வெற்றிச்சின்னம் பம்பரம் வெல்லட்டும். 2019 உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக் குழு, மாவட்டக் குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு மதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனைப் பெறுவதற்கு, தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைப்படி, "தேர்தல் அறிவிக்கை (Notification) வெளியிடப்பட்ட மூன்று தினங்களுக்குள் தமிழகம் முழுவதும் போட்டியிடும் இடங்கள் குறித்த பட்டியல் அளிக்க வேண்டும்."
அங்கீகரிக்கப் படாத கட்சியான மறுமலர்ச்சி தி மு க வின் வேட்பாளர் என்றும், பம்பரம் சின்னம் கேட்டும் வேட்புமனுக்களை உரிய காலத்தில் தாக்கல் செய்யலாம். வேட்பு மனு வாபஸ் பெறும் நாளன்று பிற்பகல் 3 மணிக்கு முன்பாக சின்னம் பெறுவதற்குரிய A, B படிவங்களை வழங்கிட வேண்டும். (இதில் அலட்சியம் கூடாது) பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கையொப்பமிட்ட A , B படிவங்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு தாயகத்தில் இருந்து ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. கவனமுடன் கடமை ஆற்றி பணி முடிப்போம். இயக்கத்தின் மானம் காக்க களங்காணும் மறுமலர்ச்சி சொந்தங்களை வரலாறு வாழ்த்தட்டும்.
No comments:
Post a Comment