பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையின் சீதக்காதி தமிழ்ப் பேரவையும் மாணவர் பேரவையும் இணைந்து 7.8.2018 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் நடத்தும் சீதக்காதி தமிழ்ப் பேரவையின் தொடக்கவிழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “இன்பத் தமிழ்ச் சோலையில் இஸ்லாமிய இலக்கியங்கள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசுகிறார். கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துத் தலைமையுரையாற்றுகிறார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக், அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ.அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
நிகழ்ச்சியில் மாணவர் பேரவை மற்றும் தமிழ்த்துறை சார்பில் இவ்வாண்டு நடைபெற உள்ள மாணவர் வாசகர் வட்டத்தின் ஆண்டுநிகழ்வுகளையும் வைகோ தொடங்கிவைக்கிறார்.
நிகழ்ச்சிகான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறையும் மாணவர் பேரவையும் இணைந்து செய்துவருகிறது.
தகவல்: சேது முத்தையா
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment