Sunday, January 31, 2021

ஐயா சாதிக் அலி அவர்களின் நினைவேந்தலில் உணர்வுபூர்வமான உரைகள்!

ஜனவரி 13 ஆம் தேதி 2021 ஆம் வருடத்தில் ஐயா சாதிக் அலி அவர்கள் மரைவு மதிமுக இணையதள தோழர்களை வருத்தத்திற்குள்ளாக்கியது.

மதிமுக உறவுகளை குடும்பமாக நினைத்து பாசம் காட்டி பழகியவர். இயக்கம் என்பது குடும்பம் என பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில், அன்பு தலைவர் வைகோ அவர்களின் பாசப்பிணைப்பிலே மதிமுக என்ற பேரியக்கம் பாசத்தா கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பாசக்கூட்டின் பாசப்பறவை, அனைவருக்கும் ஆறுதலாக தேறுதலாக இருந்த பெரியவர் சாதிக் அலி அவர்கள் உடல்நல குறைவால் மறைந்தது தலைவர் வைகோ அவர்களை கவலையடைய செய்தது.

கழக இணையதள கண்மணிகளுக்கு பெருந்துக்க்கத்தை ஏற்படுத்தியது. அவர் காட்டிய பாசத்தை, உணர்வுகளை, அவரது சமூக செயல்களை, நினைவலைகளாக புகழ்பாட நினைவேந்தல் கூட்டம், ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை முன்னெடுப்பில் 30-01-2021 சனிக்கிழமை, இந்திய நேரப்படி மாலை 7 மணி அளவில் நடத்தப்பட்டது. நிகழ்வுகளை இணையதள பேரொளி அண்ணன் அம்மாபேட்டையார் ஒருங்கிணைத்து தந்தார்.

ஐயா சாதிக் அலி அவர்களுடனான பாச பிணைப்பை, போராட்ட குணத்தை, அவர் காட்டிய செயல் முனைப்பை, சுயமரியாதையை கலந்துகொண்ட அனைவருமே உணர்ச்சி பொங்க அவரது நினைவை போற்றி புகழஞ்சலி செலுத்தினார்கள்.

ஐயா சாதிக் அலி அவர்கள் படம் திறது மலர் தூவி, ஒளியேற்றி வைத்து அவரது பாச பிணைப்பை ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை செயலாளராக நான் புகழுரை ஆற்றினேன்.

தொடக்கத்தில் கவிதாஞ்சலி பாடிய கவிஞர் இரவிச்சந்திரன் கவிதையிலேயே அனைவரையும் உணர்ச்சி பொங்க வைத்தார். மகளிரணி செயலாளர் மருத்துவர் ரோகையா, மாவீரன் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் பேட்ரிக், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் குணா, வல்லம் பசீர் ஆகியோர் அவருடனான பாச பிணைப்பு, நற்குணம், அனைவரிடமும் பழகும் பாங்கு அரசியல் களத்தில் அவரின் நிலைப்பாடு ஆகியவற்றை உனர்ச்சி பொங்க உரை நிகழ்த்தினார்கள், நல்லு லிங்கம், சீனிவாசன், சஹூல் ஹமீது ஆகியோர் அவருடனான நினைவலைகளை பகிர்ந்துகொண்டனர். 

ஐயா சாதிக் அலி அவர்கள் மகன் நினைவேந்தலின் இறுதியில் உணர்ச்சி பொங்க தந்தையிடம் மதிமுக இவ்வளவு பாசமாக இருக்கிறதே என்ற நெகிழ்ந்து பேசி நன்றி தெரிவித்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருக்கும் வரை இணையதளத்தில் ஐயா சாதிக் அலி அவர்களது புகழ் நிலைத்திருக்கும். ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் புகழஞ்சலி.

ஐயா சாதிக் அலி அவர்களின் இணைய வழி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய, புகழஞ்சலி செலுத்திய அனைத்து உறவுகளுக்கும் ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

ஐயா சாதிக் அலி அவர்களின் நினைவேந்தல் கூட்ட நேரலை காணொளி!

மறைந்த அமரர் ஐயா சாதிக் அலி அவர்கள் நினைவேந்தல் கூட்டம் 30-01-2021 ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை முன்னெடுப்பில்நடந்தது.


நிகழ்வின் காணொலி கூட்டம் நேரலையில் நினைவேந்தலில் புகழஞ்சலி உரை கீழே உள்ள லிங் மூலம் காணலாம். 


https://www.facebook.com/kdmichealselvakumar/posts/3943284879017207

Saturday, January 30, 2021

மக்கள் சேவையாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க! வைகோ வலியுறுத்தல்!

ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத் தன்மையுடன் தாய்க்கு நிகரான பரிவுடனும், மனிதநேயத்துடனும் மகத்தான சேவையாற்றி வருபவர்கள் செவிலியர்கள்.

கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிர்களைப் பொருட்படுத்தாமலும், தங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்காமலும் மக்களின் உயிர் காக்கும் பணியில் தங்களை ஈடுபத்திக் கொண்டவர்கள் செவிலியர்கள்.
மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், படிகள் வழங்க வேண்டும். கொரோனாவால் இறந்த செவிலியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் பதினான்காயிரம் செவிலியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் போதுமான மருத்துவர்கள், செவலியர்கள் மருத்துவ உதவியாளர்களை நியமித்து மக்களைப் பாதுகாப்பது மத்திய மாநில அரசுகளின் கடமை. உலக நல்வாழ்வு நிறுவனம் (WHO) மற்றும் இந்திய செவிலியர் ஆணையம் (INC) வழிகாட்டுதலின் அடிப்படையில், அனைத்து அரசு பொது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர், மூன்று குழந்தை நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், சாதாரண ஐந்து நோயளிகளுக்கு ஒரு செவிலியர் என்று நியமிக்கப்பட வேண்டும்.
செவிலியர்களின் நீண்ட நெடிய உறுதியான போராட்டத்தின் காரணமாக 2015ம் ஆண்டு தமிழக அரசு அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களைத் தேர்வு செய்து, செவிலிய காலி பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையம் (MRB) உருவாக்கி, 7,700 செவிலியர் பணிகளுக்கு தேர்வு நடத்தியது. 45,000 பேர் பங்கேற்று, 19,000 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 7,700 பேருக்கு பணி ஆணை வழங்கி, நாள் ஒன்றுக்கு 256 ரூபாய் குறைந்த அளவு ஊதியம், 2 ஆண்டுகள் கழித்து பணி நிரந்தரம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதற்குப் பின் 3,300 செவிலியர்களைப் பணியில் அமர்த்தி 11,000 பேராக ஆன நிலையில், இரண்டு ஆண்டுகள் கடந்தும் பணி நிரந்தரமும், ஊதிய உயர்வும், பணி கால நேரமும் வரையறுக்கப்படாமல் செவிலியர்கள் ஏமாற்றப்பட்டதாக 2017 ஆம் ஆண்டு சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.
கொரோனா பேரிடர் காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகிறார்கள். அவர்களின் சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
செவிலியர் கேட்பது பிச்சை அல்ல அவர்களின் உரிமை. செவிலியர்களுகடைய பிரச்சினையைக் கனிவோடு பரிசிலனை செய்து தீர்வு காண வேண்டும்.
பெருகி வரும் விலைவாசி உயர்வு, குடும்பத்தில் வறுமை என்று பெரும்பான்மையான செவிலியர்கள் பாதி வயது கடந்தவர்களாக வாழ்வோடு போராடி கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்து, ஊதிய உயர்வை முறையாக வழங்க ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
30.01.2021

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், உழவன் மகன் என நடிக்கக் கூடாது! வைகோ அறிக்கை!

உயர்மின் கோபுர திட்டங்களால் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும், வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், விவசாயிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், உயர்மின் கோபுரத்திற்குப் பதிலாக சாலை ஓரமாகக் கேபிள் அமைத்து, மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகள், அறவழியில் போராடி வருகின்றார்கள்.

சென்னை போன்ற மாநகரங்கள், மதுரையில் இருந்து-இலங்கை , கொச்சி மற்றும் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டிக்கு, கேபிள் அமைத்து மின்சாரத்தைக் கொண்டு செல்லும் மத்திய, மாநில அரசுகள், கிராமங்களில் மட்டும் விளைநிலங்களுக்கு நடுவே உயர்மின் கோபுரங்களை அமைத்து, நிலங்களைக் கையகப்படுத்தி, விவசாயிகளின் வாழ்வு ஆதாரத்தைப் பறிக்கின்றன. நிலத்தைக் கையகப்படுத்தியதற்காக, விவசாயிகளுக்கு உரிய இழப்பு ஈடும் தரவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாத வாடகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை.

2019 ஆம் ஆண்டு, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று நான் பார்வையிட்டபோது, விவசாயிகளின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அறிந்தேன்.

04.01.2019 அன்று, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள், தமிழக சட்டசபையில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு கோடி ரூபாய் இழப்பு ஈடு என அறிவித்தார். ஆனால், அதை இன்றுவரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
அரசுகள் மேற்கொள்கின்ற அனைத்து வகை திட்டங்களாலும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, 100 சதவீத கருணைத் தொகை வழங்கப்படுகின்றது. ஆனால், உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மட்டும் வழங்குவது இல்லை. பாதிக்கப்பட்ட கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், வீடுகளுக்கும் இழப்பு ஈடு தரவில்லை.

தற்போது தமிழக அரசு விருதுநகரில் இருந்து திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வரை, 765 கிலோவாட் உயர் மின் கோபுரம் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. திட்டப்பணிகள் 10 சதவீதம் மட்டுமே முடிந்து இருக்கின்றது. மின்சார நிலையங்கள் ஆயத்தம் ஆகவில்லை; துணைமின் நிலையப் பணிகள் தொடங்கப்படவே இல்லை.

உயர்மின் கோபுரங்கள் திட்டங்களை அமைப்பதற்காக அதிகாரம் அளித்துள்ள, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட, கருத்து உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ள, இந்திய தந்தி சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், அந்தச் சட்டத்தின் அடிப்படையில் செயல்படும் மேற்கண்ட திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், விவசாயிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை தமிழக அரசு நடத்தவில்லை.

கடந்த ஜனவரி 4ஆம் தேதி, பள்ளிபாளையத்தில் உள்ள பயணியர் விடுதியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்களைச் சந்தித்து திட்டப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தபோது, அதை ஏற்றுக்கொண்டு, உடனடியாக நிறுத்துகிறேன் என்று அறிவித்தார். ஆனால், தொடர்ந்து திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள், அமைச்சர் அளித்த வாக்குறுதியை நினைவூட்டி, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் படியூர், பெல்லம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயம் என்பதைத் தமிழகம் அறியும்.

கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை; ஆனால், தேர்தலுக்காக, நான் உழவன் மகன் என எடப்பாடி நடிப்பதை விவசாயிகள் நம்ப மாட்டார்கள்.

எனவே, உயர் மின் கோபுரங்கள் பிரச்சினையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
30.01.2021

Oman MDMK is inviting ஐயா சாதிக் அலி நினைவேந்தல் கூட்டம்

 Oman MDMK is inviting you to a scheduled Zoom meeting.

Topic: ஐயா சாதிக் அலி நினைவேந்தல் கூட்டம்!
Time: Jan 30, 2021 07:00 PM Mumbai, Kolkata, New Delhi
Meeting ID: 854 4352 7135
Passcode: mdmkoman

குடும்ப பாசம் பாராட்டிய ஐயா சாதிக் அலி நினைவேந்தல்!

மதிமுக இணையதள உறவுகளிடம் குடும்ப பாசம் பாராட்டிய ஐயா சாதிக் அலி அவர்கள் நினைவேந்தல் நிகழ்வில் இன்று 30-01-2021 இந்திய நேரப்படி மாலை 7 மணி அளவில் zoom செயலி மூலம் கலந்துகொண்டு அவரது நினைவை போற்றி புகழஞ்சலி செலுத்த வாரீர்

Zoom ID : 85443527135
Password: mdmkoman

Friday, January 29, 2021

முத்துகுமார் நினைவு நாளில் குளத்தூரில் வைகோ எம்பி மலரஞ்சலி?

முத்துகுமாரின் 12 ஆம் நினைவு நாளில் சென்னை குளத்தூரில் இன்று 29-01-2021 அன்று முத்துகுமார் சதுக்கத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் முத்துகுமார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி முழக்கங்களை எழுப்பினார்.

இந்த நிகழ்வில் முத்துகுமார் குடும்பத்தினரும் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


மெரினா கடற்கரையில் நம்ம CHENNAIஅடையாளச் சிற்பமா? தமிழை அவமதிக்கும் சின்னமா?

மொழிக் கலப்பை ஊக்கப்படுத்தும் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை மெரினா கடற்கரையில், மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள, நம்ம CHENNAI என்ற அடையாளச் சின்னத்தை நேற்று தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

இது அடையாளச் சின்னமாகத் தெரியவில்லை. மாறாக, நம் தாய்த் தமிழ் மொழியை அவமதிக்கும் சின்னமாக உள்ளது.

சென்னை சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரையில் ரூ. 24 லட்சம் செலவில் ராணி மேரி கல்லூரி அருகில், சென்னையின் பெருமை, மாண்பை கொண்டாடும் விதத்திலும், பொதுமக்கள் தாங்களே சுய புகைப்படம் (செல்~ பி) எடுத்து, சென்னை மாநகரத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்திடவும் இந்தச் சிற்பத்தை அமைத்ததாகக் கூறப்படுகின்றது.

இனி சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக திகழும்.

உலகின் பல நாடுகளிலும், டெல்லி, ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள சிற்பங்களின் தொடர்ச்சியாகவும், இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் பெருமை பேசுகின்றது.

பேரறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது, இதே சென்னை கடற்கரையில், தமிழுக்குத் தொண்டு ஆற்றிய திருவள்ளுவர், ஒளவையார், வீரமா முனிவர், பாரதி, பாரதிதாசன் என தமிழ்ப் புலவர்களுக்கு சிலை அமைத்துத் திறந்தார்.

அதேபோல, முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவள்ளுவருக்கு அமைத்த கோட்டம் செம்மாந்து நிற்கின்றது.

நாகரிக வளர்ச்சியில் உலகத்தோடு ஒத்துப் போக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக மொழிக் கலப்புக்கு அரசு துணை போகக் கூடாது. தமிங்கில மொழியில் எழுதக்கூடாது.

தமிழ் வளர்ச்சித் துறை என்ற துறையை உருவாக்கி, ஒரு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நம் மாநிலத்தில் இப்படி தமிழைச் சிதைக்கும் பணிகளில் ஈடுபடக்கூடாது. 

ஒரு புறம் மத்திய அரசால் புகுத்தப்படும் இந்தித் திணிப்பு, மறுபுறம் தமிழக அரசின் மொழிச் சிதைப்பு வேதனை அளிக்கின்றது.

தில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தியில், தமிழ் மொழியை முற்றிலும் புறக்கணித்து, இந்தியில் மட்டுமே எழுதி இருந்தார்கள்.

இன்றைய இளைஞர்கள், தமிழ் மொழி மீது உள்ள வேட்கையால் தாங்கள் அணிகின்ற பனியனில் ‘ழ’ என்று வள்ளுவர், பாரதி படங்களையும் நாகரிக வண்ணத்தில் அச்சிட்டு அணிவதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.

எந்த ஒரு மொழியும் அழிந்துவிடக் கூடாது. அவரவர் தாய்மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன் என்கிற உணர்வில், இதுபோன்ற பிறமொழிக் கலப்பில் தமிழக அரசு ஈடுபடுவதைக் கண்டிக்கின்றேன்.

உலகத்தின் இணைப்பு மொழி தான் ஆங்கிலமே தவிர, தமிழ் மொழியுடன் கலப்பில் பிணையும் மொழி அல்ல என்பதை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உணர வேண்டும்.

சென்னையின் அடையாளமாகத் திகழும், நம்ம CHENNAI சிற்பத்தில், ‘நம்ம சென்னை' என தமிழில் முதலிலும், அடுத்து, CHENNAI - TAMILNADU என ஆங்கிலத்திலும் மாற்றி அமைத்திட  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ,
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக.,
"தாயகம்"
சென்னை-8.
29.01.2021.

இணையவழி நினைவேந்தலில் zoom I'd மூலமாக இணைந்திடுவீர்!

மறைந்த ஐயா சாதிக் அலி அவர்கள் நினைவேந்தல் 30-01-2021 நிகழ்வில் கழக உறவுகள் கலந்துகொண்டு புகழஞ்சலி‌செலுத்த வேண்டுகிறோம்.

இணையவழி நினைவேந்தலில் zoom I'd மூலமாக இணைந்திடுவீர்

Thursday, January 28, 2021

ஐயா சாதிக் அலி நினைவேந்தல்!

மதிமுக இணையதளத்தில் இளைஞனை போல கழக ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் ஏனைய சுப நிகழ்வுகள் என அனைத்திலும் கழகம் சார்ந்த அனைத்து நிகழ்விலும் கலந்துகொண்டு இணையதளத்தில் ஏவுகணையாக திகழ்ந்து, அன்பு தலைவர் வைகோ அவர்களையும்,

கழகத்தையும், கழக கண்மணிகளையும் உறவுகளாக நினைத்து அன்பு பாராட்டிய இணையதள பெரியவர் ஐயா சாதிக் அலி அவர்கள் 13-01-2021 அன்று இவ்வுலக விட்டு பிரிந்தார் என்ற செய்தி மதிமுக உறவுகளுக்கு பேரிழப்பாகும்.

அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக ஓமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் மென்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்விற்கு மதிமுக தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்த அன்புடன் வேண்டுகிறேன்.
இந்த நிகழ்வில் கழகத் துணைப் பொதுசெயலாளர் மல்லை சத்யா, மாநில மகளிரணி செயலாளர் Dr.ரொகையா, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி,
இராமனாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளரும், தற்போதைய உயர் நிலைக்குழு உறுப்பினருமான கே.ஏ.எம் குணா, இராமனாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் பேட்ரிக் வளைகுடா மதிமுக அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வல்லம் பசீர், ஸ்டாலின் பீட்டர் பாபு ஆகியோர் புகழஞ்சலி உரை நிகழ்த்துகிறார்கள்.
நாள் : 30-01-2021 சனிக்கிழமை
நேரம் : மாலை 7 மணி - இந்திய நேரம்
Zoom ID : 854 4352 7135
Password : mdmkoman
ஒருங்கிணைத்து தரும் அண்ணன்
Ammapet G Karunakaran
அவர்களுக்கு நன்றி...
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, January 26, 2021

டெல்லியில்: அறவழி விவசாயப் புரட்சி! காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம்!

தலைநகர் டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 62 நாட்களாக நியாயமான கோரிக்கைகளுக்காக வாட்டி வதைக்கும் உறை பனியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகில் எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட போராட்டம் நடந்தது இல்லை.

கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்காக நரேந்திர மோடி அரசு, மூன்று விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்தது. நாடெங்கும் கோடானு கோடி விவசாயிகள் இதனை எதிர்த்தனர். தான் என்கின்ற ஆணவமும், அகந்தையும், அதிகார போதையும் கொண்டு, சட்டங்களை இரத்துச் செய்ய முடியாது என்று நரேந்திர மோடி அரசு தான்தோன்றித்தனமாக நடந்து வருகின்றது.

உச்சநீதிமன்றமே விவசாயிகளின் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கைக் கைவிட வேண்டும் என்று கூறியது. விவசாயிகள் போராட்டத்தைத் தடை செய்ய முடியாது என்றும் அறிவித்தது.

மக்கள் கிளர்ச்சி புரட்சிப் பெருவெள்ளமாக மாறும். காவல்துறை, இராணுவத்தைக் கொண்டு அடக்க முடியாது. இரண்டு இலட்சம் டிராக்டர்களில் டெல்லியில் விவசாயிகள் குவிந்துள்ளனர். 62 நாட்களாக துளியளவும் வன்முறைக்கு இடம் கொடுக்காமல், விவசாயிகள் அமைதி வழிப் போராட்டமே நடத்தினர். காவல்துறையே கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது. இது பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்து காவல்துறை கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும்.

குடியரசு தினமான இன்று விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சை மத்திய அரசு நடத்தி இருக்கிறது. இந்த அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன். மக்கள் கிளர்ச்சி எரிமலையாக வெடிக்கும் என்பதை உணர்ந்து, கேடுகெட்ட மூன்று விவசாயச் சட்டங்களையும் மோடி அரசு இரத்துச் செய்ய வேண்டும்.

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்து, அடக்குமுறையின் மூலம் விவசாயிகளை ஒடுக்கிவிடலாம் என்று கருதினால் விபரீத முடிவே ஏற்படும். அதற்கு மத்திய அரசே முழுப் பொறுப்பு ஆகும்.

வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

26.01.2021

Monday, January 25, 2021

தமிழ்படை உருவாகும். ஆர்ப்பாட்டத்தில் வைகோ எம்பி மத்திய அரசுக்கு எச்சரிக்கை!

கோத்தபய அரசோடு கூடி குலவி கொஞ்சி மகிழும், மோடி அரசே, தமிழர்கள் இந்திய பிரஜை இல்லையா?

2 லட்சம் தமிழர்களை கொன்றழித்த சிங்கள அரசு, 800 தமிழக மீனவர்களை கொன்றழித்து கொடமடிக்குது சிங்கள் அரசு.

இந்திய கடற்படை எங்கள் வரிப்பணத்தில் இருப்பதல்லவா?

எங்கள் மீனவர்களை எங்கள் தமிழர்களை காக்காத இந்திய கடற்படை எங்களுக்கு எதற்கு?

உங்கள் படை இல்லையென்றால் தமிழ்நாடு தயாராகும், தனிப்படை உருவாகும், மானப்படை உருவாகும்.

இந்திய அரசே மோடி அரசே சூடு சொரணை மானம் இருந்தால் சிங்கள அரசை எச்சரிக்கை செய்.

சிங்கள கொலைகாரனை கூண்டில் நிறுத்து.

ஆர்ப்பாட்டத்தில் வைகோ எம்பி மத்திய அரசுக்கு எச்சரிக்கை.

நான்கு தமிழக மீனவர்களை கொன்ற சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து மதிமுக மற்றும் அனைத்து கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம்!

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கடலில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர்கள் மாண்டனர். இதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக தலைமையில் அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம் இன்று 25-01-2021 நடைபெறுகிறது.