கேள்வி எண்: 567
கீழ்காணும் கேள்விகளுக்கு, மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், (The National Council of Edcuational Research and Training-NCERT), இந்திய அளவில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கத் திட்டம் வகுத்து இருக்கின்றதா? அதற்காக, ஏதேனும் குழு அமைக்கப்பட்டு இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
(ஆ) எந்தெந்த வகைகளில் மாற்றங்கள் செய்யத் திட்டம் வகுக்கப்படுகின்றது?
(இ) தரமான கல்வி, சமத்துவம், சம பங்கு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இணக்கமான பாடத்திட்டத்தை வகுப்பது குறித்துக் கவனம் செலுத்தப்படுகின்றதா?
(ஈ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
(உ) திறன் மேம்பாடு, தொழிற்பயிற்சிகள் குறித்து, கவனம் செலுத்தப்படுகின்றதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அளித்து இருக்கின்ற விளக்கம்:
(அ) ஆம். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 2005 ஆம் ஆண்டு வகுத்த பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டு இருக்கின்றோம். அதன்படி, மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, அவர்கள், உள்ளக கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி வருகின்றார்கள்.
இதற்கு இடையில், தேசிய கல்விக்கொள்கையை (National Education Policy) வரைவதற்காகப் பொறுப்பு அளிக்கப்பட்டு இருந்த குழு, தனது அறிக்கையை வழங்கி இருக்கின்றது. அதுகுறித்து, அரசு ஆராய்ந்து வருகின்றது. அந்த அடிப்படையில், புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள இருப்பதால், மேற்கண்ட பாடத்திட்டங்களில் மாறுதல் செய்வது குறித்து ஆராய, தனியாக குழு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
(ஆ) கல்வியில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் இனம் காணப்பட்டு உள்ளன.
1. மதிப்புக் கல்வி (Value Education )
2. பண்பாட்டு மரபு வளம். (Cultural Heritage)
3. பயிற்சிகளின் வழி கற்றல் (Experiential learning)
4. உடல்நலம், உடல் இயக்கப் பயிற்சிகள், விளையாட்டு. (Health, Physical Education and Sports)
5. தேசிய அளவில் முன்னுரிமை மற்றும் முயற்சிகள். (National Priorities and initiatives)
6. பள்ளிகளில் தர மதிப்பிடுதல் மற்றும் தேர்வு முறைகளில் மாற்றம் (School based Assessment and Examination reform)
7. கல்வி நுட்ப இயல் (Educational Technology)
8. தொழில் பயிற்சிக் கல்வி (Vocational Education)
இ மற்றும் ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
ஆம். தற்போதைய பாடத்திட்டத்திலேயே, குறுக்கிலும் நெடுக்கிலுமாக, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இணக்கமான வகையில், தரமான கல்வி, சமத்துவத்திற்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. அவைதாம், அடித்தளம்; அதன் மீதுதான், பாடத்திட்டம் வகுக்கப்பட்டு இருக்கின்றது.
(உ) ஆம். தொழிற் கல்வியில், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தொழிற் பயிற்சி வகுப்புகள் இடம் பெறும் என 7-12-2019 தாயகம் அறிக்கையில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
No comments:
Post a Comment