Tuesday, December 24, 2019

தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் வைகோ மலரஞ்சலி!



பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 24-12-2019  தாயகத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மக்கள் தலைவர் வைகோ எம்.பி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடம் சென்று பெரியார் நினைவிடத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார்.
அதுபோது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் கழக முன்னணியினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment