாவில் குடி உரிமை அளிக்கப்படும் என வரவேற்கின்றது.
ஆனால், நீண்டகாலமாக இந்தியாவில் இருக்கின்ற, இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள், மியன்மர் நாட்டில் இருந்து வந்த ரொகிங்யா முஸ்லிம்கள் ஆகிய அகதிகளின் நிலை குறித்து, இந்தச் சட்டத்தில் எந்த அறிவிப்பும் இல்லை. மேலும், அண்டை நாடுகளில் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கின்ற ஷியா மற்றும் அகமதியா முஸ்லிம்கள், இந்தியாவில் குடிஉரிமை கோருவதை, இந்தத் திருத்தம் தடை செய்கின்றது.
இது சமத்துவத்திற்கு எதிரான தாக்குதல்; மதச்சார்பு இன்மைக்கு எதிரான தாக்குதல்; மக்கள் ஆட்சிக் கோட்பாட்டின் மீதான தாக்குதல்.
இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு துறை விற்பன்னர்கள், அறிவியல் ஆராய்ச்சி அறிஞர்கள், இந்தச் சட்டத்திருத்தத்தைக் கண்டித்து இருப்பதுடன், உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த வேண்டுகோளில் கையெழுத்து இட்டு இருப்பவர்கள், முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பன்னாட்டு அறிவியல் கோட்பாடுகள் ஆய்வு மைய அறிஞர் ராஜேஷ் கோபகுமார், டாடா ஆய்வு மையத்தின் சந்தீப் திரிவேதி, இராமன் மக்சேசே விருது வென்ற சந்தீப் பாண்டே, எஸ்.எஸ். பட்நாகர் விருது வென்ற ஆதிஷ் தபோல்கர், ருக்மணி பாயா நாயர், சோயா ஹசன், ஹர்பன்ஷ் முகியா உள்ளிட்ட அறிஞர்கள் அந்தக் கோரிக்கை விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.
கீழ்காணும் கருத்தை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்திய விடுதலைப்போராட்டத்தில் முகிழ்த்த இந்திய நாடு எனும் கருத்து, அரசியல் சட்டத்தால் உருப்பெற்றது. அனைத்து சமய வழிபாட்டு நம்பிக்கை கொண்ட மக்களையும் சமமாகப் பேண உறுதி பூண்டுள்ளது. இங்கே, மதம் என்ற அளவுகோல் கொண்டு வரப்படுமானாமல், அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது ஆகும். இந்தச் சட்டத்திருத்த முன்வரைவில், முஸ்லிம்கள் மட்டும் நீக்கப்பட்டு இருப்பது, இந்த நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் என நாங்கள் அஞ்சுகின்றோம். இதுகுறித்து, சட்ட அறிஞர்கள்தான் ஆய்வு செய்து கருத்துக் கூற வேண்டும் என்றாலும், எங்கள் பார்வையில், இது உணர்வுகளை மீறுகின்றது.
ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி, எங்கள் பெண்கள், எங்கள் சகோதரிகள், எங்கள் மக்கள் படுபயங்கரமாக, குரூரமாகக் கொலை செய்யப்பட்டனர். ஏதிலிகளாக வந்த அவர்களைப் பற்றி இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை, அவர்கள் குடி உரிமையைப் பற்றி யோசிக்கக்கூட இவர்களுக்கு மனம் இல்லை. இரத்தம் தோய்ந்த கரங்களோடு வந்த இலங்கை அதிபரோடு கை குலுக்கி, கொஞ்சிக் குலாவத்தான் உங்களுக்கு நேரம் இருந்தது. ஈழத்தமிழர்களைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லை.
இந்தச் சட்டத்தை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்.
இவ்வாறு, வைகோ நாடாளுமன்றத்தில் 11-12-2019 அன்று பேசினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டினர்.

Tuesday, December 10, 2019

முஸ்லிம் பெண்ணின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்ட இந்து சகோதரர்-மணவிழாவில் நல்லிணக்கம்!

8-12-2018 அன்று  மதிமுகவின் வளைகுடா அமைப்பாளர் பஷீர், மனிதநேய ஜனநாயக கட்சியின் பஹ்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் ஆகியோரின் சகோதரி நசீபா முனவராவுக்கும், மணமகன் சம்சுதீன் அவர்களுக்கும் நிக்காஹ் எனும் வாழ்க்கை ஒப்பந்த நிதழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின்  பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA  தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார்.

இதில் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திமுக இலக்கிய அணி செயலர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர்  நிஜாமுதீன், தமிழக மக்கள் ஐனநாயக கட்சி தலைவர் KM ஷெரீப் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பிறகு அமைச்சர் காமராஜ் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

இத்திருமணத்தில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

மணமகள் குடும்பத்தினரான வல்லம் பஷீரும், வல்லம் ரியாசும்  தந்தையை இழந்தவர்கள். 

அவர்களது  குடும்பத்தை , தந்தை ஷேக் தாவூதின்  நண்பர் வடுவூர் ரவி அவர்கள், தன் குடும்பத்தோடு குடும்பமாக அன்பு காட்டி  அரவணைத்து நட்புக்கு மரியாதை செய்து வருகிறார்.

தன் நண்பரின் மகன் வல்லம் பஷீரின் திருமணம் போலவே, அவரது தங்கையின்  திருமணத்தையும் முன்னின்று  நடத்தி கொடுத்துள்ளார்.

தங்கள் தந்தையின் நண்பரை மதிக்கும் வகையில் ,சகோதரர்கள் வல்லம் பஷீரும், ரியாசும் , இஸ்லாமிய வழக்கப்படி,திருமண ஒப்பந்தத்தில் மணமகளின் இரு சாட்சிகளில் ஒருவராக ரவி அவர்களை கையெழுத்திட முடிவு செய்தனர்.

அவ்வாறே  நிக்காஹ் படிவத்தில் கையழுத்திட செய்து அவரை கெளரவப்படுத்தி உள்ளனர்.

வல்லம்  ஜமாத்தும் இந்த நல்லுறவை  பாராட்டும் வகையில், அதை அனுமதித்து சிறப்பித்துள்ளது.

இதை திருமண நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

இது தான் நமது தமிழ் மண்ணின் மதச்சார்பின்மை என தமிமுன் அன்சாரி MLA கூற, இந்த உறவுகளை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்று அதை வழிமொழிந்தார்  தனியரசு MLA .

மணமக்களை நிறைவாக வாழ்த்திய வைகோ அவர்கள்  இந்த நட்பும், உறவும்தான் இத்திருமணம் மூலம் இந்தியாவுக்கு நாம் சொல்லும் செய்தி என்று பூரித்தார்.

தமிழக அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்துவதா? மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு பணியாளர் தேர்வாணையம் (Staff Sellection Commission-SSC), வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personel Selection -IBPS), ரயில்வே தேர்வு வாரியம் (Railway Recuirtment Board -RRBS) போன்ற அமைப்புகள் மூலம் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மத்திய பா.ஜ.க. அரசு தற்போது இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து, மத்திய அரசின் பணியாளர் பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் சார்பில், பணியாளர் மற்றும் பயிற்சி நிறுவனம் 2 டிசம்பர் 2019 இல் ஒரே பொதுத் தகுதித் தேர்வு (Common Eligibility Test -CET) நடத்திட அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி மத்திய அரசின் குரூப்-பி கெசட்டட் பணிகள், கெசட்டட் அல்லாத குரூப்-பி பணிகள் மற்றும் குரூப்-சி பணி இடங்களுக்கு ஒரே பொதுத் தகுதித் தேர்வு (செட்) நடத்தப்படும். இதற்காக மத்திய அரசு தனியாக ஒரு முகவாண்மை நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டு இருக்கிறது.

நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு எழுதுவோர்களின் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, ஒரு தர வரிசைப் பட்டியல் உருவாக்கப்படும். மத்திய அரசு மற்றும் மாநில அரசின் காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கு மேற்கண்ட தர வரிசைப் பட்டியலில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர்.

மத்திய அரசு உருவாக்கும் முகவாண்மை நிறுவனத்துடன் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, மாநில அரசுப் பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ‘செட்’ எழுதித் தேர்வு பெற்றவர்களைப் பெறலாம். இனி மாநில அரசுகள் தனியாக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தகுதித் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு மத்திய அரசின் பொது அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே கலாச்சாரம்; ஒரே கல்வி; ஒரே குடும்ப அட்டை என்று நாட்டையே ஒரு குடையின் கீழ் கொண்டுவரத் துடிக்கும் பா.ஜ.க. அரசு, மத்திய, மாநில அரசு பணியாளர்கள் தேர்வுக்கும் ஒரே தகுதித் தேர்வு நடத்தத் திட்டமிட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

மாநில அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தகுதித் தேர்வு நடத்தி, காலிப் பணியிடங்களை நிரப்பும் முறையை ஒழித்துக்கட்டி விட்டு, இனி மாநில அரசு ஊழியர்களாக வட மாநிலங்களில் இருந்துகொண்டு வந்து தமிழ்நாட்டில் திணிப்பதற்கான சதித் திட்டத்தை அரங்கேற்றவே இத்தகைய அறிவிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இரயில்வேத்துறை, என்.எல்.சி. இந்தியா, பாரத் மிகுமின் நிறுவனம், வங்கிகள், சுங்கத்துறை உள்ளிட்டவற்றில் வெளி மாநிலங்களிலிருந்து ஊழியர்கள் பணி நியமனம் பெறும் நிலையும், தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் நிலையும் இருப்பதை மாற்ற வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளில் 90 விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக தமிழகம் குரல் எழுப்பி வருகிறது.

ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு, ஒரே பொதுத் தகுதித் தேர்வு என்ற பெயரில், மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறித்து, ஒற்றை ஆட்சிமுறைக்கு நாட்டைத் தயார் செய்து வருகிறது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் உள்நோக்கத்தை முறியடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வேலையற்ற 90 இலட்சம் பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசின் சதித் திட்டத்திற்கு அ.தி.மு.க. அர சு துணை போகக்கூடாது. பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள ‘பொதுத் தகுதித் தேர்வு’ அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 08.12.2019 தெரிவித்துள்ளார்.

பாடத் திட்டங்களை மாற்றுகின்றீர்களா? வைகோ கேள்விக்கு அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண்: 567

கீழ்காணும் கேள்விகளுக்கு, மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

(அ) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், (The National Council of Edcuational Research and Training-NCERT), இந்திய அளவில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கத் திட்டம் வகுத்து இருக்கின்றதா? அதற்காக, ஏதேனும் குழு அமைக்கப்பட்டு இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

(ஆ) எந்தெந்த வகைகளில் மாற்றங்கள் செய்யத் திட்டம் வகுக்கப்படுகின்றது?

(இ) தரமான கல்வி, சமத்துவம், சம பங்கு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இணக்கமான பாடத்திட்டத்தை வகுப்பது குறித்துக் கவனம் செலுத்தப்படுகின்றதா?

(ஈ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

(உ) திறன் மேம்பாடு, தொழிற்பயிற்சிகள் குறித்து, கவனம் செலுத்தப்படுகின்றதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அளித்து இருக்கின்ற விளக்கம்:

(அ) ஆம். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 2005 ஆம் ஆண்டு வகுத்த  பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டு இருக்கின்றோம். அதன்படி, மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, அவர்கள், உள்ளக கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி வருகின்றார்கள்.

இதற்கு இடையில், தேசிய கல்விக்கொள்கையை (National Education Policy) வரைவதற்காகப் பொறுப்பு அளிக்கப்பட்டு இருந்த குழு, தனது அறிக்கையை வழங்கி இருக்கின்றது. அதுகுறித்து, அரசு ஆராய்ந்து வருகின்றது. அந்த அடிப்படையில், புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள இருப்பதால், மேற்கண்ட பாடத்திட்டங்களில் மாறுதல் செய்வது குறித்து ஆராய, தனியாக குழு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

(ஆ) கல்வியில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் இனம் காணப்பட்டு உள்ளன.



1. மதிப்புக் கல்வி (Value Education )

2. பண்பாட்டு மரபு வளம். (Cultural Heritage)

3. பயிற்சிகளின் வழி கற்றல் (Experiential learning)

4. உடல்நலம், உடல் இயக்கப் பயிற்சிகள், விளையாட்டு. (Health, Physical Education and Sports)

5. தேசிய அளவில் முன்னுரிமை மற்றும் முயற்சிகள். (National Priorities and initiatives)

6. பள்ளிகளில் தர மதிப்பிடுதல் மற்றும் தேர்வு முறைகளில் மாற்றம் (School based Assessment and Examination reform)

7. கல்வி நுட்ப இயல் (Educational Technology)

8. தொழில் பயிற்சிக் கல்வி (Vocational Education)

இ மற்றும் ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:

ஆம். தற்போதைய பாடத்திட்டத்திலேயே, குறுக்கிலும் நெடுக்கிலுமாக,  சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இணக்கமான வகையில், தரமான கல்வி, சமத்துவத்திற்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. அவைதாம், அடித்தளம்; அதன் மீதுதான், பாடத்திட்டம் வகுக்கப்பட்டு இருக்கின்றது.

(உ) ஆம். தொழிற் கல்வியில், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தொழிற் பயிற்சி வகுப்புகள் இடம் பெறும்‌ என 7-12-2019 தாயகம் அறிக்கையில் தெரிவிக்கப்பபட்டுள்ளது. 

Friday, December 6, 2019

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!

சட்ட மாமேதை, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று 06-12-2019 அன்று, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர்  வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்  .

உயர்நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், டி.சி.இராஜேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தேனி நியூட்ரினோ திட்டம் குறித்து வைகோ கேள்விகளுக்கு பிரதமர் துறை அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண்: 1992

கீழ்காணும் கேள்விகளுக்கு, பிரதமர் விளக்கம் தருவாரா?

(அ) தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா?

(அ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

(இ) மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழலைக் கெடுக்கும் அந்தத் திட்டத்திற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்களா?

(ஈ) அவ்வாறு இருப்பின், அப்பகுதி மக்களிடம் அரசு கருத்துக் கேட்டு இருக்கின்றதா? இயற்கைச் சூழல் பாதுகாப்பு குறித்து, நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கின்றதா?

(உ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

(ஊ) அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்தத் திட்டம் கைவிடப்படுமா?

மேற்கண்ட கேள்விகளுக்கு, பிரதமரின் சார்பில், அவரது துறைகளுள் ஒன்றான பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள விளக்கம்:

அ, ஆ  ஆகிய கேள்விகளுக்கு விளக்கம் ஆம். இந்தியத் தளத்தில் இருந்து நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்யும் திட்டத்தை, (India Based Neutrino-INO) தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றது.

இ முதல் ஊ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

அந்தத் திட்டத்திற்கு, அந்தப் பகுதியில் உள்ள சில பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே, தேனி, மதுரை மாவட்டங்களில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு, நியூட்ரினோ திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.

2018 ஆம் ஆண்டு, மே மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலும், இது தொடர்பாக தமிழகம், கேரளத்தில் உள்ள நகரங்களில், விழிப்பு உணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் அழைத்து வரப்பட்டு, நியூட்ரினோ வளாகத்தில் தற்போது இயங்கி வருகின்ற 85 டன் எடை கொண்ட, சிறிய அளவிலான, கேஸ்மிக் கதிர்களைக் கண்டு அறிகின்ற கருவியின் இயக்கம் குறித்து விளக்கம் தரப்பட்டது. ஆனால், அது அங்கே 2 கிலோமீட்டர் நீளத்திற்கு கிடைமட்டத்தில் குடையப்படுகின்ற குகைவழியின் ஒரு முனையில் இடம்பெறக்கூடிய ஒரு சிறிய கருவிதான்.

2010 ஜூன் மாதம்,  தேனி மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறையின் சார்பில், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

அந்தக் கூட்டத்தில், ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்ட 1200 பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள், நியூட்ரினோ திட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்கான, அனைத்து வகையான சட்டத்தேவைகளும், விதிகளும், நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டம் அமைகின்ற பகுதி, கஸ்தூரி ரெங்கன் தலைமையிலான உயர்நிலைக்குழு (High Level Working Group)வரையறுத்து, சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை வெளியிட்டு இருக்கின்ற F-1-4/2012 RE (Pt) நாள் 13.11.2013 வரையறையின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Thursday, December 5, 2019

சூடான் தீ விபத்து:3 தமிழர்கள் உட்பட 23 பேர் பலி. இந்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்-வைகோ அறிக்கை!

சூடான் நாட்டுத் தலைநகர் கார்டோமில் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிற்சாலையில் பணி செய்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், வெங்கடாசலம், ராஜசேகர் ஆகிய மூன்று தமிழர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும்,ஜெயக்குமார், முகமது சலீம், பூபாலன் உள்ளிட்ட 130 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் ஜெயக்குமார் என்பவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வருகின்ற தகவல்கள் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருகின்றது.

தீ விபத்தில் சிக்கியவர்களின் நிலையை அறிய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர் என்றும், தீ விபத்து குறித்த தகவல்களைப் பெற சிறப்புத் தகவல் மையமும் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியத் தூதரகம் விரைந்து செயல்பட்டு, தீ விபத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் உடல்களை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்  கேட்டுக்கொள்கின்றேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ‌ தனது அறிக்கையில் 05-12-2019 தெரிவித்துள்ளார்.

Wednesday, December 4, 2019

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று அறிவிக்க வேண்டும் மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை!


மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று அறிவிக்கக் கோரி இன்று 04.12.2019 மாநிலங்கள் அவையில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கோரிக்கை விடுத்து உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் பல உயர்நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலங்களின் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. ஆந்திர பிரதேஷ் உயர்நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்றம், கேரளா உயர்நீதிமன்றம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், பஞ்சாப் - ஹரியான உயர்நீதிமன்றம், மத்தியப் பிரதேஷ் உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்படுகின்றன.

ஆகையால், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பது மாற்றப்பட்டு, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழி ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்தும், அதில் மாற்றங்கள் செய்வதற்கான வழிவகைகள் குறித்தும் இந்திய அரசியல் சட்டத்தின் 348 ஆவது பிரிவு விவரிக்கிறது.

உத்திரப்பிரதேசத்தில், மத்தியப் பிரதேசத்தில், ராஜஸ்தானில், பீகாரில் ஆங்கிலத்தோடு இந்தியும் நீதிமன்ற மொழியாகச் செயல்படுகிறது.

குஜராத் மாநிலம், கர்நாடகா மாநிலம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் வழக்காடு மொழியாக ஆங்கிலத்தோடு தங்கள் மாநில மொழியும் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன.

உச்சநீதிமன்றமும் இந்த நோக்கத்தோடு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை எல்லாம் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது.

தமிழ்நாடு சட்டமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தோடு தமிழும் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று 2006 ஆம் ஆண்டு ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

இந்தப் பின்னணியில் உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலத்தோடு அந்தந்த மாநில மொழிகளையும் வழக்காடு மொழிகளாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் வைகோ அவர்கள் 04-12-2019 அன்று தெரிவித்துள்ளார்.

Tuesday, December 3, 2019

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் மறைவுக்கு இரங்கல்! தடியடி நடத்திய காவல்துறைக்கு கண்டனம் வைகோ அறிக்கை!

அண்மையில் பெய்த பெரு மழையில், கோவை மாவட்டம் - மேட்டுப்பாளையம் ஏ.டி.காலனி, கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் இருந்த 80 அடி நீளம், 20 அடி உயரம் கொண்ட சுற்றுச் சுவர் இடிந்து, அருகில் இருந்த நான்கு வீடுகளின் மீது சரிந்து விழுந்தது. இதனால் அந்த நான்கு வீடுகளும் சிதைந்து இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
விடியற்காலையில் இந்தக் கொடுமை நடைபெற்றதால், அந்த வீடுகளின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரை இழந்தார்கள் என்ற அதிர்ச்சி தரும் செய்தி நம் அனைவரையும் இடிகொண்டு தாக்குவதைப் போல நிலைகுலையச் செய்துவிட்டது. கனமழை பெய்து இருள் சூழ்ந்த நேரத்தில் ஏற்பட்டுவிட்ட இந்த சோக நிகழ்வு அருகில் உள்ளவர்களுக்கு தெரியவே நெடுநேரம் கடந்துவிட்டது.
தீயணைப்புப் படையினர் அங்கு வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றும்போது மூன்று குழந்தைகள், மூன்று ஆண்கள், 11 பெண்கள் ஆகியோரைச் சடலங்களாக மீட்டது நம் நெஞ்சை பதை பதைக்கச் செய்கிறது. இவர்களை பறிகொடுத்த குடும்ப உறவுகளின் கதறல்கள் மனிதநேயம் கொண்டோரின் இதயங்களில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது.
ஆறுதல் சொல்வதற்கும், தேறுதல் சொல்வதற்கும் வார்த்தைகள் இல்லாமல், இரத்தக் கண்ணீர் வடிக்கும் அவர்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆறுதலை, உயிரைப் பறிகொடுத்த பரிதாபத்திற்குரிய உறவுகளுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
துயரத்தில் மூழ்கிக் கிடக்கின்ற அவர்களின் கண்ணீரைத் துடைத்து, தேவையான நிவாரணப் பணிகளை விரைந்து எடுத்து மனிதநேயத்துடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.
இந்திய அரசு இவர்களுக்கு வீடுகளைக் கட்டித் தருவதற்கு என்று ஏராளமான திட்டங்களை வைத்துள்ளது. அவைகளை முறையாகப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலில் பாதுகாப்பான நல்ல வீடுகளை கட்டித் தரவும், பொருளாதார நிலையில் அவர்கள் மேம்பட பெருமளவு தொகையினை இழப்பீடாக வழங்கவும், அந்தக் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கவும் எல்லா வகைகளிலும் பாதிக்கப்பட்ட அவர்கள் தேறுதல் பெற்று நிம்மதியாக வாழ்ந்திட உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
விபத்தில் உயிர் இழந்தோரின் சடலங்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யும்போது மருத்துவமனைக்கு வெளியே கிடத்தப்பட்டு இருந்ததையும், கோவை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய கொண்டு செல்ல இருந்ததையும் கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதும், நாகை திருவள்ளுவன் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் தொடுத்ததும், விபத்து ஏற்பட காரணமான சுற்றுச் சுவர் உரிமையாளர் இதுவரை கைது செய்யப் படாததும் வன்மையான கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என வைகோ தனது அறிக்கையில் 03-12-2019 தெரிவித்துள்ளார்.

Monday, December 2, 2019

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு ஜனநாயகப் படுகொலை - வைகோ அறிக்கை!

உள்ளாட்சித் தேர்தல் என்பது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து நடத்தப்பட வேண்டிய தேர்தலாகும். ஆனால் தமிழ்நாடு அரசு ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்ட வஞ்சகத் திட்டமாகும்.

தேர்தலையே தள்ளிப் போடுவதற்கhக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் ஏற்பாடு செய்துவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்துவது ஆளும் அரசாங்கத்தின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியாகும் என்பதால், மாநில அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிப்பதோடு, புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் சேர்த்து வார்டுகள் பிரிவினை செய்யாமல், தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பைச் செய்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலையாகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 02-12-2019 அன்று தெரிவித்துள்ளார்.

Sunday, December 1, 2019

இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் ஈழத் தமிழ் இனத்தை காவு கொடுத்திருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. கோவை விமான நிலைய செய்தியாளர்களிடம் வைகோ!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தில்லியிலிருந்து நேற்று (30.11.2019) கோவை விமான நிலையம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இடிமேல் இடியாக தமிழினத்தின் தலையில் தாக்குதல்கள் நடக்கின்ற விதத்தில் காரியங்கள் நடக்கின்றன. இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி கோத்தபய ராஜபக்சே. அதற்கு சாட்சியங்கள் ஏராளம் உள்ளன. அப்படிப்பட்ட கொலைபாதகனின் பதவியேற்பு விழாவுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சென்று இருந்தார்.
கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு நீங்கள்தான் அழைத்தீர்களா? என்று நாடாளுமன்றத்தில் நான் கேட்டேன். ஆமாம் நான் அழைப்பு விடுத்தேன் என்றார் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்.
இந்தியாவுக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவுடன் நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் பேசியதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது.
இலட்சக்கணக்கான பெண்களைக் கொன்று, பெண்களை பலாத்காரம் செய்து நாசப்படுத்தி, கற்பழித்துக்கொன்று, 90 ஆயிரம் விதவைகள் வேதனையில் தேம்பி அழ, காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில், இன்னும் எண்ணற்றவர்கள் சிறையில் வாடி வதங்கும் வேளையில், நான்கு வீட்டுக்கு ஒரு இராணுவ வீரன் என்று ஒவ்வொரு தெருவிலும் நிறுத்தி வைத்து, யாழ்ப்பாணத்தையும், தமிழர் பகுதிகளையும் காவல் கூடங்கள் ஆக்கி வைத்திருக்கின்ற கொலைகாரன் கேட்டான் என்று இலங்கையில் அவர்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு 350 கோடி ரூபாயும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு 2800 கோடி ரூபாயும் தரப்போகிறோம். அதுமட்டுமல்லல, வரலாறு, மொழி உறவால் நாம் ஒன்றுபட்டு இருக்கின்ற இலங்கைக்கு எல்லா விதத்திலும் பாதுகாப்பாக இருப்போம் என்று நரேந்திர மோடி அவர்கள் கூறி இருக்கின்றார்.
சரித்திரம் அறியாதவர் என்று நான் வருத்தப்படுகிறேன். மொழி, இன இரத்த பந்தத்தால் பின்னப்பட்டு இருப்பவர்கள் இங்கே இருக்கும் எட்டரை கோடி தமிழர்கள். எங்கள் இரத்தம்; அது தமிழர்கள் சிந்திய இரத்தம். ஆக மொழியால், இனத்தால், இரத்த பந்தத்தால் ஒன்றுபட்டு இருக்கக்கூடிய இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவிக்கு நீங்கள் இவ்வளவும் அள்ளிக் கொடுத்திருக்கின்றபோது, வேறு நாடுகள் கண்டுகொள்ளாமல் போனால் உலகத்தில் இனி தமிழனுக்கு நாதியே இல்லையா?
இலங்கையின் அதிபர் கொலைகாரன் கோத்தபய ராஜபக்சேவுடன் கை குலுக்குவதற்காக இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் ஈழத் தமிழ் இனத்தை காவு கொடுத்திருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
சமீப காலத்தில் இவ்வளவு மன வேதனையை நான் அனுபவித்தது இல்லை. கொலைகாரப் பாவிக்கு நீங்கள் பட்டம் சூட்டி, பரிசுப் பொருளும் கொடுத்து, இன்னும் எது கேட்டாலும் தருகிறேன் என்று சொல்லி அனுப்பியிருக்கிறீர்கள்.
உலகத் தமிழ் இனத்துக்கு நாதி இல்லை. காரணம், எட்டரை கோடி தமிழர்கள் வாழுகிற இந்திய நாட்டின் அரசே அவர்களுடன் கைகோர்த்து நிற்கிறது.
ஏமாற்று வேலைக்கு படகுகளை விடுவிக்கிறேன், பத்தாயிரம் வீடுகள் கட்டித் தருகிறேன் என்று சொல்கிறாரே தவிர, இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்களே! அதற்கு என்ன நீதி? நீதி கிடையாதா? தமிழனுக்கு நாதி கிடையாதா? இரக்கமற்றவரே, இதயமற்றவரே இந்தியாவின் தலைமை அமைச்சரே காவு கொடுத்துவிட்டீரே!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ அவர்கள் தமது பேட்டியில் 01-12-2019 அன்று குறிப்பிட்டார்.

Friday, November 29, 2019

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோவின் தனி ஒருவர் தீர்மானம் (Private Member Bill)

மத்திய மாநில உறவுகள் குறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கடந்த வாரம் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் ஒரு தீர்மானத்தின் சுருக்கமான முன்வரையை 29-11-2019 அன்று அறிமுகம் செய்து இருந்தார்.

அப்படி பல உறுப்பினர்கள் பல தீர்மானங்களைத் தாக்கல் செய்து இருப்பார்கள்.
எந்தத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என்பதை குலுக்கல் சீட்டு மூலம் தேர்ந்து எடுப்பார்கள்.
அந்தத் தீர்மானத்தின் மீது விரிவான கருத்துப் பரிமாற்றத்திற்கு இடம் தருவார்கள்.
அப்படி நடைபெற்ற குலுக்கலில் வைகோ அவர்கள் பெயர் முதலாவதாகத் தேர்வு பெற்றது.
எனவே நேற்று 29.11.2019 அன்று பிற்பகல் 2.30 மணி அளவில், அந்தத் தீர்மானம் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வைகோ அவர்கள் தீர்மானத்தைத் தாக்கல் செய்து 30 நிமிடங்கள் நீண்ட விளக்கம் அளித்து உரை ஆற்றினார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநில சுயாட்சிக்காக எழுப்பிய குரல்,
டாக்டர் கலைஞர் 1974 இல் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம், அவர் அமைத்த ராசமன்னார் குழு அளித்த பரிந்துரை,
அகாலிதளம் கட்சியின் அனந்தபூர் சாகேப் தீர்மானம்,
தேசிய மாநாட்டுக் கட்சி, காஷ்மீர் மாநிலத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சி மாநாடு தீர்மானம்,
கல்கத்தாவில் சிபிஎம் ஜோதிபாசு அவர்கள் இடதுசாரிகள் நிறைவேற்றிய தீர்மானம், அனைத்தையும் தெளிவுபட எடுத்து உரைத்தார்.
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான மாநில சுயாட்சி உரிமைக்காக வலுவாக குரல் எழுப்பினார்.
இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து விரிவான விவாதம் நடைபெற்றது.
அவரது உரையை உறுப்பினர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், வைகோ மிகச் சிறந்த பேச்சாளர் என்றார்.
1. சுக்லா- பா.ஜ.க
2. ஜெயராம் ரமேஷ்- காங்கிஸ்
3. அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
4. டெரிக்.ஓ.பிரையன்- திரிணமுல் காங்கிரஸ்
5. விஜிலா சத்தியானந்த்- அதிமுக
6. விஷம்பர் பிரசாத் நிஷாத்- சமாஜ்வாதி
7. டாக்டர் அமர பட்நாயக்- பிஜூ ஜனதா தளம்
8. டி.கே.ரங்கராஜன்- சிபிஎம்
9. பேரா மனோஜ் குமார் ஜா- ராஷ்ட்ரிய ஜனதா தளம்
10. ராகேஷ் சின்கா- பா.ஜ.க.
11. சஞ்சய் சிங்- ஆம் ஆத்மி
12. சுதஷன்ச திரிவேதி- பா.ஜ.க
13. சுதான்சு திரிவேதி

ஆகிய 13 உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.
அவர்கள் வைகோ கொண்டு வந்த தீர்மானத்தையும், அவரது பேச்சு ஆற்றலையும் வெகுவாகப் பாராட்டி, பல கோணங்களில் கருத்துகளை எடுத்து உரைத்தார்கள்.
உறுப்பினர் திரிவேதி, மாவீரர் திலகம் பிரபாகரன் பற்றி விமர்சித்தபோது, பிரபாகரன் விடுதலைக்காகப் போராடிய மாவீரர் என்று வைகோ ஓங்கி முழங்கினார்.
விவாதம் நிறைவு பெறவில்லை. டிசம்பர் பதின்மூன்றாம் நாள் இந்த விவாதம் தொடரும்.
அதன்பிறகு வைகோ அவர்கள் நிறைவுரை விளக்கம் அளிப்பார்கள்.

Thursday, November 28, 2019

அயல்நாட்டுப் பயணங்கள் குறித்து, பிரதமர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை!

28-11-2019 காலையில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டு, நாடாளுமன்றத் தெரு காவல் நிலைய வளாகத்தில் அடைக்கப்பட்டு இருந்த தலைவர் வைகோ அவர்கள், விடுதலைக்குப் பிறகு, நேராக நாடாளுமன்றம் சென்றார்.
இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள், கடந்த ஒரு மாத காலமாக அயல்நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்து, நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், 28.11.2019 மாலை ஐந்து மணிக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அறிக்கை வாசித்தார்.
நாடாளுமன்ற விதிகளின்படி, அந்த அறிக்கைக்கு விளக்கம் கேட்கலாம். அதன்படி, வைகோ கேட்ட விளக்கம்:
பண்டித ஜவகர்லால் நேரு காலத்தில் இருந்து, மன்மோகன்சிங் காலம் வரையிலும், பிரதமர் அயல்நாடுகள் சென்று வந்தால், அதுகுறித்து, அவரே மாநிலங்கள் அவைக்கு வந்து விளக்கம் அளிப்பார். உறுப்பினர்கள் அதன்மீது விளக்கம் கேட்பார்கள். இதுதான் இத்தனை ஆண்டுக்காலம் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை ஆகும். ஆனால், நமது பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் உலகம் சுற்றி வருகின்றார். பல நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கின்றார். அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவின் புதின், சீனாவின் ஷி ஜின்பிங் ஆகியோரோடு பேசுகிறார். மகிழ்ச்சி. ஆனால், அதுகுறித்து அவர் இந்த அவைக்கு வந்து விளக்கம் அளிக்காதது ஏன்? அயல்நாட்டுத் தலைவர்களோடு நான் என்ன பேசினேன்? அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? என்பதை, அவர் இந்த அவைக்கு வந்து தெரிவிக்காதது ஏன்?
வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், அத்துறையில் பாண்டித்யம் பெற்றவர்தான். ஆனால், பிரதமர் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்யக் கூடாது. ஜெய்சங்கர் பிரதமரானால், அவர் வாசிக்கலாம்.
என் கேள்விக்கு வருகின்றேன்.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் அவர்களே, இலங்கைக்குச் சென்றீர்களே, இலட்சக்கணக்கான தமிழர்களைக் கோரமான இனப்படுகொலை செய்த கொடியவன் கைகளில் பூங்கொத்து கொடுக்கச் சென்றீர்களா?
அப்பாவித் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். எங்கள் தாய்மார்கள், சகோதரிகள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். எங்கள் குழந்தைகளும் தப்பவில்லை. சிங்களவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் நான் வெற்றி பெற்றேன் என்று கோத்தபய இராஜபக்சே பகிரங்கமாக அறிவித்து விட்டார். துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் தமிழர் வாழும் தெருக்களில் சுற்றி வருகின்றனர். ஈழத்தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டில் 19 தமிழர்கள் தீக்குளித்து இறந்தார்கள். ஈழத்தமிழ் இனப்படுகொலையால், கோடிக்கணக்கான தமிழர்கள் நெஞ்சில் வேதனைத் தீயும், கோபத் தீயும் பற்றி எரிகின்றது. அப்படி எரிகின்ற நெருப்பில், நீங்கள் இப்போது பெட்ரோலை ஊற்றி இருக்கின்றீர்கள்.
அவைத்தலைவர்: இப்படி நீங்கள் பேசக்கூடாது.
வைகோ: நான் பேசுவேன்.
இதன்பிறகு, அவைத்தலைவருக்கும் வைகோவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்,
நான் இலங்கைக்குச் சென்று அதிபரைச் சந்தித்தது குறித்து வைகோ கேட்கின்றார். நான் மொத்த இலங்கைக்கும்தான் அதிபர் என்று அவர் கூறி இருக்கின்றார். அனைத்துத் தரப்பினரின் நலனையும் கருதித்தான் நாங்கள் செயல்படுவோம்.
வைகோ: உங்கள் அழைப்பில்தான் அவர் வருகின்றாரா?
அமைச்சர் ஜெய்சங்கர்: ஆமாம். நான் அவருக்கு அழைப்பு கொடுத்து இருக்கின்றேன்.

எதற்காக இந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்? வைகோ விளக்கம்!


இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே, முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி ஆவார்.

அப்போது அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே குடியரசுத் தலைவராக இருந்தார். அவர்தான் இனப்படுகொலைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள், இந்தியப் பிரதமராகப் பதவி ஏற்ற விழாவிற்கு, மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

அதை எதிர்த்து நாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இதே நாடாளுமன்ற வீதியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானோம்.

ஈழத்தமிழர் படுகொலை குறித்துத் துளி அளவும் கவலை இன்றி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்குச் சென்று கோத்தபய ராஜபக்சேவை, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கின்றார்.

இது ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் எரிகின்ற தீயில், மேலும் பெட்ரோல் ஊற்றுகின்ற செயல் ஆகும்.

ஐ.நா. மன்றம் அளித்துள்ள ஆய்வு அறிக்கையின்படி, 2009-ஆம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

எங்களுடைய தாய்மார்களும் சகோதரிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. மருத்துவமனைகள் மீது இலங்கை வான்படை குண்டுகளை வீசியது; தரைப்படை பீரங்கித் தாக்குதல் நடத்தியது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

பள்ளிக் கட்டடங்களை இடித்துத் தகர்த்தார்கள்.

அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில், ஈழத் தமிழர்கள் சஜித் பிரேமதாஸா வுக்கு ஆதரவாக வாக்கு அளித்து இருக்கின்றனர். எனவே, நான் சிங்கள மக்களின் ஆதரவால்தான் வெற்றி பெற்றேன் என்று கோத்தபய இராஜபக்சே அறிவித்தார்.

பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக அவர் பிறப்பித்த உத்தரவில், ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற தெருக்களில் இலங்கை இராணுவம் துப்பாக்கி ஏந்தி வலம் வர வேண்டும் என அறிவித்து இருக்கின்றார்.

ஏற்கனவே ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகள், சிங்கள ராணுவத்தின் சித்திரவதைக் கூடமாக, கொலைக்களமாக ஆக்கப்பட்டு இருக்கின்றது.

2008ஆம் ஆண்டு, சண்டேலீடர் என்ற ஆங்கில ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை அனைவரும் அறிவர்.

தான் இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய தலையங்கத்தில், மஹிந்த ராஜபக்சேவால் நான் கொல்லப்படுவேன் என்று எழுதி இருந்தார்.

கோத்தபய ராஜபக்சே நிகழ்த்திய படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக நிசாந்த சில்வா என்ற அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார்.

அவர் அந்தப் பொறுப்பில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே அவர் காவல்துறை ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் அணுகி அதே பொறுப்பில் நீடித்தார்.

கோத்தபய ராஜபக்சே குடியரசுத் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, நிசாந்த சில்வா அவரது மனைவி மூன்று பெண் பிள்ளைகள் இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர். இப்போது அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதரகத்தின் ஒரு பெண் அதிகாரி, கோத்தபய ராஜபக்சேவின் வெள்ளை வேன் குண்டர்களால் கடத்தப்பட்டு இருக்கின்றார்.

ஈழத்தமிழர்கள் இனப் இனப்படுகொலையின்போது இந்த வெள்ளை வேன் ஒரு கொலைக்கருவியாகச் செயல்பட்டது. அந்தப் பெண் அதிகாரி எங்கோ ஓரிடத்தில் விசாரிக்கப்படுவதாக நியூயார்க் டைம்ஸ் ஏடு எழுதி இருக்கின்றது.

உலகப் புகழ்பெற்ற ராய்ட்டர் செய்தி நிறுவனம், தங்களுடைய செய்தியாளர்களை இலங்கையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.

கோத்தபாய ராஜபக்சவின் மிரட்டலால், தினப்புயல் தமிழர் தளம் ஆகிய இரண்டு தமிழ் ஏடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன.

அது மட்டும் அல்ல.

லைட் ஹவுஸ் என்ற, சிங்கள, ஆங்கிலம், தமிழ் செய்தித்தாள்களை வெளியிடுகின்ற, இலங்கையின் பெரிய செய்தி நிறுவனம், தமிழ் செய்தித்தாள்களை நிறுத்துவதாக அறிவித்து விட்டது. இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த 30 ஆண்டுகளில் 580 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களுடைய படகுகளைப் பறிமுதல் செய்து, பிடிபட்ட மீனவர்களை இலங்கைச் சிறைகளில் அடைத்துள்ளனர்.

ஆனால், இலங்கை அரசாங்கத்தோடு நரேந்திர மோடி அரசு கொஞ்சிக் குலாவுகின்றது.

இது தமிழர்களுக்கு எதிரான அநீதி ஆகும்.

இப்போது இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் மிரட்டலுக்கும் அச்சத்திற்கும் வேதனைக்கும் ஆளாகி இருக்கின்றனர்.

அவர்களுடைய துயரத்தை உலகுக்கு எடுத்து உரைக்கவும், கொடியவன் கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த இந்திய அரசாங்கத்தைக் கண்டிக்கவும் நாங்கள் இந்தக் கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.

எங்களுடைய முதன்மையான கோரிக்கை: ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை, பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்.

90,000 ஈழத் தமிழ்ப் பெண்கள் இப்போது விதவைகளாகக் கண்ணீர் சிந்துகின்றனர். காணாமல்போன பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

எனவே ஐநா மன்றம், மனித உரிமைகள் ஆணையம், தமிழ் ஈழம் அமைப்பதற்காக, ஈழத் தமிழர்கள் இடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் அனைவரும், அந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்கு அளிக்க வகை செய்ய வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
28.11.2019

WHY THIS BLACK FLAG DEMONSTRATION?

Gotabaya Rajapakse, President of Sri Lanka has commited the Crime of Genocide of Tamils, When he was the Defence Minister.

His Brother Mahinda Rajapakse, the then President ordered the massacre.

When Mahinda Rajapakse was invited by Modi for the swaring in ceremony in 2014, we staged a demonstration in the same place Delhi Jantar Mantar and were arrested.

Even without an iota of sympathy for Tamils, our foreign minister went to Colombo to invite Gotabaya to India.

This is nothing but pouring petrol over the flames burning in the hearts of tamils.

According to UN report 1,37,000 of Tamil people were massacred in 2009.

Our mothers and sisters were raped and killed. Even our children were not spared. Bombing, straffing, shelling by canons on the Hospitals was done by the Sri Lankan Army. The wounded were killed. Schools were not spared.

This time the Tamils voted for Sajith Premadasa. That is why, Gotabaya says that only the Sinhalese are voted for me.

He has passed a presidential order that the gun trotting soldiers should patrol in the streets of the Tamils day and night. Already Jaffna and other Tamil traditional areas have become the concentration camp of Sri Lankan Army.

Everybody knows Lasantha Wickramatunge, the editor of Sunday leader was killed in 2008. Before his death, in the editorial, he told I wil be killed by Mahinda Rajapakse’s henchmen. An investigation officer Nishantha Silva was appointed to investigate the murders committed by Gotabaya Rajapakse.

He was transferred from that assignment. He moved the Police Commission and the court to retain his post. Now, four days after Gotabaya became the President, Nishanta Silva and his wife and three daugters, left Sri Lanka. Nobody knows, where they have gone.

A Lady officer of the Swiss Embassy in Sri Lanka was abducted by white van, the notorious killing van of the Sri Lankan Government and was interrogated secretly. This has been reported in New York Times.

Shockingly, REUTER, the world famous news establishment has announced to withdraw their correspondents from Sri Lanka.

Due to the threatening of Gotabaya Government, two Tamil newspapers, Thinappuyal, Thamilar Thalam have been closed their publication.

Not only that, the leading newspaper establishment Light House, which publishes Sinhala English and Tamil newspapers has announced to stop tamil newspaper.

Fishermen of Tamilnadu repeatedly attacked by Sri Lankan Navy. So far, more than 580 Tamil fishermen have been killed in the past 30 years. Their boats were seized and the our fishermens were put behind the bars in Sri Lanka.

The Government of Narendra Modi is hobnobbing with the Sri Lankan Government.

This is nothing but terrible betrayal of Tamils.

Tamils in Sri Lanka are afraid and are in serious panic.

We have come here to show black flags and register our protest against the Government of India for inviting the killer, the butcher of Tamils, Gotabaya Rajapakse.

Our main demand:

The Sri Lankan Government should be tried for the genocide of Eelam Tamils in the International Court of Criminal Justice.

90,000 tamil widows are shedding tears.

What happened to thousands of tamils who have disappeared?

We appeal to the United Nations and the Human Rights Council to adopt a resolution to conduct referendum among the Tamils for a sovereign Tamil Eelam, enabling Eelam Tamils living all over the world to take part.

VAIKO
Member of Parliament,
General Secretary,
Marumalarchi Dravida Munnetra Kazhagam-MDMK Paty,
Tamilnadu

விசாரணை சிறைக் கைதிகளின் விடுதலை எப்போது? வைகோ கேள்விகளும், உள்துறை அமைச்சர் விளக்கமும்!

கேள்வி எண் 354
கீழ்காணும் கேள்விகளுக்கு, உள்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) நாடு முழுமையும் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்ற விசாரணைக் கைதிகள் குறித்து, அரசு ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்களைத் தருக.
(இ) தேசிய குற்றப்பதிவு ஆவணங்களின்படி, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, விசாரணைக் கைதிகளாக சிறைகளில் அடைபட்டுக் கிடப்பவர்கள் எத்தனைப் பேர்?
(ஈ) நாடு முழுமையும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்ற குழந்தைகள் எத்தனைப் பேர்?
(உ) நீதிமன்றங்களில், விசாரணைக் கைதிகளுடைய வழக்குகளை விரைவுபடுத்த, அரசு மேற்கொண்ட நடவடிக்கைககள் யாவை?
(ஊ) கடுமையான குற்றமாக இல்லாத நிலையில், அவர்களை விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?
உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி அளித்துள்ள விளக்கம்
அ முதல் இ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:
தேசிய குற்றப் பதிவு ஆவணங்களில் (National Crime Records Bureau-NCRB) பதிவு செய்யப்பட்டுள்ள புள்ளி விவரங்கள், அந்த அமைப்பின், இந்தியச் சிறை புள்ளிவிவரங்கள் (Prison Statistics India) என்ற இதழில் வெளியிடப்படுகின்றன.
அவ்வாறு, 2017 ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் கிடைத்து இருக்கின்றன. அதன்படி, 13,143 பேர், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, விசாரணைக் கைதிகளாக சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்றனர். இதுகுறித்து, உள்துறை அமைச்சகம் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை.
கேள்வி ஈ குறித்த விளக்கம்:
நாடு முழுமையும், விசாரணைக் கைதிகளாகச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் எதுவும் அரசிடம் இல்லை.
உ, ஊ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், பட்டியல் இரண்டு, உட்பிரிவு 4 இன்படி, சிறைகள் மற்றும் அவற்றில் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் குறித்த அதிகாரங்கள் மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டவை. எனவே, சிறைகளை ஆள்வதும், மேலாண்மை செய்வதும், மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
எனினும், விசாரணைக் கைதிகளின் குறைகளைக் களைவதற்காக, நடுவண் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றது. அதற்காக, குற்ற நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதலில் (Code of Criminal Procedure) 436 ஏ என்ற பிரிவு, புதிதாகச் சேர்க்கப்பட்டது. அதன்படி, புனையப்பட்ட குற்றத்திற்காகக் கிடைக்கக்கூடிய ஆகக் கூடுதலான தண்டனையில், மூன்றில் ஒரு பங்கு காலம் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தால், அவருக்கு, பிணை விடுதலை வழங்கலாம். (ஆகக்கூடுதலாக மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கின்ற வழக்குகளைத் தவிர).
மின்சிறை (E-prisons Portal) என்ற இணையதளத்தில் தரப்பட்டு உள்ள தகவல்களைப் பயன்படுத்தி, மாநில சிறை அதிகாரிகள், சிறைவாசிகள் குறித்த புள்ளி விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளலாம்; அதன்படி, விசாரணைக் கைதிகளை அடையாளம் கண்டு, மறு ஆய்வுக் குழுக்களின் விசாரணைக்கு அவர்களுடைய வழக்கை உட்படுத்தலாம்; அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
மாநில சட்டப் பணிகள் ஆணையம் (State Legal Services Authority), சட்ட உதவி மையங்களை (Legal Service Clinics) ஏற்படுத்தி உள்ளது.
அதன் வழியாக, தேவைப்படுவோருக்கு, கட்டணம் இல்லாமல் சட்ட உதவிகள் கிடைத்திட, பகுதி நேர, தன்னார்வ சட்ட உதவியாளர்கள், காவல் நிலையங்கள், முன் அலுவலகங்கள் (குசடிவே டீககiஉநள), சிறைகள் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் செயல்பட ஏற்பாடு செய்து இருக்கின்றது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தேசிய சட்ட உதவிகள் ஆணையம் (National Legal Services Authority-NALSA), விசாரணைக் கைதிகள் குறித்து, ஒரு நிலையான செயல்திட்ட வழிகாட்டுதலை (Procedure-SOS) வரைந்து இருக்கின்றது.
இந்த வழிகாட்டுதல்கள், 2019 பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள், அனைத்து மாநிலங்கள் மற்றும் நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல, 2016 ஆம் ஆண்டு வரையப்பட்ட மாதிரி சிறைக் கையேடு (The Model Prison Manual) அனைத்து மாநிலங்கள் மற்றும் நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், சட்ட உதவி என்ற உட்பிரிவில், விசாரணைக் கைதிகளுக்கு வழங்கப்படக்கூடிய சட்டத் தற்காப்பு, வழக்குரைஞர்களுடன் சந்திப்பு, வழக்கு ஆவணங்களில் கையெழுத்து இடுதல், நீதிமன்றங்களில் விண்ணப்பித்தல் போன்றவற்றிற்கான ஏற்பாடுகளை, அரசின் செலவிலேயே செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், சிறைகளில் நிலவும் நெருக்கடியைத் தடுப்பது, விசாரணைக் கைதிகளின் குறைகளைக் களைவது குறித்து, உள்துறை அமைச்சகம், சீரான இடைவெளிகளில், மாநிலங்கள் மற்றும் நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றது. இதுகுறித்த தகவல்களை, https://mha,gov.in/ என்ற இணையதளத்தில் பெறலாம் என 28-11-2019 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 27, 2019

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவிடுக! மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை!

உயர்நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பில், வழக்குத் தொடுத்தவர்கள் நிறைவு அடையவில்லை என்றால், தீர்ப்பு தவறானது எனக் கருதினால், அவர் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.
ஆனால், தென்னிந்திய மக்கள், உச்சநீதிமன்றத்தை எளிதில் நாட முடியவில்லை. மொழி வேறுபாடு, நெடுந்தொலைவுப் பயணம், மிக உயர்ந்த கட்டணம், பயணத்தில் வீணாகும் நேரம், தில்லியில் தங்கும் இடம் ஏற்பாடு, நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வழக்குரைஞர்கள் கட்டணம் போன்றவை, எதிர்கொள்ள முடியாத கேள்விகள்.
மேற்கண்ட காரணங்கள், ஏழை எளிய அடித்தட்டு மக்களால், உச்சநீதிமன்றத்திடம் இருந்து உரிய நீதியைப் பெற முடியாமல் தடுக்கின்றன.
உச்சநீதிமன்ற மேல் முறையீடுகளில், வட இந்தியாவிற்கு அடுத்தபடியாக, ஆகக்கூடுதலான வழக்குகள், தென் இந்தியாவில் இருந்துதான் வருகின்றன.
எனவே, உச்சநீதிமன்றத்தில் நிரந்தரக் கிளையை, தென்இந்தியாவில் நிறுவினால் மட்டுமே, நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்க முடியும். ஏழை, எளிய மக்கள் எளிதில் நீதிமன்றத்தை அணுக முடியும். வழக்குரைஞர்களுக்கும் வசதியாக அமையும்.
இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21, எல்லோருக்கும் பொது நீதி கிடைப்பதை, அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக அறிவித்து இருக்கின்றது.
2018 மே 4 ஆம் நாள் கணக்கின்படி, தற்போது உச்சநீதிமன்றத்தில் 54,013 வழக்குகள் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கின்றன.
எப்படி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

தக்க நடவடிக்கைகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மேற்கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
அரசியல் சட்டத்தின் 130 ஆவது பிரிவு வழங்கி இருக்கின்ற அதிகாரத்தின்படி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யாரையும் கலந்து பேச வேண்டியது இல்லை; கருத்துகளைக் கேட்க வேண்டியது இல்லை. அவர் தாமாகவே முடிவு எடுத்துச் செயல்படலாம். ஆனால் அதற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
எனவே, உச்சநீதிமன்றக் கிளையை தென் இந்தியாவில், சென்னையில் நிறுவிட வேண்டும்.”
இவ்வாறு வைகோ 27-11-2019 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
வைகோவின் கோரிக்கைக்கு தி.மு.க. உறுப்பினர் வில்சன் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

Tuesday, November 26, 2019

இந்திய அரசியல் சட்ட முகப்புரையை தமிழில் வாசிக்கின்றார் மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள்!

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் சட்ட நாளை முன்னிட்டு 26-11-2019 அன்று, இந்திய அரசியல் சட்ட முகப்புரையை தமிழில் வாசிக்கின்றார் மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள்.


தாயகத்தில் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்!


தமிழின தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 65ஆவது பிறந்தநாளையொட்டி மக்கள் தலைவர் வைகோ அவர்களின் ஆணைக்கு இணங்க, தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று 26-11-2019 காலை கழக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி,தேவதாஸ் கேக் வெட்டி கேக் வெட்டினார்.

தலைமைக் கழக மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், கழக முன்னணியினர் மற்றும் கழகத் தோழர்கள், தமிழின உணர்வார்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடரித்துறை பராமரிப்புப் பணிகள் தனியார் மயம் ஆகின்றதா? வைகோ கேள்விகளும், அமைச்சர் விளக்கமும்!

கேள்வி எண் 771
கீழ்காணும் கேள்விகளுக்கு, தொடரித்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) தொடரிகளில் உணவுக்கூடங்களையும், கழிப்புஅறைகளின் பராமரிப்புப் பணிகளையும் கைவிட, தொடரித்துறை தீர்மானித்து இருக்கின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள் தருக.
(இ) தொடரிப் பெட்டிகளின் தூய்மை, கழிப்பு அறைகளின் பராமரிப்பு குறித்து, எத்தனை பேர் குறைகளைத் தெரிவித்துள்ளனர்?
(ஈ) அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
(உ) தொடரிப் பெட்டிகளைத் தூய்மையாகப் பராமரிப்பதற்காக, மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்படுகின்றனவா? ஓடுகின்ற தொடரிகளில் மூட்டைப் பூச்சிகள், கரப்பான், எலிகள் ஊர்வது குறித்துக் குறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளனவா?
(ஊ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்களைத் தருக.
தொடரித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அளித்து இருக்கின்ற விளக்கம்:
(அ) இல்லை.
(ஆ) கேள்வி எழவில்லை.
இ,ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
தொடரிப் பெட்டிகளின் தூய்மை குறித்து, கடந்த மூன்று ஆண்டுகளில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து 60000 க்கும் மேற்பட்ட குறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் கூறுகின்ற குறைகளைத் தீர்த்து வைப்பதற்கு, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தப் பணிகள் மேற்பார்வை செய்யப்படுகின்றன.
ஒப்பந்தப்படி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாத நிறுவனங்கள் மீது, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உ, ஊ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
தூய்மைப் பணிகள் என்பது, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். அதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்படுகின்றன.
சில எடுத்துக்காட்டுகளைத் தருகின்றேன்:
1. தொடரிப் பெட்டிகள், கழிப்பு அறைகளின் தூய்மைப் பணிகள் இரு வகைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. பணியாளர்கள் வேலை செய்கின்றார்கள். தேவையான கருவிகளும் உள்ளன.
2. தலைநகர் விரைவுத் தொடரிகள் (இராஜ்தானி), நூற்றாண்டுத் தொடரிகள் (சதாப்தி) போன்ற முதன்மையான, நெடுந்தொலைவு ஓடுகின்ற 1090 விரைவுத் தொடரிகளில், இருமுனை வழிகளிலும், (எடுத்துக்காட்டு: மதுரை-சென்னை; சென்னை-மதுரை வைகை விரைவுத்தொடரி) வண்டிகள் ஓடிக்கொண்டு இருக்கும்போதே தூய்மைப் பணிகள் (Onboard House Keeping Service OBHS) தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. கழிப்பு அறைகள் கழுவப்படுகின்றன. கதவுகள் துடைக்கப்படுகின்றன.
3. பெட்டி நண்பன் (கோச் மித்ரா) என்ற திட்டம் உள்ளது. அதன்படி, 1050 தொடரிகளில், இருமுனை வழிகளிலும், தூய்மைப் பணிகள், நோய்த்தொற்றுக் கிருமிகள் அழிப்பு, சணல் துடைப்பான்கள், விளக்குகள், குளிர்பதனப் பணிகள், தண்ணீர் நிரப்புதல் போன்ற, பயணிகளுக்கு உதவுகின்ற ஒற்றைச் சாளர இடைமுக ஏற்பாடுகள் (single window interface) செய்யப்படுகின்றன.
4. தூய்மையான தொடரி நிலையம் என்று ஒரு திட்டம் உள்ளது. இந்த நிலையங்களில், வண்டிகள் நிற்கும்போது செய்ய வேண்டிய தூய்மைப் பணிகள், உரிய கருவிகளைக் கொண்டு செய்யப்படுகின்றன.
5. மூட்டைப் பூச்சி போன்ற சிறுசிறு பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்ற மருந்துகள், தொடர்ச்சியான இடைவெளிகளில் பெட்டிகளில் தெளிக்கப்படுகின்றன. அந்தப் பணிகளை, பயிற்சி பெற்ற, திறமையாகச் செயல்படுகின்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஒட்டுண்ணி உயிரிகளைக் கட்டுப்படுத்தும் புகை மூட்டப் பணிகளும் (Fumigation) மேற்கொள்ளப்படுகின்றன.
6. முன்பு, குளிரிப் பெட்டிகளில் மட்டுமே குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இப்போது, அனைத்துப் பெட்டிகளிலும் வைக்கப்படுகின்றன.
7. தொடரிப் பெட்டிக் கழிப்பு அறைகளின் மனிதக் கழிவுகள், முன்பு தொடரித் தடங்களிலேயே கொட்டப்பட்டு வந்தது. இப்போது, பெட்டிகளிலேயே சேகரிக்கப்பட்டு, பின்னர் அகற்றப்படுகின்றன.
8. ஏதேனும் குறைகள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால், அது தொடர்பான அலுவலர்கள், மேற்பார்வையாளர்களது நடவடிக்கைகள், உரிய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுகின்றன.
9. தொடரிப் பெட்டிகளின் தூய்மைப் பணிகளுக்கு, பயணிகளின் ஒத்துழைப்பைப் பெறுகின்ற வகையில், போதிய விழிப்பு உணர்வுப் பரப்புரைகளும் செய்யப்படுகின்றன என 26-11-2019 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.