Tuesday, February 20, 2018

நியூட்ரினோ எதிர்ப்பு சிறப்பு விளக்க கூட்டம்!

நியூட்ரினோ எதிர்ப்பு சிறப்பு விளக்க கூட்டம் 20-02-2018 அன்று சென்னை இம்பீரியல் ஹோட்டல் சிராஜ் அரங்கத்தில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

இதில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், வாழ்வாதாரங்களை பாதிக்கப்படும் போது தமிழனுக்கு உணர்ச்சி எழுச்சி இல்லையே என ஆதங்கப்பட்டார்.

நியூட்ரினோ மீதான தடை வாங்கினேன். சிஸ்டம் கெட்டு போயிடுச்சின்னு சொல்லிக்கிட்டு சும்மா உட்கார்ந்து இருக்க வில்லை. நானே தமிழகத்தை காப்பாற்ற வந்த ரட்சகன் என்று விளம்பர படுத்தி கொள்ளவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மாற்று அணியில் இருந்தாலும் உணர்வுடன் இந்த கூட்டத்தில் திரு. வேட்டவலம் மணிகண்டன் அவர்கள் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பேசினார் வைகோ.

பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் பேசும்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும்ம் தமிழகத்தில் வாழ்வாதார பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது என்றார்.

இமயமலையை நியூட்ரினோ திட்டத்துக்கு பயன்படுத்தி கொள்லாமே என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார் திரு.வேங்கட ராமன்.

ஏதாவது ஒரு போராட்டத்தில் நாம் வெற்றி பெற இயலும் என்றால் அது நியூட்ரினோ எதிர்ப்பு திட்டம்தான்.

அமெரிக்கா அழிவு சந்தையை முன்னெடுக்கிறது. இந்த உணர்வாளர்கள் முன்னெடுக்கும் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தில் மே 17 இயக்கம் எப்போதும் பங்கு கொள்ளும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உரை நிகழ்த்தினார்.


திரையில் நடித்து வந்தவர்கள், தெருவில் நடிக்க வருகிறார்கள். இது இந்த தமிழகத்தில் தான் நடக்கிறது என திரு.மணியரசன் வேதனை தெரிவித்தார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment