Wednesday, January 13, 2021

இராமநாதபுரம் மாவட்ட அவைத் தலைவர் சாதிக்அலி மறைவு! வைகோ இரங்கல்!

இராமநாதபுரம் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர், தியாக மாமணி கண்ணியத்திற்குரிய சாதிக்அலி அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் என்னைத் தாக்கியது. கழகம் உதயமான நாளில் இருந்து அந்த மாவட்டக் கழகத்தின் தூணாக இருந்தார். நான் பங்கேற்ற போராட்டங்கள் அனைத்திலும் அவர் பங்கேற்றார்.

என் மீது அவர் கொண்டிருந்த அன்பும் பாசமும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவர் உடல்நலம் குறைந்தார் என்று அறிந்தவுடன், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். ஆறு நாட்களுக்கு முன்னர் சாதிக்அலி அவர்களிடம் அலைபேசியில் பேசினேன். அப்பொழுதும் அவர் பாசத்தைப் பொழிந்தார்.
அவரது மறைவு அந்தக் குடும்பத்திற்குப் பேரிழப்பு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. எனக்குத் தனிப்பட்ட முறையில் தாங்க முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவினால் கண்ணீரில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், கழகக் கண்மணிகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.01.2021

No comments:

Post a Comment