பாசிச பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இன்று டிசம்பர் 23 காலை 9 மணி அளவில் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகிலிருந்து ராஜரத்தினம் திடல் நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது.
இதில் மதிமுக கழகக் கண்மணிகள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், கலைத் துறையினர் என அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று ஜனநாயகம் காக்க, மதச்சார்பற்ற தன்மையை நிலைநாட்ட கரம் கோர்த்து பேரணியில் கலந்துகொண்டார்கள்.
கூட்டணி தலைவர்களான வைகோ, மு.க.ஸ்டாலின், திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், ஆசிரியர் வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment