Sunday, January 31, 2021

ஐயா சாதிக் அலி அவர்களின் நினைவேந்தலில் உணர்வுபூர்வமான உரைகள்!

ஜனவரி 13 ஆம் தேதி 2021 ஆம் வருடத்தில் ஐயா சாதிக் அலி அவர்கள் மரைவு மதிமுக இணையதள தோழர்களை வருத்தத்திற்குள்ளாக்கியது.

மதிமுக உறவுகளை குடும்பமாக நினைத்து பாசம் காட்டி பழகியவர். இயக்கம் என்பது குடும்பம் என பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில், அன்பு தலைவர் வைகோ அவர்களின் பாசப்பிணைப்பிலே மதிமுக என்ற பேரியக்கம் பாசத்தா கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பாசக்கூட்டின் பாசப்பறவை, அனைவருக்கும் ஆறுதலாக தேறுதலாக இருந்த பெரியவர் சாதிக் அலி அவர்கள் உடல்நல குறைவால் மறைந்தது தலைவர் வைகோ அவர்களை கவலையடைய செய்தது.

கழக இணையதள கண்மணிகளுக்கு பெருந்துக்க்கத்தை ஏற்படுத்தியது. அவர் காட்டிய பாசத்தை, உணர்வுகளை, அவரது சமூக செயல்களை, நினைவலைகளாக புகழ்பாட நினைவேந்தல் கூட்டம், ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை முன்னெடுப்பில் 30-01-2021 சனிக்கிழமை, இந்திய நேரப்படி மாலை 7 மணி அளவில் நடத்தப்பட்டது. நிகழ்வுகளை இணையதள பேரொளி அண்ணன் அம்மாபேட்டையார் ஒருங்கிணைத்து தந்தார்.

ஐயா சாதிக் அலி அவர்களுடனான பாச பிணைப்பை, போராட்ட குணத்தை, அவர் காட்டிய செயல் முனைப்பை, சுயமரியாதையை கலந்துகொண்ட அனைவருமே உணர்ச்சி பொங்க அவரது நினைவை போற்றி புகழஞ்சலி செலுத்தினார்கள்.

ஐயா சாதிக் அலி அவர்கள் படம் திறது மலர் தூவி, ஒளியேற்றி வைத்து அவரது பாச பிணைப்பை ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை செயலாளராக நான் புகழுரை ஆற்றினேன்.

தொடக்கத்தில் கவிதாஞ்சலி பாடிய கவிஞர் இரவிச்சந்திரன் கவிதையிலேயே அனைவரையும் உணர்ச்சி பொங்க வைத்தார். மகளிரணி செயலாளர் மருத்துவர் ரோகையா, மாவீரன் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் பேட்ரிக், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் குணா, வல்லம் பசீர் ஆகியோர் அவருடனான பாச பிணைப்பு, நற்குணம், அனைவரிடமும் பழகும் பாங்கு அரசியல் களத்தில் அவரின் நிலைப்பாடு ஆகியவற்றை உனர்ச்சி பொங்க உரை நிகழ்த்தினார்கள், நல்லு லிங்கம், சீனிவாசன், சஹூல் ஹமீது ஆகியோர் அவருடனான நினைவலைகளை பகிர்ந்துகொண்டனர். 

ஐயா சாதிக் அலி அவர்கள் மகன் நினைவேந்தலின் இறுதியில் உணர்ச்சி பொங்க தந்தையிடம் மதிமுக இவ்வளவு பாசமாக இருக்கிறதே என்ற நெகிழ்ந்து பேசி நன்றி தெரிவித்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருக்கும் வரை இணையதளத்தில் ஐயா சாதிக் அலி அவர்களது புகழ் நிலைத்திருக்கும். ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் புகழஞ்சலி.

ஐயா சாதிக் அலி அவர்களின் இணைய வழி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய, புகழஞ்சலி செலுத்திய அனைத்து உறவுகளுக்கும் ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment